விக்ரமாதித்தன் வேதாளம் கதை -3 குரு சிஷ்யன் – Vikram and Betal Story in Tamil:- தன்னோட குருவோடு ஆணைப்படி வேதாளத்தை பிடிச்சி தூக்கிட்டு வந்த விக்ரமாதித்தன் திரும்ப திரும்ப வேதாளம் கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியதா போச்சு ,அதனால வேதாளம் அவன்கிட்ட இருந்து தப்பிச்சு திரும்பவும் புளிய மரத்துல ஏறி உக்காந்துகிடுச்சு

அந்த வேதாளத்தை திரும்பவும் தன்னோட தோளுல தூக்கிகிட்டு தன்னோட குருவ பாக்க போனாரு விக்ரமாதித்தன்

அப்பத்தான் வேதாளம் இன்னொரு கதைய சொல்ல ஆரம்பிச்சுச்சு
ஒரு ஊருல ஒரு பேரரசர் வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு ரொம்ப நல்லவருகிறதால நாட்டுல இருக்குற எல்லா மக்களுக்கும் நல்லது செஞ்சு எல்லாரையும் சந்தோசமா வச்சிக்கிட்டாரு
அவருக்கு ஒரு அன்பான மனைவி இருந்தாங்க இருந்தாலும் அவருக்கு ஒரு மிகப்பெரிய குறை இருந்துச்சு , கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லாமலே இருந்துச்சு

தனக்கு குழந்தை வேண்டும்னு நினைச்ச அரசர் நாட்டுல இருந்த எல்லா கோவிலுக்கும் நிறய தானம் வழங்க ஆரம்பிச்சாரு

கொஞ்ச நாள் கழிச்சி அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துச்சு , தனக்கும் தன்னோட நாட்டுக்கும் வாரிசு கிடைச்சதுல அரசருக்கு ரொம்ப சந்தோசம்

இளவரசிய அவளோட விருப்பப்படியே வளக்கணும்னு முடிவு செஞ்சாரு அரசர் ,அதனால நாட்டுல இருக்குற எல்லா கலைகளையும் அவளுக்கு சொல்லிகுடுக்க ஏற்பாடு பண்ணுனாரு ,எந்த கலை இளவரசிக்கு புடிச்சிருக்கோ அந்த கலைய அவளுக்கு தொடர்ந்து கற்பிக்கணும்னு ஏற்பாடு செஞ்சாரு

தொடர்ந்து படிச்சி புத்திசாலியா இருந்த இளவரசி புத்தி கூர்மையா ஆனது மட்டுமில்லாம போர் கலைகளையும் தேர்ச்சி அடைஞ்சா , துரிதமா வில் வீசுறது , அதிவேகமான வாள் சண்டை போடுறதுனு தன்னோட திறமையை வளர்த்துக்கிட்டா இளவரசி

இளவரசி பெரியவளா ஆனதும் அவளுக்கு திருமணம் செஞ்சு வைக்க நினைச்சாரு அரசர் ,அப்பத்தான் இளவரசி அவளோட ஆசைய சொன்னா ,என்ன வில் வித்தையிலயும் வாள் சண்டையிலயும் யார் தோற்கடிக்குறாங்களோ அவுங்களைத்தான் நான் திருமணம் செஞ்சுக்குவேன்னு சொன்னா

இத கேட்ட அரசர் பக்கத்து நாட்டு இளவரசர்கள் எல்லாரையும் தன்னோட நாட்டுக்கு வரவெச்சு வில் மற்றும் வாள் போட்டிக்கு ஏற்பாடு செஞ்சாரு அரசர்

போட்டிக்கு வந்த ஒவ்வொரு இளவரசரையும் சுலபமா தோக்கடிச்சு கிட்டே இருந்தா இளவரசி ,அப்பத்தான் அரசருக்கு புரிஞ்சது இப்படி எல்லா இளவரசரையும் ஜெயிச்சிட்டா இவளை யார் கல்யாணம் செஞ்சுக்கிட மிச்சம் இருப்பாங்கன்னு பயம் வந்துச்சு

உடனே இளவரசர்கள் மட்டுமில்லாம சாதாரண மக்களும் திறமை இருந்தா இளவரசி கூட போட்டி போடலாம்னு அறிவிச்சாரு அரசர்

இந்த போட்டி தொடங்குனதுல இருந்து கமலன்ங்கிற விவசாயி இளவரசியோட திறமையை உற்று பாத்துகிட்டே இருந்தாரு , இளவரசியோட திறமைக்கு என்ன காரணம் அவ எப்படி லாவகமா கத்தி வீசுறானு பார்த்து தெரிஞ்சு கிட்டான் அதுமாதிரியே பயிற்சி செஞ்ச கமலன் இளவரசியோட மோதுற அளவுக்கு திறமைய வளத்துக்கிட்டாரு

ஒரு நாள் அரசரை சந்திச்ச கமலன் இளவரசி கூட போட்டி போட வாய்ப்பு கேட்டாரு , அரசரும் சரினு சொல்லி போட்டிக்கு ஏற்பாடு செஞ்சாரு , பெரிய பெரிய இளவரசர்களையே இளவரசி தோற்கடிச்சுட்டா இந்த விவசாயியால என்ன செய்ய முடியும்னு கவலையோட போட்டியா பார்க்க ஆரம்பிச்சாரு அரசர்

அப்பத்தான் எல்லோரும் ஆச்சார்ய படுற அளவுக்கு தன்னோட திறமையை காமிச்சு வெற்றி பெற்றான் கமலன் , இத பார்த்த அரசர் நீ எப்படி இளவரசிய தோக்கடிச்சனு கேட்டாரு அதுக்கு நான் தொடர்ந்து இளவரசியோட செயல்பாடுகளையும் உத்திகளையும் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா அவள மாதிரியே சண்ட போட பழகுனேனு சொன்னாரு கமலன்

இத கேட்ட இளவரசி என்ன தோற்கடிச்ச உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் ஆனா என்னால உங்கள திருமணம் செஞ்சுக்க முடியாதுனு சொன்னா , இத கேட்ட கமலனும் எனக்கும் உன்ன கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்லைனு சொன்னான்

இத கேட்ட அரசருக்கு ஒரே குழப்பமா போச்சு
— அப்ப கதையை நிப்பாட்டுன வேதாளம் ஏன் விக்ரமாதித்தா அது ஏன் அந்த இளவரசி அவ சொன்னபடி அவள ஜெயிச்ச ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலாம் அவ செஞ்ச இந்த தப்புக்கு என்ன தண்டன அந்த அரசர் கொடுத்திருப்பாருனு கேட்டுச்சு

அதுக்கு விக்ரமாதித்தன் சொன்னாரு எப்ப அவளோட திறமைய பார்த்து கத்துகிட்ட ஆரம்பிச்சானோ அப்பவே கமலன் இளவரசியோட சிஷ்யனா மாறிடறான் அப்படி இருக்கிறப்ப குருவும் சிஷ்யனும் கல்யாணம் செஞ்சுக்கிடறது முறை ஆகாது ,அதனால அவுங்க எடுத்த முடிவு சரிதான் ,இதுக்கு எந்த பேரரசனும் தண்டனை கொடுக்க முடியாதுனு சொன்னாரு
ஒரு வழியா விக்ரமாதித்தன குழப்பி அவன் வாயில இருந்து விடய வரவச்ச வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்துல ஏறிக்கிடுச்சு
————-தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தை பிடிக்க மீண்டும் புளியமரத்தை நோக்கி சென்றான்