ஆயிரம் முட்டாள்கள்-1000 Fools Akbar Birbal Story in Tamil:- பீர்பால் ஒருமுறை அலகாபாத் நகருக்கு விஜயம் செய்தார் ,அங்குள்ள உடற்பயிற்சி நிலையங்கள் போர்தளவாட தொழிற்சாலைகளை சுற்றிப்பார்த்த அவர் ,அங்கிருந்து ஆயிரம் வீரர்களை தேர்வு செய்து தன்னுடன் விஜயநகரம் அழைத்து வந்தார்
வரும்வழியில் அவர்களுக்கு கொடுக்க தன்னிடம் உள்ள பொருள் அனைத்தையும் செலவழித்தும் பொதும்படியாக இல்லை ,அவர்களுக்கு உணவு கொடுக்கவே தன்னிடம் வழிச்செலவுக்கு கொண்டுவந்த பணம் செலவானதை அறிந்து துணுக்குற்றார்
அரசரின் முன் அனுமதி இல்லாமல் இவர்களை போர் படைக்கு அழைத்து செல்கிறோமோ இவர்களுக்கு எப்படி அரசரிடம் இருந்து பொருள் மற்றும் உணவு பெற்று தருவது என்பது நினைத்து குழப்பமடைந்தார்
ஊர்திரும்பிய பீர்பாலை சந்தித்த அரசர் ,தமக்கு ஊரில் இருந்து என்ன கொண்டுவந்தீர் என்று கேட்டார் ,அதற்க்கு பீர்பால் சொன்னார் ஆயிரம் முட்டாள்கள் என்றார்
என்ன ஆயிரம் முட்டாளா என்று கேட்டார் அரசர் ,அதற்கு பீர்பால் ஆம் அரசே அரசு அலுவல் ,படை என்றதும் என்ன சம்பளம் ,உணவு கிடைக்குமா ,தங்குமிடம் அமையுமா என்று எதுவுமே கேட்கமல் உங்களை நம்பி வந்தவர்கள் முட்டாள்கள் அல்லவா என்று கேட்டார்
ஏன் அவர்களை அப்படி சொல்கிறீர் நமக்கு அவர்கள் தேவைதான் ,அவர்களை அழைத்து வந்த உமது யோசனைக்கும் பாராட்டுக்கள் ,அவர்களை நிராகரித்து விடுவேன் என்று நீங்க செய்த காரியத்தை நான் ரசிக்கிறேன் என்று சொன்ன அரசர்
அந்த ஆயிரம் வீரர்களையும் படையில் சேர்த்து கொண்டார் ,பீர்பாலின் புத்தி கூர்மையையும் பாராட்டினார்