Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Ass & His Driver -எஜமானரும் முட்டாள் கழுதையும்

The Ass & His Driver -எஜமானரும் முட்டாள் கழுதையும் :- ஒரு கிராமத்துல ஒரு விவசாயி இருந்தாரு

அவரு தன்னோட பொதிகளை சுமக்க ஒரு கழுதை வளர்த்தாரு

பக்கத்து கிராமத்துக்கு போக பக்கத்துல இருக்குற மலை பாதை வழியா கழுதையோட பயணம் போனாரு அந்த விவசாயி

கழுதை மேல நிறைய சாமான் இருந்ததால ,கழுதையோட கழுத்துல ஒரு கயிற கட்டி பாதுகாப்பா அதுகூடவே நடந்து போனாரு அந்த விவசாயி

ஆனா அந்த முட்டாள் கழுதை இவ்வளவு உழைக்கிற என்ன சந்தேகப்பட்டு கழுத்துல கயிறு கட்டி இழுத்துட்டு போறாரேன்னு வருத்தப்பட்டுச்சு

இனிமே இவருக்கு விசுவாசமான இருக்க கூடாதுனு முடிவு பண்ணி சண்டித்தனம் செய்ய ஆரம்பிச்சுச்சு அந்த கழுத

உடனே திமிறிக்கிட்டு ஓட பார்த்துச்சு கழுதை , ஆனா அது மலை பதைக்கிறதால கயிற இறுக்கமா பிடிச்சி இளுத்தாறு விவசாயி

அடடா தன்ன கயிறால இருக்க பிடிச்சி தன்ன கொடும படுத்துறாரு விவசாயினு நினைச்சு ரொம்ப வேகமா அந்த பக்கம் இருந்த பள்ளத்துக்கு பக்கம் இழுத்துச்சு

தன்னோட கழுதையோட முட்டாள் தனத்தை நினச்சு வருத்தப்பட்டு அந்த கயிறை விட்டுட்டாரு அந்த விவசாயி

நடக்குற விஷயங்கள் எல்லாம் தனக்கு எதிரானதுனு நினைச்ச கழுதை வீணா அந்த பள்ளத்துக்குள்ள விளைந்து செத்து போச்சு

நீதி : நடப்பவை அனைத்தையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்

Exit mobile version