Beauty And The Beast in Tamil – அழகியும் அசுரனும்:- Here is the full beauty and the beast story in Tamil :- ஒரு ஊருல ஒரு அழகான பொண்ணு இருந்தா ,அவள் ரொம்ப தைரியமான பொண்ணா இருந்தா
அந்த ஊருல ஒரு ரவுடி பையனும் இருந்தான் அந்த ஊருல இருக்குறவங்க எல்லாரும் அவனுக்கு பயந்தாங்க , ஒருநாள் அழகி மார்க்கெட் போயிட்டு திரும்பி வர்றப்ப அந்த பையன பாத்தா
எந்த பயமும் இல்லாம எனக்கு வழிய விடுன்னு சொன்னா அந்த பொண்ணு
தன்னை பாத்து பயப்படாத அந்த அழகிய பாத்து ரொம்ப கோபப்பட்டான் அந்த பையன் , அவளோட வீட்டுக்கே வந்து அவளை மிரட்டினான் அந்த பையன்
அந்த அழகியோட அப்பா வந்து அவன சமாதான படுத்தி அனுப்பிச்சாரு ,ஒருநாள் அழகியோட அப்பா ஒரு காட்டுக்குள்ள இருக்குற அரண்மனைக்கு போனாரு ,அங்க என்னதான் இருக்குன்னு பாக்கணும்னு ஆவலா இருந்துச்சு அவருக்கு
அப்பத்தான் ஒரு பெரிய அரக்கன் ராஜா உடைய மாட்டிகிட்டு அவருக்கு முன்னாடி வந்தான்
என்னோட இடத்துல நீ என்ன பண்றன்னு கேட்டு அவரை புடிச்சு ஜெயில்ல போட்டான்
தன்னோட அப்பாவ காணாத அழகி தன்னோட குதிரையை எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ள போனா ,அங்க இருந்த அரண்மனைய பாத்ததும் இதுக்குள்ள அப்பா இருக்கறன்னு போயி தேடுனா
அப்ப அங்க வந்த அரக்கன் நீ எப்படி இங்க வந்தன்னு கேட்டான் ,தன்னோட அப்பாவ தேடி வந்தத சொன்ன அழகிய பிடிச்சி சிறைல அடைக்க போனான்
தயவு செஞ்சு எங்க அப்பாவ விடுவீங்க அவருக்கு பதிலா நான் ஜெயில்ல இருக்கேன்னு சொன்னா அந்த பொண்ணு
உடனே அவுங்க அப்பாவ வெளிய அனுப்பிச்சிட்டு ,அந்த பொண்ண அடைச்சு வச்சான் அந்த அரக்கன்
தன்னோட அப்பாவ நினச்சு அழுதுகிட்டே இருந்தா அந்த பொண்ணு ,நீ அழுகாத உன் அப்பா வீட்டுக்கு போயிருப்பாரு வேணும்னா இந்த மந்திர கண்ணாடில பாருன்னு சொல்லி ஒரு கண்ணாடியை கொடுத்தான் அந்த அரக்கன்
அந்த கண்ணாடில அவுங்க அப்பா கட்டு வழியா போறது தெரிஞ்சுச்சு ,அப்பா நிறைய ஓநாய்கள் அவரை தாக்குறதையும் பாத்தா
உடனே தப்பிச்சு ஓடுன அந்த பொண்ணு அங்க இருந்த ஓநாய்கள விரட்ட ஆரம்பிச்சா, எவ்வளவு முயற்சி செஞ்சும் அந்த ஒநாய்கள விரட்ட முடியல
அப்ப அங்க வந்த அந்த அரக்கன் எல்லா ஓலைகளையும் விரட்டுன்னான் ,
அப்ப ஒரு ஓநாய் அவன கடிக்காது , வழியோட அந்த அழகிய தூக்கிகிட்டு தன்னோட அரண்மனைக்கு போனான் அந்த அரக்கன்
ரொம்ப களைப்பா இருந்த தாள படுத்து தூங்கினான் அந்த அரக்கன் ,முழிச்சு பாத்தப்ப தன்னோட கடிபட்ட கைல கட்டு போட்டிருக்குறத பாத்தான் , தனக்கு உணவும் செஞ்சு வச்சுருக்குறத பாத்தான்
உடனே அந்த அழகி மேல அவனுக்கு பாசம் வந்துச்சு , தன்னோட அப்பாவுக்கு ஏதாவது ஆபத்து வருமான்னு கேட்டா அழகி
இல்ல நீ வேணும்னா அந்த கண்ணாடிய பாருன்னு சொன்னான்,அந்த கண்ணாடில அந்த ரவுடி பையனும் கிராமத்து ஆட்களும் ,அவுங்க அப்பாவ அடிக்கிறத பாத்தா
உடனே நான் எங்க அப்பாவ பாக்கணும்னு சொன்னா அந்த அழகி
அழகியோட பாசம் ஏற்பட்ட அந்த அரக்கன் நீ வேணும்னா அந்த கண்ணாடிய வச்சுக்க ,உனக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டா அந்த கண்ணாடி வழியா என்ன கூப்பிடுன்னு சொன்னான்
உடனே தன்னோட கிராமத்துக்கு போன அழகி , அந்த கூட்டத்தார் தன்னோட அப்பாவ அடிக்கிறத பாத்தா
எதுக்கு இப்படி செயிரீங்கன்னு கேட்டா ,அதுக்கு அந்த ரவுடி பையன் சொன்னான் நீங்க அந்த காட்டுக்குள்ள யாருகூட சேந்து இருக்கீங்கன்னு கேட்டான்
அப்ப அந்த மந்திர கண்ணாடி கீழ விழுந்துச்சு ,அதுல அந்த அரக்கனோட உருவத்தை பாத்த எல்லாரும் பயந்தாங்க
இப்பவே அங்க போயி அவனை கொல்லணும்னு எல்லாரும் கிளம்புனாங்க ,தன்னையும் தன்னோட அப்பாவையும் காப்பாத்துன அந்த அரக்கன காப்பாத்த ,அந்த அழகி பின்னாடியே போனா
கிராமத்து ஆட்கள் எல்லாரும் அந்த அரணைக்குள்ள போனாங்க ,அப்ப அந்த அரக்கன் வந்து எல்லாரு கூடையும் சண்டை போட்டான் ,அவனுக்கு பின்னாடி வந்த அந்த ரவுடி ஒரு ஈட்டிய எடுத்து அந்த அரக்கன குத்துன்னான்
மெதுவா கீழ விழுந்த அந்த அரக்கன பாத்துட்டு எல்லாரும் வெளிய போயிட்டாங்க ,தனக்கு உதவி செஞ்ச அந்த அரக்கனோட நிலைமையை நினச்சு வறுத்த பட்ட அந்த அழகி அழுகை ஆரம்பிச்சா
அவளோட கண்ணீர் அந்த அரக்கன் மேல விழுந்துச்சு , உடனே அந்த பாழடைந்த அரண்மனை ஜொலிக்க ஆரம்பிச்சுச்சு
அரக்க ரூபத்துல இருந்த நாத அரக்கன் மெதுவா ஒரு அழகான இளவரசனா மாறுனான்
மெதுவா எழுந்து என்னோட தவறினால் இத்தனை நாலா அரக்கனா இருந்தேன் ,இன்னைக்கு உன்னாலதான் நான் திரும்பவும் மனுசனா மாறினேன்னு சொன்னான்
அவுங்க ரெண்டு பெரும் அந்த அரண்மனைல ரொம்ப நாள் வாழ்ந்தாங்க