A True Servant – அரசரும் பணியாட்களும்:-ஒரு நட்ட ஒரு நல்ல ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு ,அவருக்கு தன்னோட மக்கள் மேலயும் நாட்டோட வளர்ச்சி மேலயும் ரொம்ப அக்கறை.
அதனால நிறைய பணியாட்களை நாட்டுக்கு வேலை செய்யவும் தனக்கு வேலை செய்யவும் வேலைக்கு வச்சிருந்தாரு.
இருந்தாலும் அவருக்கு மனசுக்குள்ள ஒரு கவலை ,நிறைய பணியாட்கள் இருந்தும் எல்லோரும் தனுக்கு விசுவாசமா இருக்காங்களா இல்லையாங்கிற சந்தேகம் அவருக்கு இருந்துச்சு
அதனால தன்னோட முக்கிய அமைச்சர்கள் கிட்ட அறிவுரை கேட்டாரு,அதுல ஒரு அமைச்சர் நல்ல பணியாள தேர்ந்தெடுக்க ஒரு நல்ல யோசனை சொன்னாரு
அந்த யோசனையை செயல்படுத்த விரும்புனாரு அரசர் ,ஒருநாள் தன்னோட பணியாட்களோட சந்தை பக்கம் போகும்போது தன்னோட பண பையை திறந்து நிறைய தங்க நாணயங்களை எடுத்து வீதியில வீசுனாரு அத பாத்ததும் எல்லா பணியாட்களும் தங்க காச எடுக்க ஓடுனாங்க
ஆனா ஒரு பணியாள் மட்டும் அரசர் பக்கத்துலயே பாதுகாப்புக்கு நின்னுக்கிட்டே இருந்தாரு ,கொஞ்சமும் அசையாம நின்ன பணியாள்கிட்ட உனக்கு தங்க நாணயம் வேணாமான்னு கேட்டாரு அதுக்கு அவரு இருக்கட்டும் அரசே உங்க பாதுகாப்புதான் எனக்கு முக்கியம்னு சொன்னாரு
தனக்கு ஒரு நல்ல பணியாள் இருக்குறத நினச்சு ரொம்ப சந்தோஷப்பட்டாரு ,வாரிசு இல்லாத அந்த அரசர் தான் காலத்துக்கு அப்புறமா அந்த பணியால்தான் இந்த நாட்ட ஆளணும்னு அமைச்சர்கள் கூட சேர்ந்து முடிவு பன்னுன்னாரு
கடமையை கண்ணும் கருத்துமா செஞ்ச அந்த பணி ஆளும் ரொம்ப நாள் அரசரா மாறி நாட்டுக்கு நல்லது செஞ்சாரு