தெனாலிராமனும் அரேபிய குதிரை வியாபாரியும் -Tenali Raman Horse Race Story: The Clever Hungry Horse Trick That Shocked the King:-கிருஷ்ணதேவராயர் அரண்மனையில தெனாலிராமன் வந்து சேர்ந்ததுக்கு அப்புறம் கலகலப்புக்கு பஞ்சமே இல்லாம இருந்துச்சு அரசருக்கு தீர்த்து வைக்க வேண்டிய நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் அதை சுவைபட தெனாலிராமன் தீர்த்து வைக்கிறது பார்த்து ரசிக்கிறதுல கிருஷ்ணதேவராயருக்கு ரொம்ப சந்தோஷம் அதனாலேயே தன்னால தீக்க முடிஞ்ச பிரச்சனைகளை கூட தெனாலிராமன் கிட்ட கொடுத்து தீர்த்து வைக்க சொல்லுவாரு அரசர்
அப்படி இருக்கப்பத்தா ஒரு நாள் கிருஷ்ணதேவராயர் அரண்மனைக்கு ஒரு குதிரை வியாபாரி வந்தாரு நேர அரசரை சந்தித்த அவர் நான் ஒரு அரேபிய குதிரை வியாபாரி தான் ஒரு படகு நிறைகளை உயர்தர குதிரைகளை கொண்டு வந்திருக்கிறதாகவும் சொன்னாரு
படை பலத்த எப்பவும் நேர்த்தியா வச்சுக்கணும்னு விரும்புற கிருஷ்ணதேவராயர் உடனே துறைமுகத்துக்கு கிளம்பி போயி அந்த குதிரைகள் வந்த படக பார்வையிட்டார் அப்பத்தான் அந்த அரேபிய குதிரை வியாபாரி சொன்னாரு நான் இந்த குதிரைகளை அரேபியாவில் இருந்து கொண்டு வந்து இருக்கேன் இந்த குதிரைகள் எல்லாம் மிகச் சிறந்த ஓடும் திறன் கொண்டவை அதோட ஆரோக்கியமானவையும் கூட இந்த உலகத்திலேயே சிறந்த அரேபிய குதிரைகள் தான் உங்களுக்காக நான் கொண்டு வந்து இருக்கேன் அப்படின்னு சொன்னாரு
தன்னோட குதிரைகளை பத்தி பெருமையா பேச ஆரம்பிச்ச அரேபிய வணிகன் கொஞ்ச நேரத்துல திமிர் தனமா பேச ஆரம்பிச்சான். உங்க நாட்டுக்குதிரைங்க இது பக்கத்துல நின்னா கழுதை மாதிரி தெரியும் உங்க நாட்டுக்குதிரைகள் இது கூட போட்டி கூட போட முடியாது அப்படின்னு சொன்னாரு அந்த அரேபிய வியாபாரி
இத கேட்ட கிருஷ்ணதேவராயருக்கு கோபம் வந்துருச்சு என் நாட்டுக்கு வந்து என் குதிரைய பத்தி அதிகமா பேசுறானே இந்த வியாபாரி நான் எவ்வளவு பெரிய குதிரை போர் படை வச்சிருக்கேன் இதெல்லாம் இவனுக்கு தெரியுமா என்ன அப்படின்னு ஒரு நிமிஷம் யோசிச்சாரு. கிருஷ்ணதேவராயர் அப்பத்தான் அந்த அரேபிய வியாபாரி என்ன அரசரே போட்டியா வச்சுக்கலாமா அப்படின்னு கேட்டான் ஏற்கனவே கோவத்துல இருந்த கிருஷ்ணதேவராயர் உடனே சரின்னு சொல்லிட்டாரு இன்னும் ஒரு மாசத்துல இதே இடத்துல நம்ம போட்டிய வச்சுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு வேகமா அரண்மனைக்கு திரும்பி போயிட்டாரு கிருஷ்ணதேவராயர்
மறுநாள் அரண்மனை கூடினதும் போட்டிக்கான நாள் குறிக்கப்பட்டது போட்டியோட முடிவுல ஜெயிக்கிறவங்களுக்கு பரிசா என்ன கொடுக்கலாம் என்று எல்லோரும் பேசுனாங்க அப்பத்தான் கிருஷ்ணதேவராயர் சொன்னாரு அரேபிய வணிகரே உங்கள் குதிரை ஜெயித்திடுச்சுன்னா உங்களுக்கு புதுசா ஒரு படகும் அது நிறைய குதிரைகளும் உங்களுக்கு கொடுக்கிறோம் அதே நேரத்தில் எங்கள் குதிரை ஜெயிச்சுருச்சுன்னா நீங்க படகோடா சேர்த்து உங்க குதிரைகளையும் இங்கே விட்டுட்டு தனியா தான் ஊருக்கு போகணும் அப்படின்னு சொன்னாரு
