Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Dog & His Master’s Dinner : நாயின் நேர்மை Aesop Tamil Fables

The Dog & His Master’s Dinner : நாயின் நேர்மை Aesop Tamil Fables :- ஒரு நகரத்துல இருக்குற வீட்டுல ஒரு நாய்க்குட்டி இருந்துச்சு

அந்த நாய்க்குட்டிய ரொம்ப செல்லமா வளர்த்தாங்க அந்த வீட்ட சேர்ந்தவங்க

தினமும் வேலைக்கு போற வீட்டோட தலைவருக்கு சாப்பாடு எடுத்துட்டு போற வேலைய அந்த நாய்க்குட்டி செஞ்சுச்சு

கூடையில் வைக்குற சாப்பிட்டு கிண்ணத்த கீழ சிந்தாம சரியா தன்னோட எஜமானருக்கு கொண்டுபோய் கொடுத்துடும் அந்த நாய்க்குட்டி

அதனால அந்த நாய்க்குட்டிக்கு ரொம்ப மரியாதையை அந்த வீட்டுல

இத பார்த்த பக்கத்து வீட்டு நாய்களுக்கு ரொம்ப பொறாமையா இருந்துச்சு

அதனால தினமும் சாப்பாடு கொண்டுபோற நாய்க்கு அறிவுரை சொல்லி அந்த சாப்பாட்ட சாப்பிட பாத்துச்சுங்க அந்த நாய்கள் கூட்டம்

ஆனா அந்த நாய்கள் கிட்ட இருந்து தப்பிச்சு தன்னோட எஜமானருக்கு சாப்பாட்ட சரியா கொண்டுபோய் சேத்துடும் அந்த நாய்

கொஞ்ச நாளுக்கு அப்புறமா மத்த நாய்கள் எல்லாம் சேர்ந்து அந்த நேர்மையான நாய்க்குட்டிய கிண்டலும் கேலியும் செய்ய ஆரம்பிச்சுங்க

அத கேட்டு சங்கடப்பட்டு அந்த நாய் அன்னைக்கு கொடுத்து அனுப்புன சாப்பாட சாப்பிட ஆரம்பிச்சுச்சு

அத பார்த்த மத்த நாய்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சத்தம் போட்டு சிரிச்சிச்சுங்க

இங்க பாருங்க இதுதான் புகழ் பெற்ற நம்பிக்கை நாய் , இத்தன நாள் ஊற ஏமாத்திட்டு இன்னைக்கு எஜமானாரோட சாப்பாட்டை சாப்பிடுது பாருங்கன்னு சொல்லி சிரிச்சுச்சுங்க

மத்த நாய்களோட கேலி கிண்டலுக்கு ஆளான நேர்மையான நாய் தன்னோட நேர்மைய தவர் விட்டதுக்காக ரொம்ப வருத்தப்பட்டுச்சு

நீதி : மற்றவர் கருத்தை வைத்து உங்கள் பழக்கங்களை மாற்ற வேண்டாம்

Exit mobile version