Site icon தமிழ் குழந்தை கதைகள்

A Raven & a Swan- அன்னப்பறவையும் பொறாமை கொண்ட காகமும்

A Raven & a Swan- அன்னப்பறவையும் பொறாமை கொண்ட காகமும் :- ஒரு குளத்துக்கு பக்கத்துல இருந்த மரத்துல ஒரு காக்கா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த காக்காவுக்கு அந்த குளத்துல வாழ்ந்த அன்னப்பறவை மேல ரொம்ப பொறாமை வந்துச்சு

அது என்ன இந்த அன்னப்பறவை மட்டும் வெள்ளையா அழகா இருக்கு ,நாம மட்டும் கருப்பா இருக்கமேனு பொறாமை பட்டுச்சு காக்கா

தானும் அந்த அன்னப்பறவை மாதிரி தண்ணியில வாழ்ந்தா நாமும் வெள்ளையா மாறிடலாம்னு நினச்சுச்சு காக்கா

அதனால தன்னோட வாழுற இடத்த விட்டுட்டு அன்னப்பறவை வாழுற குளத்துல போயி வாழ ஆரம்பிச்சிச்சு காக்கா

கொஞ்ச நாள் கூட அந்த காக்கானால தண்ணியில் வாழ முடியல , தண்ணி பட்டு உடம்பு சரியில்லாம வீனா செத்துப்போச்சு அந்த காக்கா

நீதி :

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது

பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம் ;அதுவே போதும் ; பகைவர் கேடு, செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்

Exit mobile version