அப்பத்தான் கிருஷ்ணதேவராயருக்கு எந்த குதிரைகளை அந்த அரேபிய வணிகர் குதிரைகளோட போட்டிக்கு அனுப்புறது யோசிச்சாரு தான் கிட்ட இருக்கிறது எல்லாமே நல்ல திடகாத்திரமான குதிரைகள் தான் போருக்கு போய் பழகின குதிரை அண்ணா போட்டியில் ஜெயிக்கிற அளவுக்கு திறமைசாலிகளானு அவருக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு, அப்பத்தான் அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு அரண்மனையில் இருக்கிற எல்லார்க்கும் ஒவ்வொரு குதிரையை கொடுத்து ஒரு மாசம் நல்ல போட்டி போடுற பயிற்சி கொடுத்து அனுப்புங்கள் அப்படின்னு சொல்லி அனுப்பிச்சாரு அரசர்
அரசர்ருடன் கட்டளையை மீற முடியாதுன்னு எல்லா அமைச்சர்களும் காவலாளிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட குதிரையை ஒரு மாசம் நல்ல சாப்பாடு போட்டு திடகாத்திரமா வளத்தாங்க அத தினமும் ஓட்ட பயிற்சிக்கு கூட்டிட்டு போயி நல்லபடியா வளர்த்தாங்க
போட்டிக்கான நாள் வந்ததும் ஒவ்வொருத்தரும் தங்களோட குதிரையை கம்பீரமா கொண்டு வந்து போட்டி நடக்கிற மைதானத்தில் நிப்பாட்டுனாங்க அப்பதான் தெனாலிராமன் தனக்கு கொடுக்கப்பட்ட குதிரையை கொண்டு வந்து நிப்பாட்டுனாரு ஊரே கொல்லுனு சிரிக்கிற அளவுக்கு இருந்துச்சு அந்த குதிரை வத்தலும் தொத்தலுமா ஒல்லி ஆகி போயி ஒரு மாசம் சோறு கூட சாப்பிடாமல் இருந்த நோயாளி மாதிரி இருந்துச்சு அந்த குதிரை இதை பார்த்த உடனே கிருஷ்ணர் கோபம் வந்துச்சு இருந்தாலும் பொது வெளியில் தன்னோட அமைச்சர்களை திட்டக்கூடாதுனு அமைதியா இருந்தாரு எல்லோரும் அவுங்களுக்கு கொடுக்க பட்ட குதிரைகள் மேல ஏறி போட்டிக்கு தயாரானாங்க
தெனாலிராமன் மட்டும் ஒரு குச்சியில பெரிய கயித்த கட்டி அதுல புல் கட்ட கட்டி குதிரைக்கு முன்னாடி தொங்க விட்டாரு அத பார்த்ததும் ரொம்ப நாளா பசியில இருந்த அந்த உடம்பு வத்தின குதிரை ஓட ஆரம்பிச்சுடுச்சு அப்பத்தா எல்லாரும் ஆச்சரியமா பாத்தாங்க தெனாலிராமன் குதிரை எல்லா திடகாத்திரமான குதிரைகளை விட முன்னணியில் ஓடுறத
கடைசியா தெனாலிராமன் தான் ஜெயிச்சாரு அப்பத்தான் கிருஷ்ணதேவராயர் தெனாலிராமனை கூப்பிட்டு பேசினாரு ஏன்பா உனக்கு அளவுக்கு அதிகமாக பணம் கொடுத்து குதிரையை தயார் பண்ண சொன்னா என் குதிரையை இப்படி ஆக்கி வச்சிருக்கியான்னு அப்படி கோபமா கேட்டார், அப்பத்தான் தெனாலிராமன் சொன்னாரு அரசே அந்த எல்லா குதிரைகளும் போருக்கு போறதுக்கு தான் திடகாத்திரமா தேவை ஆனா போட்டிக்குனு வந்துட்டா ஒல்லியான தேகம் உடையவங்க தான் வேகமாக ஜெயிப்பாங்க
அதனால அதுக்கு ஏத்த மாதிரி உங்க குதிரையை தயார் பண்றதுக்கு தான் அதை ஒரு மாசம் பட்டினி போட்டேன் இன்னைக்கு பாருங்க அந்த குதிரை தான் ஜெயிச்சு இருக்கு புல் கட்ட கண்ணுல காமிக்காம இருந்ததுனாலேயே அதுக்கு ஒரு உத்தியோகம் இருந்துச்சு இன்னைக்கு புல் கட்ட பிடிக்க அது ஓடி உங்களுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்திருக்கு அப்படின்னு சொன்னாரு
