தைரிய சாலியின் குடிசை-The Palace and The Hut:- ஒரு ஊருல ஒரு பேரரசர் இருந்தாரு ,அவர் ஒரு அழகான தோட்டத்த பராமரிச்சிட்டு வந்தாரு ,அந்த தோட்டம் மிக பெருசாவும் ,உலகத்துல இருக்குற எல்லா மலர்களாலவும் நிறைஞ்சு இருந்துச்சு ,
அந்த தோட்டத்தோட அழகை ரசிக்கிறதே அரசருக்கு மிக பெரிய ஆறுதலா இருந்துச்சு ,வெளிநாட்டுல இருந்து யார் வந்தாலும் அவுங்கள அந்த தோட்டத்துக்கு கூட்டிட்டு வந்து சுத்திக்காட்டுறது அவரோட பொழுதுபோக்கா இருந்துச்சு
தோட்டத்த சுத்திப்பாத்த வெளிநாட்டு அரசர்களும் ,சிற்றரசர்களும் அரசரை பாராட்டுவாங்க ,ஆனா ஒரு இடத்துக்கு வர்றப்ப மட்டும் அங்க இருக்குற ஒரு பழைய ஓலை குடிசையை பாத்து குழம்புவாங்க ,
இது என்ன எல்லா இடத்தையும் அழகான பூ செடிகளை வைத்து அலங்கரிச்ச அரசர் இந்த குடிசையை மட்டும் ஏன் இங்க வச்சிருக்காருன்னு எல்லாரும் யோசிப்பாங்க ,ஆனா அரசரை கேக்க தைரியம் இல்லாம எல்லாரும் அமைதியா இருந்துருவாங்க
அப்பத்தான் பக்கத்து தேசத்தோட அரசர் ஒருத்தர் அந்த தோட்டத்தை சுத்திப்பாக்க வந்தாரு ,வழக்கம்போல அரசரும் அவருக்கு சுத்திக்காட்ட கூடவே வந்தாரு ,
அந்த குடிசையை பாத்த அவர் ,கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு இது எதுக்கு அரசரே இந்த குடிசை இங்க இருக்குன்னு கேட்டாரு
ராஜா சிரிச்சிகிட்டே இது உன்னை போல ஒரு தைரியசாலியோட குடிசை ,என்னோட படை பலத்துக்கு பயந்து இந்த குடிசையை பத்தி யாரும் இதுவரை கேட்டது இல்லை ,
நீங்க ஒருத்தர்தான் தைரியத்தோடு கேட்டிருக்கீங்க ,அதுமாதிரிதான் ,இந்த தோட்டம் வடிவமைக்க ஆரம்பிச்சப்ப இந்த இடத்துல இருந்த குடிசையை காலிபண்ண உத்தரவிட்டேன் ,ஆனா அங்க இருந்த பாட்டி இது தன்னோட பரம்பரை சொத்து இத காலிசெய்ய முடியாதுன்னு தைரியமா சொன்னாங்க
கொஞ்ச காலத்துலயே அவுங்க இறந்தும் போய்ட்டாங்க ,நான் நினச்சா இந்த குடிசையை அழிச்சிருக்கலாம் ,ஆனா தைரியசாலிகலை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலதான் இந்த குடிசயை அப்படியே வச்சிருக்கேன்னு சொன்னாரு