Site icon தமிழ் குழந்தை கதைகள்

தெனாலி ராமனும் பூனையும் தமிழ் சிறு கதை

கிருஷ்ண தேவராயரோட அரண்மனையில் ஒரு நாள் ஒரு வாக்குவாதம் வந்துச்சு அங்க இருக்குற அமைச்சர்கள் எல்லாரும் இந்த உலகத்துலயே எந்த விலங்கு புத்திசாலயானது து.சமத்தானது, சொன்ன சொல் கேட்க கூடியதுனு வாதிச்சாங்க

கடைசியா பூனை தான் சிறந்த வீட்டு விலங்குன்னு முடிவு பன்னாங்க

உடனே அரசர் நம்ம நாட்ள உள்ள பூனைங்களுக்கு எல்லாம் ஒரு போட்டி

யாரோட பூனை சொன்ன சொல்கேட்டு நடக்குதோ அந்த பூனையோட முதலாளிக்கு ஆயிரம் பொன் காசு கொடுக்க படும்ன அறிவிச்சாரு

இதக் கேட்ட தெனாலிராமனுக்கு ஒரே குசி

தானும் அந்த போட்டியில் கலந்துகிட்டு ஜெயிச்சா அந்த பணம் நமக்குதான்னு நினைச்சாரு

போட்டி அன்னைக்கு எல்லாரும் தங்களோட பூனைகளக்கொண்டு வந்து போட்டியில் கலந்துகிட்ட ரங்க

போட்டிய தொடங்கன முதலமைச்சர் எல்லா பூனைக்கும் தட்டுல பால் வைப்போம் எந்த பூனை நாம சொல்றதுக்கு முன்னாடி பால குடிக்குதோ அது தோல்வியான பூனைனு சொன்னாரு

அது மாதிரியே எல்லா பூனைக்கும் பால் கொண்டு வந்து வச்சாங்க

ஆனா தெனாலிராமனோட பூனைய தவிர எல்லா பூனையும் பாலக் குடிச்சதுங்க

இதப்பாத்த அரசர் தெனாலிராமன் பூனைதான் ஜெயிச்சதுனு அறிவிச்சு பொன் மூட்டைய தெனாலி ராமன் கிட்ட கொடுத்தாரு

அரசர் தெனாலி ராமன் கிட்ட அது எப்படி உன் பூனை மட்டும் பால் குடிக்க வரவே இல்லைனு கேட்டாரு

அதுக்கு தெனாலிராமன் அரசே ஒரு நாள் பூனைக்கு நான் சூடான பால கொண்டு வந்து வச்சேன்

அவசரபட்ட பூனை அந்த பால குடிச்சு வாய சுட்டுகிடுச்சு

அதுல இருந்து நான் சொல்ற வரைக்கும் அது பால குடிக்காதுனு சொன்னாரு

தெனாலிராமன் பழக்கப்படுத்திய விதத்த எல்லாரும் பாராட்டுனாங்க

Exit mobile version