தெனாலி ராமன் ஒருநாள் அரண்மனை வேலை முடிஞ்ச பிறகு தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு
தன்னோட வீட்டுக்கு பக்கத்துல நாலு திருடங்க நின்னு தன்னோட வீட்டையே பாத்துகிட்டு இருக்கிரத பாத்தாரு
திருடங்க அவர பாக்குரதுக்கு முன்னாடி தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலி ராமன்
தன்னோட மனைவிகிட்ட ரகசியமா திருடங்க வந்திருக்கிறத சொன்னாரு தெனாலிராமன்
நீ சத்தம் போடாம நான் சொல்ரதுக்கு ஏத்தமாதிரி நீ பேசுனா போதும்னு சொன்னாரு
உடனே வெளியில் இருக்குர திருடன்களுக்கு கேக்ககுர மாதிரி சத்தமா பேச ஆரம்பிச்சாரு தெனாலி ராமன்
நம்ம நாட்ல இப்போ ரொம்ப திருட்டு நடக்குது அதனால நம்ம வீட்ல இருக்குற தங்க காசுங்க எல்ல பாத்தையும் ஒரு பெட்டியில் போட்டு எடுத்துட்டு வா
நாம அத நம்ம கிணத்துல போட்டுடுவோம் அப்பத்தான் நம்ம வீட்டுக்கு திருடன்கள் வந்தாக்கூட வீட்ல எதுவும் இல்லைனு தேடிப்பாத்துட்டு திரும்பி போயிடுவாங்கனு சொன்னாரு
உடனே ஒரு பெட்டிய எடுத்து அதுல சில கல்ல போட்டு தூக்கிகிட்டு போயி கிணத்துல போட்டாரு
திருடன்கள் தான் கிணத்துல பெட்டிய போடுரத பாக்குராக்களான்னு ஓரக்கான்னால பாத்தாரு
திருடன்கள் தெனாலி ராமன் செய்யிரத பாத்தாங்க
நமக்கு வேலை சுலபம் வீட்ட உடைச்சு திருட வேண்டிய வேலையே இல்லை
கிணத்துல இருக்குற இந்த தங்கத்த எடுத்தம்னாலே போதும்னு அவுங்களக்குள்ள சொல்லிகிட்டு
தெனாலிராமன் வீட்டுக்கு போரவரைக்கும் காத்திருந்தாங்க
இத பாத்த தெனாலிராமன் பாத்துப் பாக்காத மாதிரி வீட்டுக்குள்ள போயிட்டாரு
தெனாலிராமன் போனதுக்கு அப்புரமா அந்த திருடன்களோட தலைவன் மெதுவா கிணத்துகிட்ட வந்தான்
கிணத்துல நிறை தண்ணி இருக்கிறத பாத்த திருடன் நம்மள்ள யாரு உள்ள இறங்கி அந்த பெட்டிய
எடுக்குரதுன்னு கேட்டாரு
கிணத்துக்குள்ள குதிக்க யாருமே முன் வராததால அவனுக்கு ஒரு யோசன தோனுச்சு
இந்த கிணத்துதண்ணீர் எல்லாத்தையும் எறச்சி ஊத்திட்டம்னா நாம சுலபமா அந்த தங்கம் இருக்குற பெட்டிய எடுத்திடலாம்னு சொன்னாரு
உடனே ஒருத்தர் மாத்தி ஒருத்தரா அந்த கிணத்து தண்ணி இறைக்க ஆரம்பிச்சாங்க
தண்ணி கொஞ்சம் கொஞ்சமா வயல் வெளி முழுசும் நிறைஞ்சுச்சு
அனா கிணறு இறைக்க இறைக்க சுரந்துகிட்டே இருந்ததால் தண்ணியோட மட்டம் குறையவே
இல்லை
என்னதான் தண்ணி இறைச்சாலும் தண்ணியோட அளவு குறையவே இல்லைங்கிறத பாத்த திருடன்கள் ரொம்ப சோந்துபோயிட்டாங்க
விடியப்போகுத நாம இப்போ போயிட்டு நாளைக்கு வந்து தண்ணி இறைப்போம்னு சொன்னான்
வேணாம் வேணாம் இன்னும் ரெண்டுநாளைக்கு வயலுக்கு இந்த தண்ணி போதும்னு
நாளைமறுநாள் வந்து தண்ணி இறைச்சு ஊத்துநீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்னு மரத்துக்கு பின்னாடி இருந்து தெனாலிராமன் சொன்னாரு
தெனாலி ராமன் சத்தத்த கேட்டு திரும்பி பாத்தாங்க திருடன்கள்
அப்பதான் அவுங்க ஏமாத்தப்பட்டத அவுங்க புரிஞ்சுகிட்டாங்க
உடனே வேகமா காட்டுப்பகுதிக்குள்ள போயி ஒளிஞ்சுகிட்டாங்க