Site icon தமிழ் குழந்தை கதைகள்

Wealth and Love and Success Tamil Moral Story – அன்பும்,பணமும்,வெற்றியும்

Wealth and Love and Success Tamil Moral Story

Wealth and Love and Success Tamil Moral Story – அன்பும்,பணமும்,வெற்றியும்:- ஒரு ஏழை விவசாயியோட வீட்டுக்கு ஒரு நாள் மூன்று முதியவங்க வந்தாங்க.அத பாத்த விவசாயியோட மனைவி நீங்கல்லாம் யாருனு கேட்டாங்க

நாங்கதான் அன்பு ,பணம் மற்றும் வெற்றி எங்கள்ல உங்களுக்கு யார பிடிச்சிருக்கோ அவுங்கள நீங்க உள்ள கூட்டிக்கிடலாம்னு சொன்னாங்க.

உடனே வீட்டுக்குள்ள போன விவசாயியோட மனைவி தன்னோட கணவர்கிட்ட நடந்தத சொன்னாங்க

உடனே அவுங்க கணவரான ஏழை விவசாயி சொன்னாரு வெற்றிய உள்ள கூப்பிடுவோம் வெற்றி இருந்தா பணம் சுலபமா சம்பாரிச்சுக்கிடலாம்னு சொன்னாரு

அதுக்கு அந்த மனைவி சொன்னாங்க பணம் இருந்துச்சுன்னா அதவச்சு வெற்றியை சுலபமா அடைய முடியும்னு

அப்ப அங்க வந்த விவசாயியோட மகள் அன்ப கூப்பிட சொன்னாங்க ,தன்னோட மகள் புத்திசாலினு தெரிஞ்சிருந்த அவுங்க ரெண்டுபேரும் உடனே அன்புக்குற முதியவர உள்ள கூப்பிட்டாங்க

அன்பு உள்ள வந்ததும் பணமும் ,அறிவும் கூடவே உள்ள வந்துட்டாங்க

அப்பத்தான் அன்பு சொன்னாரு ,என்ன கூப்பிட்டதால கூடவே உங்களுக்கு வெற்றியும் அதனால் பணமும் கிடைக்கும் அதனால மத்த ரெண்டு பெரும் சேர்ந்து என்கூட உள்ள வந்துட்டாங்க

இதேமாதிரி பணத்தையோ வெற்றியையோ கூப்பிட்டுஇருந்தீங்கன்னா இந்நேரம் மத்த ரெண்டு பேரும் வெளியேதான் நின்னுகிட்டு இருக்கணும்னு சொன்னாரு

Exit mobile version