அடுத்தவர் கஷ்டம்-Father and Son Kids Story-ஒரு நகரத்துல இருந்த விடுதிக்கு ஒரு அப்பாவும் பையனும் தங்குறதுக்கு போயிருந்தாங்க ,அங்க இருக்குற சாப்பிட்டு விடுதியில ரெண்டுபேரும் சாப்டுகிட்டு இருந்தாங்க
அந்த பையன் மட்டும் ரொம்ப சோகமாவே இருந்தான் ,இத பத்த விடுதி காப்பாளர் தன்னோட வேலையாட்களை கூப்பிட்டு அவங்களுக்கு எதுவும் வசதி குறைவு இருக்கானு கேக்க சொன்னாரு.
அந்த அப்பா ஒரு குறையும் இல்லைனு சொல்லி அனுப்பிச்சிட்டாரு ,கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா காப்பாளர்கிட்ட வந்த அந்த அப்பா ,என்னுடைய மகனுக்கு மிகப்பெரிய கொடிய நோய் வந்திருக்கு நாளைக்கு அவனுக்கு மொட்டை அடிக்க வேண்டியதா இருக்கு
அதனால அவன் சோகமா இருக்கான் ,நீங்க யாரும் அவன பாத்து பரிதாப படவோ ,என்ன எதுன்னு கேட்காமலும் இருக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டாரு.
மறுநாள் காலைல மொட்டை அடிச்சிட்டு சாப்பிடறதுக்கு விடுதிக்கு வந்தாங்க அப்பாவும் மகனும் ,அங்க வந்ததுக்கு அப்புறமா அந்த அப்பா கவனிச்சாறு ,அங்க இருக்குற எல்லாரும் தங்களுடைய தலையை மொட்டை அடிச்சி இருந்தாங்க.
இத பாத்த அவருக்கு ஒரே நெகிழ்ச்சியா போய்டுச்சு .அதுவரைக்கும் சோகமா இருந்த அந்த பையன் தன்னை ஊக்குவிக்க யாருன்னே தெரியாத இத்தனை பேர் மொட்டை அடிச்சத பார்த்து உற்சாகம் ஆகிட்டான்
தனக்கு வந்த நோய் மற்றும் அதுக்கான சிகிச்சையை நான் நம்பிக்கையோட எதிர்கொள்வேன்னு அங்க இருக்குற எல்லார்கிட்டயும் சொல்லி அவுங்களோட ஆதரவோட ஆசீர்வாதத்தையும் பெற்றான்.
முன் பின் தெரியாத மூன்றாம் நபர்கள் அனைவரது வேண்டுதலாலயும் ஆசியினாலும் ,அந்த பையன் தன்னோட நோயை வென்று ரொம்பநாள் புகழோடு வாழ்ந்தான்