தெனாலி ராமன் ஒரு நாள் மிக நீண்ட தூரம் பயனம் புறப்பட்டாரு
அவரு போற வழியில் ஒரு பெரிய காடு இருந்துச்சு
அந்த காட்டுல நிறை திருடன்கள் இருக்கிறதாகதும் அந்த வழியாப் போற எல்லாரையும் அடிச்சு அவுங்க பணத்த கொள்ளையடிக்கிறதாகவும் எல்லாரும் சொன்னாங்க
எதப்பத்தியும் கவலப்படாத தெனாலிராமன் அந்த காட்டு வழியில் நடக்க ஆரம்பிச்சாரு
அப்பத்தான் புதுசா ஒரு பயணி அவர் கிட்ட வந்து பயணியே நானும் ஒங்க கூடவராலாமா
எனக்கு திருடன்கள்னா பயம் அதனால ஒங்க கூட நடந்து வற்ரேன்னு சொன்னாரு அந்த பயனி
இதக்கேட்ட தெனாலிராமனுக்கு அந்த பயனியப்பாத்ததும் ஒரு சின்ன சந்தேகம் உண்டாச்சு
இருந்தாலும் தன்னோட நடந்துவர அந்த பயனிய சம்மதிச்சாரு
உண்மையாவே அந்த பயனிதான் திருடன் . காட்டுவழியா நடந்துபோற பயனிங்க கூடவே வந்து அவுங்க தூங்கும் போது அவுங்க வச்சிருக்கிற பொருட்களை திருடுறது தான் அவனோட வேலை
ரெண்டு பேரும் நடந்து போறப்ப ஒரு சத்திரம் வந்துச்சு அங்க தூங்கிட்டு காலையில் நடக்கலாம்னு ரெண்டு பேரும் படுத்தாங்க
நடுராத்திரியில் எழுந்திருச்ச திருடன் தெனாலிராமனோட பைய தேடுனான்
ஆனா அதுக்குள்ள பணம் ஏதும் இல்லை. ஆனா இந்த பைல பணம் இருக்கிறத பாத்தோமே எப்படி காணாமப்போச்சுன்னு திருடனுக்கு ஒரே குழப்பம்
உடனே மெதுவா வந்து தெனாலிராமன்கிட்ட படுத்துகிட்டான் அமைதியா
காலையில் எந்திரிச்சு ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சாங்க
ஒரு பெரிய மண்டபத்த ரெண்டு பேரும் அங்க தங்குறதுக்கு முடிவு பண்ணி படுத்து தூங்குனாங்க
உடனே திருடன் எந்திரிச்சு மீண்டும் தெனாலிராமன் பையத் தேடுனால் இப்பவும் அதுல பணம் இல்ல
என்னடா இது அதிசயம் இன்னைக்கு தேனீர் குடிக்கும் போது கூட பணம் இருக்குறத பாத்தோமே அப்படி எங்கதான் பணம் போச்சுன்னு கவலப்பட்டான்
மறுநாள் காலையில் ரெண்டுபேரும் நடக்க ஆரம்பிச்சப்ப இளநீர் கடை வந்துச்சு
உடனே தெனாலிராமன் தன்னோட பையில் இருந்து பணத்த எடுத்துக் கொடுத்தான்
இதப்பாத்த அந்த திருடன் தான் தான் திருடன்கிறத ஒத்துகிட்டான்
எனக்கு முன்னாடியே தெரியுமேனு சொல்லி சிரிச்ச தெனாலிராமன் அந்த திருடன் அப்படி எங்கதான் பணத்த ஒளிச்சு வச்சீங்கன்னு கேட்டான்
அதுக்கு தெனாலிராமன் உன்னோட பைலதான்னு சொன்னாரு
என்பைலயானு குளப்பத்தோட கேட்ட திருடன்கிட்ட
நீ தூங்குனதுக்கு அப்புறமா பணத்த எடுத்து உன்பைல வச்சிடுவேன்
நீ என்பைய தேடி பாத்துட்டு எதுவும் இல்லைனு தூங்குனதுக்கு அப்புரமா
என்பைல இருக்குற பணத்த எடுத்து என்பையல வச்சிடுவேன்னு சொன்னாரு
இதக்கேட்ட திருடன் தெனாலிராமன் தன்னோட புத்திசாலித்தனத்தால் தன்ன ஏமாத்திட்டத நினைச்சு வருத்தப்பட்டு அங்க இருந்தே ஓடிட்டான்