தெனாலிராமனோட புத்திசாலித்தனத்தால தான் தோற்கடிக்க பட்டத தெரிஞ்சுகிட்ட அரேபிய வியாபாரி வெறும் கையோட அரேபியா திரும்பிப் போனார்
கிருஷ்ண தேவராயர் அரண்மனைக்கு ஒரு வணிகன் வந்தான்
தான் ஒரு அராபிய குதிரை வியாபாரின்னும் தான் ஒரு படகு நிறை குதிரைகள் கொண்டு வந்திருக்கிறதாகவும் சொன்னான்
உடனே தேவராயர் துறைமுகத்துக்குப்போயி அந்த குதிரைகளை எல்லாம் பார்வையிட்டாரு
அந்த அராபிய வணிகன் தான் கொண்டு வந்ததுதான் உலகத்துலயே மிகச் சிறந்த குரைகள்
உங்கள் நாட்டுல இருக்கிற குதிரைகள் எல்லாம் இதுங்க கூட போட்டி போட முடியாதுன்னு சொன்னான்
இதக்கேட்ட கிருஷ்ணதேவராயருக்கு கோபம் வந்திடுச்சு என்ன சொன்ன எங்க நாட்டு குதிரைகளை நீ குறை சொல்ரியா
இன்னும் ஒரு மாசத்துல போட்டி வச்சுக்கிடலாம் எங்க நாட்டுக் குதிரைகள் ஜெயிச்சதுன்னா
நீ வந்த படகு எல்லா குதிரைகளையும் என்கிட்ட கொடுத்திடனும்
இல்லைனா உனக்கு இதே மாதிரி புது படகும் படகு நிறை குதிரைகளும் உனக்கு கொடுக்குரேன்னு சொன்னாரு
இதக்கேட்ட அந்த வணிகனும் ஒத்துக்கிட்டான்
அரண்மனைக்கு வந்த ராஜா அரபிய குதிரைகிட்ட நம்மள்ள எந்த குதிரை ஓடப்போகுதுன்னு
கேட்டாரு
பயந்துபோன எல்லாரும் கொஞ்சம் தயக்கம் காட்டுனாங்க
இதப்பாத்த ராஜா அரண்மனையில் இருக்குற எல்லாருக்கும் ஒரு குதிரை தன்னோட படையில் இருந்து கொடுத்தாரு
இத நீங்க ஒரு மாசம் பயிற்சி கொடுத்து கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாரு
தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டுச்சு
ஒரு மாச காலமா எல்லாரும் குதிரைய பழக்குரதுலயே செலவிட்டாங்க
எல்லாரும் குதிரைக்கு சத்தான உணவு கொடுத்து ஓடுரதுக்கு பழக்குனாங்க
போட்டி தினம் வந்துச்சு
எல்லாரும் பெரிய பெரிய பலமான குதிரைகளை கொண்டு வந்து நிறுத்துனாங்க
அந்த அரபிய வனிகனும் தன்னோட குதிரைகள்ள சிலத கொண்டு வந்து நிறுத்துனான் கொஞ்ச நேரத்துக்கு அப்புரமா தெனாலிராமன் தனக்கு கொடுக்க பட்ட குதிரைய கொண்டு வந்
துநிறுத்துனாரு
அந்த குதிரை எழும்பும் தோழுமா சாப்பாடு சாப்டே பலநாள் ஆனமாதிரி வந்து நின்னுச்சு
இதப்பாத்த எல்லாரும் சிரிச்சாங்க
கிருஷ்ண தேவராயருக்கு கோபம் தான் கொடுத்த குதிரைக்கு உணவு கொடுக்காம பட்டினி போட்டு இப்படி ஆக்கிட்டானேனு கோபப்பட்டாரு
போட்டி ஆரம்பிக்க போரப்ப எல்லாரும் குதிரை மேல ஏறுனாங்க
தெனாலி ராமன் மட்டும் ஒரு பெரிய குச்சியில் கொஞ்சம் புல்கட்ட கட்டி விட்டு அதோட ஏறுனாரு
போட்டிக்கான மணி அடிச்சதும் அந்த புல்ல குதிரைக்கு எட்டாதபடி வாயில் இருந்து தூரமா
பிடிச்சாரு
எல்லா குதிரையும் ஓட ஆரம்பிச்சது
தெனாலிராமன் குதிரை புல் திங்கிர ஆவள்ள ரொம்ப வேகமா ஓடி முதல் இடத்த பிடிச்சது
இதப்பாத்த அரசர் என்ன தெனாலிராமா என்ன உன் ரகசியம்னு கேட்டாரு
வெற்றி வேண்டி பசி இருந்தால் எல்லாத்தையும் ஜெயிக்கலாம்னு சொன்னாரு தெனாலிராமன்
தோல்வியுற்ற அந்த அரபிய வனிகன் தான் தோல்வியற்றத ஒத்துகிட்ட தான் கொண்டு வந்த குதிை ரகள் எல்லாத்தையும் அரண்மனை குதிரை லாயத்துல சேத்துட்டு சோகமா திரும்பிபோனான்
