கிருஷ்ண தேவராயர் அரண்மனைக்கு ஒரு வணிகன் வந்தான்
தான் ஒரு அராபிய குதிரை வியாபாரின்னும் தான் ஒரு படகு நிறை குதிரைகள் கொண்டு வந்திருக்கிறதாகவும் சொன்னான்
உடனே தேவராயர் துறைமுகத்துக்குப்போயி அந்த குதிரைகளை எல்லாம் பார்வையிட்டாரு
அந்த அராபிய வணிகன் தான் கொண்டு வந்ததுதான் உலகத்துலயே மிகச் சிறந்த குரைகள்
உங்கள் நாட்டுல இருக்கிற குதிரைகள் எல்லாம் இதுங்க கூட போட்டி போட முடியாதுன்னு சொன்னான்
இதக்கேட்ட கிருஷ்ணதேவராயருக்கு கோபம் வந்திடுச்சு என்ன சொன்ன எங்க நாட்டு குதிரைகளை நீ குறை சொல்ரியா
இன்னும் ஒரு மாசத்துல போட்டி வச்சுக்கிடலாம் எங்க நாட்டுக் குதிரைகள் ஜெயிச்சதுன்னா
நீ வந்த படகு எல்லா குதிரைகளையும் என்கிட்ட கொடுத்திடனும்
இல்லைனா உனக்கு இதே மாதிரி புது படகும் படகு நிறை குதிரைகளும் உனக்கு கொடுக்குரேன்னு சொன்னாரு
இதக்கேட்ட அந்த வணிகனும் ஒத்துக்கிட்டான்
அரண்மனைக்கு வந்த ராஜா அரபிய குதிரைகிட்ட நம்மள்ள எந்த குதிரை ஓடப்போகுதுன்னு
கேட்டாரு
பயந்துபோன எல்லாரும் கொஞ்சம் தயக்கம் காட்டுனாங்க
இதப்பாத்த ராஜா அரண்மனையில் இருக்குற எல்லாருக்கும் ஒரு குதிரை தன்னோட படையில் இருந்து கொடுத்தாரு
இத நீங்க ஒரு மாசம் பயிற்சி கொடுத்து கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாரு
தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டுச்சு
ஒரு மாச காலமா எல்லாரும் குதிரைய பழக்குரதுலயே செலவிட்டாங்க
எல்லாரும் குதிரைக்கு சத்தான உணவு கொடுத்து ஓடுரதுக்கு பழக்குனாங்க
போட்டி தினம் வந்துச்சு
எல்லாரும் பெரிய பெரிய பலமான குதிரைகளை கொண்டு வந்து நிறுத்துனாங்க
அந்த அரபிய வனிகனும் தன்னோட குதிரைகள்ள சிலத கொண்டு வந்து நிறுத்துனான் கொஞ்ச நேரத்துக்கு அப்புரமா தெனாலிராமன் தனக்கு கொடுக்க பட்ட குதிரைய கொண்டு வந்
துநிறுத்துனாரு
அந்த குதிரை எழும்பும் தோழுமா சாப்பாடு சாப்டே பலநாள் ஆனமாதிரி வந்து நின்னுச்சு
இதப்பாத்த எல்லாரும் சிரிச்சாங்க
கிருஷ்ண தேவராயருக்கு கோபம் தான் கொடுத்த குதிரைக்கு உணவு கொடுக்காம பட்டினி போட்டு இப்படி ஆக்கிட்டானேனு கோபப்பட்டாரு
போட்டி ஆரம்பிக்க போரப்ப எல்லாரும் குதிரை மேல ஏறுனாங்க
தெனாலி ராமன் மட்டும் ஒரு பெரிய குச்சியில் கொஞ்சம் புல்கட்ட கட்டி விட்டு அதோட ஏறுனாரு
போட்டிக்கான மணி அடிச்சதும் அந்த புல்ல குதிரைக்கு எட்டாதபடி வாயில் இருந்து தூரமா
பிடிச்சாரு
எல்லா குதிரையும் ஓட ஆரம்பிச்சது
தெனாலிராமன் குதிரை புல் திங்கிர ஆவள்ள ரொம்ப வேகமா ஓடி முதல் இடத்த பிடிச்சது
இதப்பாத்த அரசர் என்ன தெனாலிராமா என்ன உன் ரகசியம்னு கேட்டாரு
வெற்றி வேண்டி பசி இருந்தால் எல்லாத்தையும் ஜெயிக்கலாம்னு சொன்னாரு தெனாலிராமன்
தோல்வியுற்ற அந்த அரபிய வனிகன் தான் தோல்வியற்றத ஒத்துகிட்ட தான் கொண்டு வந்த குதிை ரகள் எல்லாத்தையும் அரண்மனை குதிரை லாயத்துல சேத்துட்டு சோகமா திரும்பிபோனான்