வெந்நீர் சூப் – முல்லா குழந்தைகள் கதை – Soup-Mulla Kids Stories in Tamil:- முல்லாவின் புகழ் உலகம் எல்லாம் பரவி இருந்தது
ஒருநாள் முல்லா தன்னோட வீட்டு வாசல்ல உக்காந்துட்டு இருந்தாரு , அப்ப ஒரு கணவனும் மனைவியும் ஒரு கூட நிறைய காய்கறிகளோட அவர பார்க்க வந்தாங்க
முல்லாவ பார்த்ததும் ஐயா உங்களோட புத்தி கூர்மையும் நகைசுவை பேச்சும் எங்க ஊர்ல எல்லாரும் சொல்லிகிட்டே இருந்தாங்க
ஒருநாளாவது உங்கள பார்க்கணும்னு நினைச்சோம் ,இந்த ஊருக்கு வர இப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது அதனால உங்கள பார்த்துட்டு பேசிட்டு போகலாம்னு வந்தோம் ,எங்களோட பரிசா எங்க தோட்டத்துல விளைஞ்ச இந்த காய்கறிகளை ஏத்துக்கோங்கன்னு சொன்னாங்க
முல்லாவும் அவுங்க கொடுத்த காய்கறிகளை வாங்கிகிட்டு அவுங்கள வீட்டுக்குள்ள கூப்பிட்டாரு
வீட்டுக்குள்ள வந்த அந்த கணவன் மனைவிக்கு மிக பெரிய விருந்து வச்சாரு முல்லா ,அதோட இல்லாம நீங்க ரொம்ப தூரம் பயணம் செஞ்சு வந்திருக்கீங்க அதனால இங்க தங்கிட்டு நாளைக்கு பயணம் போங்கன்னு சொன்னாங்க
முல்லாவோட அனுசரணையான பேச்சு அவுங்களுக்கு பிடிச்சி போக அங்கேயே தங்கி முல்லாவோட நாள் முழுக்க பேசிட்டு தங்களோட கிராமத்து வீட்டுக்கு போனாங்க
தாங்க முல்லாவ போயி சந்திச்சதையும் அவரு தங்களை நல்லபடியா கவனிச்சத்தையும் ஊருல பாக்குற எல்லாருகிட்டயும் சொன்னங்க அந்த கணவனும் மனைவியும்
கொஞ்ச நாளுக்கு அப்புறமா முல்லாவ பார்க்க இன்னொரு கணவனும் மனைவியும் வந்தாங்க ,ஐயா உங்களோட புகழையும் விருந்தினர்கள கவனிக்கிற இறக்க குணத்தையும் பத்தி எங்க வீட்டு பக்கத்துல இருக்குற கணவன் மனைவி சொன்னாங்க அதனால நாங்களும் உங்க வீட்டுல ஒருநாள் தங்கலாமான்னு கேட்டாங்க
இது என்னடா ரோதனயா போச்சுன்னு நினைச்சாரு முல்லா இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர்கள நல்லபடியா கவனிச்சு ,ஒருநாள் அங்கேயே தங்க வச்சு அனுப்பிச்சாரு முல்லா
கொஞ்ச நாளுக்கு அப்புறமா இன்னொரு ஜோடி கணவன் மனைவி முல்லா வீட்டுக்கு வந்தாங்க ,அவுங்களும் முல்லாவோட புகழ் தங்களோட ஊர் காரங்க சொன்னதாவும் , முல்லா வீட்டுல தங்கவும் தாங்களும் விருப்ப படுறதா சொன்னாங்க
அப்பத்தான் முல்லாவுக்கு புரிஞ்சது தன்னோட கரிசனத்த இவங்க தங்களுக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு ,இலவசமா தன்னோட வீட்டுல தங்கி விருந்து சாப்பிட்டு போக வந்திருக்காங்கனு
இந்த விசயத்த இனிமே வளர்க்க கூடாதுனு நினைச்ச முல்லா அவுங்கள உள்ள கூப்பிட்டு உக்காரசொல்லிட்டு
ரெண்டு கிண்ணத்துல நிறைய வெந்நீர் கொண்டுவந்து ,இந்தாங்க சூப் குடிங்கனு சொன்னாரு
அத பார்த்த புதுசா வந்தவங்களுக்கு ஒண்ணுமே புரியல ,நீங்க காய்கறி கொண்டுவந்து கொடுத்த கணவன் மனைவிய பத்தி சொன்னேங்களே
அவுங்க கொடுத்த காய்கறியிலதான் சூப் போட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கொடுத்தேன் ,இப்ப மிச்சம் இருந்தத வச்சு சூப் போட்டா வெண்ணிதான் வருதுன்னு சொன்னாரு
அப்பத்தான் அவுங்களுக்கு புரிஞ்சது விருந்துக்கு வந்த நாம எதுவுமே வாங்கிட்டு வரலைங்கிறத முல்லா சுட்டி காட்டுறாருனு
அதுக்கு அப்புறமா முல்லாவ பாக்க வரேன்னு சொல்லிட்டு இலவசமா தங்குறதும் ,இலவசமா விருந்துக்கு வர்றதும் நின்னுபோச்சு
குழந்தைகளா இப்படித்தான் நம்ம கிட்ட இருக்குற பொருளை இல்லாதவங்களுக்கு கொடுக்கும் போது கவனமா இருக்கணும் – உழைக்காம சோம்பேறியா இருக்கவங்களுக்கு நாம் உழைச்சு சம்பாதிச்சத கொடுக்க கூடாது ,அது அவுங்கள இன்னும் சோம்பேறியா மாத்திடும்