Global Warming Essay in Tamil – புவி வெப்பமயமாதல் கட்டுரை

Global Warming Essay in Tamil – புவி வெப்பமயமாதல் கட்டுரை:- புவி வெப்பமயமாதல் இந்த  பதத்தை நம் அனைவரும் இந்த அறிவியல் உலகத்தில் அடிக்கடி கேட்டுவந்துள்ளோம் . இயற்கை மற்றும் செயற்கை காரணிகளால் நாம் வசிக்கும் உலகமாகிய இந்த பூமியில் வெப்பம் அதிகரிப்பதை இது குறிக்கிறது. புவி வெப்பமயமாதல் எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் மனித வாழ்வாதாரமும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் இதன் காரணமாக பனிமலை உருக்கம் முறையற்ற மழை பொழிவு அதிகப்படியான மழைப்பொழிவு போன்ற இயற்கைக்கு முரணான நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன. மனிதனின் சிறு முயற்சியே எத்தகைய தாக்கங்களை குறைக்கும் என்பதில் ஐயமில்லை வெப்பமயமாதல் அதற்கான காரணிகளும் அதற்கான தீர்வுகளையும் பற்றி இந்தக் கட்டுரையில் நான் காணலாம்

grayscale photography of a factory
Photo by Karl Gerber on Pexels.com

புவி வெப்பமயமாதல் விளைவுகள்

கிரீன் ஹவுஸ் காயத்தில் என்று சொல்லப்படும் வாயுக்கள் புவியை விட்டு  வெளியேறுவது தடுக்கப்படுகிறது இதன் காரணமாக புவியின் இயற்கை உபாதைகள் அதிகம் ஏற்படுகின்றன

 புவியின் அண்டார்டிகா போன்ற குளிர் பிரதேசங்களில் உள்ள பனிமலைகள் தொடர்ந்து உரிய வண்ணம் உள்ளன இதன் காரணமாக கடலில் கலக்கும் நன்னீரின் அளவு அதிகமாகிறது இதன் விளைவாக பூமிதன் காந்த சக்தியில் கூட மாற்றம் ஏற்படலாம் என்று அறிவியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்

 தொடர் பனிமலை உருகுவதால் கடல் மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது

 தொடர் வெப்பமயமாதல் காரணமாக பல்லாண்டு காலம் அமைதியாக இருந்த எரிமலைகள் தற்போது சீரும் எரிமலை பட்டியலில் இடம் பெறுகின்றன

 காரணிகள்

 மனித அறிவியல் வளர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான திரவ எரிபொருள் பயன்பாடு இதற்கு முக்கிய காரணமாகும் அதிக வாகன பயன்பாடும் கட்டுக்கடங்காத தொழிற்சாலை வசதிகளும் புவிக்கு ஊறு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுகின்றன இதன் காரணமாகவே காற்றில் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் கிரீன்ஹவுஸ் வாய்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன

 சுற்றுச்சூழல் மீது அக்கறை இல்லாத மனிதனே இவ்வகை இயற்கை உபாதைகளுக்கு காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்

 புவி வெப்பமயமாதல் தீர்வுகள்

 புவி வெப்பமயமாதலுக்கு தீர்வுகள் நாம் இன்று தொடங்கியிருக்க வேண்டும் இருந்தபோதிலும் தற்போது தொடங்குவதை உசிதமான ஒன்றாகும்

 உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு முக்கிய கட்டுப்பாட்டு நிகழ்வு புவி வெப்பமயமாதலை பொறுத்தே  அமைய வேண்டும்

 அதிகப்படியான வாகன பயன்பாட்டை குறைக்கும் மனிதன் எடுக்கும் சிறு முயற்சிகள் கூட நம் இயற்கையை காப்பாற்ற எடுக்கப்படும் நல்ல முயற்சியாக அமையும்

 தொடர் ஆராய்ச்சிகள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அல்லது சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத தொழிற்சாலைகளை அமைப்பதில் உலக நாடுகள் தங்கள் பங்கு வெளிப்படுத்த வேண்டும்

 புதிதாக உருவாகும் விளைவுகளை தடுக்கவே இதுபோன்ற செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன ஆனால் மனித கலாச்சாரத்தின் மூலமாக ஏற்கனவே பாதிப்படைந்த பாதிப்புகளை சரிசெய்ய அதிகப்படியான மரம் நடுதல் மட்டுமே ஒரே தீர்வாகும் இருந்தபோதிலும் தொடர்ந்து மரங்களை வெட்டும் பழக்கம் இன்னும் குறைந்தபாடில்லை பூமியின் நன்னீர்  அளவுகளையும் நல்ல காற்றையும் சமநிலையில் வைத்துக்கொள்ள அதிகப்படியான மரம் நடுவது தற்போதைக்கு சிறந்த முயற்சியாக கருதப்படும்