Site icon தமிழ் குழந்தை கதைகள்

Wisdom of Donkey’s – Mulla Story – கழுதை பாடம் -முல்லா கதை

Wisdom of Donkey’s – Mulla Story – கழுதை பாடம் -முல்லா கதை :-முல்லா ஒருநாள் சந்தைக்கு தன்னோட கழுதை மேல நிறய பொருளை ஏத்திகிட்டு நடந்து போனாரு

அப்ப அவரு வீட்டுக்கு பக்கத்துல இருக்குற இன்னொரு வியாபாரி நண்பர் அவரோட கழுதையை கூட்டிகிட்டு நடந்து போறத பார்த்தாரு ,உடனே அவரோட சேர்ந்து பேசிக்கிட்டே தன்னோட பயணத்தை தொடர்ந்தார் முல்லா

அப்ப அந்த நண்பரோட கழுதை நடக்காம அடம்பிடிச்சுச்சு ,அவரு ரொம்ப கஷ்டப்பட்டு அந்த கழுதைய கட்டி இருந்த கயித்த பிடிச்சி இழுத்துகிட்டு போனாரு ,அப்பத்தான் அந்த நண்பர் கேட்டாரு இந்த கழுதைகள் எல்லாம் அறிவில்லாத முட்டாளுங்க எப்ப அவசரமா பயணம் போகுனுமோ அப்பத்தான் இந்த மாதிரி அடம் பிடிக்குதுங்கனு சொன்னாரு

அதுக்கு முல்லா சொன்னாரு இல்ல இல்ல இந்த கழுதைங்க ரொம்ப புத்திசாலிங்கனு சொன்னாரு ,அத கேட்ட முல்லா வோட நண்பர் சொன்னாரு புத்திசாலிங்களா எப்படி சொல்லுறீங்கன்னு கேட்டாரு

அதுக்கு முல்லா சொன்னாரு இந்த கழுதைகள் பொதி சுமக்க பயன்படுத்துறோம் ,அதுங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுமை ஏத்துனம்னா பொறுமையா நடக்கும் ,சுமக்க முடியாத அளவு பொதி ஏத்த முடியவே முடியாது ,அப்படி ஏத்துனா கழுதை இந்த மாதிரிதான் அடம் பிடிக்கும்னு சொன்னாரு

அப்பதான் கழுதை தூக்க கூடிய அளவு பொருட்களை மட்டும் ஏத்தாம ,நிறய பொருட்கள அதுமேல ஏத்தி இருக்குறத தான் முல்லா குத்தி காட்டுறாருனு புரிஞ்சிக்கிட்டாரு

உடனே ஒரு பெரிய பெட்டியை மட்டும் தன்னோட தலையில தூக்கிகிட்டு ,கழுதைய தன்னோட நடக்க வச்சாரு ,முல்லா அப்பதான் சொன்னாரு அட கழுதையோட புத்திசாலித்தனம் கழுதையோட முதலாளிக்கும் வந்துடுச்சு போலன்னு சொன்னாரு ,ரெண்டு பேரும் சிரிச்சிகிட்டே தங்களோட பயணத்தை தொடர்ந்தாங்க

Exit mobile version