The Lion, the Ass, & the Fox-Aesop Fables in Tamil-கழுதை நரி சிங்கம் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு நரி ஒரு சிங்கம் ஒரு கழுதை சேர்ந்து ஒரு எருமைய வேட்டையாடுச்சுங்க
வேட்டையாடி முடிச்சதும் கழுதைய கூப்பிட்டு மூணு பேருக்கும் பங்கு பிரிக்க சொல்லுச்சு சிங்கம்
உடனே கழுதை அந்த எருமையோட கறிய மூணு பேருக்கும் சமமா பங்கு பிரிச்சது
தனக்கு சமமா எல்லாருக்கும் சாப்பாடு வச்சத பார்த்த சிங்கம் ஒரு அடி அடிச்சு கழுதைய கொன்னுடுச்சு
அதுக்கு அப்புறமா நரிய பங்கு போட சொல்லுச்சு சிங்கம்
உடனே நரி எல்லா கறியயும் சிங்கத்துக்கு வச்சிட்டு ,மாட்டோட கொம்ப மட்டும் தனக்கு வச்சிக்கிடுச்சு
இத பார்த்து சந்தோசப்பட்ட சிங்கம் எப்படி இவ்வளவு சரியா பங்கு பிரிச்சிருக்கீங்கனு கிண்டலா கேட்டுச்சு
நான் கழுதைய பார்த்து பாடம் படிச்சேன்னு சொல்லுச்சு ,நரி
சிங்கம் முழு எருமையையும் தின்னுட்டு போனதுக்கு அப்புறமா ,சிங்கம் சாப்பிட மறந்த முழு கழுதையையும் சாப்புட்டுச்சு புத்திசாலி நரி
நீதி : முட்டாள் வீரனிடம் நட்பு வைத்தால் ஆபத்து நமக்குத்தான்