The Fox & the Lion – சிங்கமும் குட்டி நரியும்

The Fox & the Lion – சிங்கமும் குட்டி நரியும் :- ஒரு குட்டி நரி ஒன்னு காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு

பிறந்ததுல இருந்து அந்த நரி சிங்கத்தை பார்த்ததே இல்ல

அதனால சிங்கத்தை நினச்சு அதுக்கு பயம் எப்பவும் இருந்தது இல்லை

ஒருநாள் காட்டுப்பகுதியில் தண்ணி குடிக்க போன நரி சிங்கத்தை நேருல சந்திச்சுச்சு

உடனே அதுக்குள்ள பயம் வந்துடுச்சு ,ஓடி வீட்டுக்கு போய்டுச்சு அந்த நரி

வீட்டுக்கு வந்த நரி பயந்து போய் வீட்டுக்கு ஓடி வந்தத நினைச்சு வருத்த பட்டுச்சு ,இனிமே அந்த சிங்கத்த பார்த்தா பயப்பட கூடாதுனு முடிவு பண்ணுச்சு

ஆனா மறுநாளும் அந்த சிங்கத்தை பார்த்ததும் பயத்துல வீட்டுக்கு ஓடி வந்துடுச்சு அந்த நரி

அத பார்த்த தாத்தா நரி ஏன் ஓடி வர்றன்னு கேட்டுச்சு ,அதுக்கு அந்த குட்டி நரி நடந்தத சொல்லுச்சு

அதுக்கு அந்த தாத்தா நரி சொல்லுச்சு ,பயம் கிறது கடவுள் நமக்கு கொடுத்த முன்னெச்சரிக்கை செய்தி , பயம் வந்ததும் அந்த இடத்துல இருக்குற ஆபத்தை முதல்ல உணர்ந்து ஓடி வந்த நீ ரொம்ப கெட்டிக்காரன்

உனக்கு எப்ப எல்லாம் பயம் வருதோ அப்ப எல்லாம் தெளிவா யோசிச்சு ,அந்த பயத்தை எதிர்கொள்ளணும்னு சொல்லுச்சு அந்த தாத்தா நரி

அதுக்கு அந்த குட்டி நரி கேட்டுச்சு அப்ப நாளைக்கு அந்த சிங்கத்தை நேருல பார்த்தா பயப்படாம நிக்கணுமான்னு கேட்டுச்சு

அதுக்கு அந்த தாத்தா நரி சொல்லுச்சு அப்படி இல்ல எப்ப எல்லாம் உனக்கு பயம் வருதோ அந்த சூழ்நிலைய உணரணும் ,தேவையில்லாத பயமா இருந்தா அத விட்டுடனும் ,அதே நேரத்துல உனக்கு எதாவது ஆபத்து வரும்னு நிலைமை இருந்த ஓடி வந்துடும்னு தெளிவா சொல்லுச்சு

நீதி : பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு மட்டுமே பயப்பட வேண்டும்