தன்னம்பிக்கையும் பயமும்-The Feared Boy Story in Tamil:-ஒரு பையன் ஒருத்தன் காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தான்,அப்ப அவனுக்கு ரொம்ப பசிச்சது
சாப்பிட எதாவது கிடைக்குமான்னு தேடிப்பத்த அவனுக்கு ஒண்ணுமே கிடைக்கல ,உணவு தேடி ரொம்ப தூரம் நடந்ததும் அப்புறம் ஒரு இடத்துல ஒரு மாம்பழ மரம் இருந்துச்சு
உடனே அதுமேல ஏறி பழங்கள பிடிங்கி திங்க ஆரம்பிச்சான் அந்த பையன் ,அந்த மாம்பழங்கள் நல்லா பழுக்காததாள புளிப்பா இருந்துச்சு ,அப்பத்தான் நல்லா பழுத்த மாம்பழங்கள் உச்சி கிளைல இருக்குறத பாத்தான் அந்த பையன்.
உடனே நல்லா முயற்சி செஞ்சு இன்னும் மேல ஏறுனான் அவன் ,திடீர்னு அந்த கொப்பு உடைஞ்சிடுச்சு உடனே கீழ விழ ஆரம்பிச்சான் அந்த இளைஞன் ,
அப்ப இன்னொரு கிளைய பிடிச்சி தப்பிச்ச அவன் ரொம்ப பயந்து போய்ட்டான்.
கீழ குனிஞ்சு பாத்தா அங்க கால்வைக்க இடமே இல்லை ,தான் அந்தரத்துல தொங்குறத நினச்சு ரொம்ப பயந்து போன அந்த பையன் உதவு உதவினு காடு முழுசும் கேக்குற மாதிரி கத்துதுனான்
ரொம்ப நேரம் ஆகியும் யாரும் உதவிக்கு வரல ,அப்ப அவனோட கை வேர்த்து பிடி நழுவ ஆரம்பிச்சது ,அப்ப அங்க வந்த தாத்தா ஒருத்தர் ஒரு சின்ன கல்ல எடுத்து அவன்மேல வீசி அடிச்சாரு
உதவி கேட்டு தொங்கிகிட்டு இருக்குற என்மேல அவரு எதுக்கு கல்லால அடிக்கிறாருனு கோபப்பட்டான் அந்த பையன் ,எதுக்கு தாத்தா கல்லால அடிக்கிறீங்கன்னு கேட்டான்.
எதுவும் சொல்லாம இன்னொரு கல்ல எடுத்து அவன் மேல போட்டாரு அந்த தாத்தா ,இப்ப இன்னும்கொஞ்சம் கோபமான அந்த பையன் தன்னோட பிடியை தளர்த்தி இன்னொரு கிளையையும் சேத்து பிடிச்சிக்கிட்டு அவரை பாத்து கத்துனான்
அப்ப இன்னொரு கல்ல எடுத்து அவன் மேல அடிச்சாரு தாத்தா ,இப்ப ரொம்ப கோபமான அந்த பையன் தைரியத்தோடு கீழ குதிச்சி அவர்கிட்ட வந்தான்
உதவின்னு கேட்டு தொங்கிகிட்டு இருந்த என்ன எதுக்கு கல்லால அடிச்சீங்கன்னு கேட்டான் அந்த பையன் ,தாத்தா சிரிச்சிகிட்டே சொன்னாரு
முதல்ல உன்ன பாத்தப்ப நீ ரொம்ப பயத்துல இருந்த உன் பிரச்னையை நீ புரிஞ்சிக்க கூட முடியாம இருந்த ,ஒரு கல்ல உன்மேல போட்டதும் உன்னோட பயம் போய் கோபம் வந்தது ,
அடுத்த கல்ல போட்டதும் கோபத்துல என்ன அடிக்க வந்த நீ அதுக்கு இடையூரா இருந்த இந்த பள்ளத்தை பத்தி கவல படாம மேல இருந்து தைரியமா குதிச்ச
பயத்தினால உன்னோட பிரச்சனய உன்னால போக்க முடியாது ,உனக்கு தைரியம் வரவழைக்கத்தான் ,உன்ன கோபப்படுத்தினேனு சொன்னாரு அந்த தாத்தா
அவரு சொன்னது உண்மைன்னு புரிச்சிக்கிட்ட அந்த பையன் அவர்கிட்ட மன்னிப்பும் ,நன்றியும் சொன்னான்
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
வையத்தின்வானம் நணிய துடைத்து
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்