விக்ரமாதித்தன் வேதாளம் கதை -6 யார் திறமைசாலி – Vikram and Betal Story in Tamil:- திரும்ப திரும்ப விக்கிரமாதித்தனுக்கு கதை சொல்லி அவன் பதில் சொன்ன உடனே மரத்துல தொங்க போன வேதாளத்த திரும்ப பிடிச்ச விக்ரமாதித்தன் அத தன்னோட குரு கிட்ட ஒப்படைக்க நடந்து போனான்
இந்த முறை தனக்கு விடை தெரியாம போச்சுன்னா நாம் இந்த வேலைய செஞ்சு முடிச்சிடலாம்னு நினைச்சான் ,அப்பத்தான் அந்த வேதாளம் கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு
ஒரு ஊருல ஒரு படிச்ச மேதை இருந்தாரு ,அவருக்கு மூணு மகன்கள் இருந்தாங்க அவுங்களுக்கு நிறய சொல்லி கொடுத்த மேதை அவுங்கள வெளியூருக்கு போய் வாழ சொல்லி வழியனுப்பு வச்சாரு
அந்த மூணு மகன்களுக்கும் ஒவ்வொரு தனி திறமை இருந்துச்சு மூத்த மகன் உணவு பொருட்களை தரம் பிரிக்கிற விசயத்துல கெட்டிக்காரனா இருந்தான்
ரெண்டாவது மகன் குடிநீர் பத்தி நிறய தெரிஞ்சு வச்சிருந்தான் ,மூணாவது மகன் நல்ல உறக்கமும் ஓய்வயும் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருந்தான்
அவுங்க மூணுபேரும் காட்டு வழியில நடந்து போய்கிட்டு இருந்தாங்க ,அப்ப ஒரு ஆமை அவுங்க பாதையில குறுக்க வந்துச்சு ,
அத பார்த்த மூத்த மகன் சொன்னாரு ஒங்க ரெண்டு பேருல யாராவது இத தூக்கி பாதை ஓரத்துல விடுங்கனு சொன்னான்
அதுக்கு ரெண்டாவது மகன் சொன்னனான் நான் உன்ன விட திறமைசாலி அதனால நீங்க ரெண்டுபேரும் அத தூக்கிட்டு போய் விடுங்கனு சொன்னான் ,அத கேட்ட மூணாவது மகன் இல்ல இல்ல உங்கள விட அறிவு எனக்குதான் அதிகம்னு சொன்னான்
இப்படி மூனு பேருமே தேவையில்லாத விசயத்துக்கு சண்டை போட ஆரம்பிச்சாங்க , ரொம்ப நேரம் சண்ட போட்டதும் அப்புறம் நாம பேசாம இந்த நாட்டோட ராஜாகிட்ட போயி ஞாயம் கேப்போம் யார் நம்மள்ல ரொம்ப திறமைசாலின்னு சொல்லிட்டு அரண்மனைக்கு போனாங்க
எல்லோரோட வாதத்தையும் கேட்ட அரசர் நான் உங்க மூணு பேரையும் தனி தனியா சோதிச்சு யார் திறமைசாலின்னு சொல்றேன்னு சொன்னாரு , அதுவரைக்கும் அவுங்க மூணு பேத்தயும் அரண்மனையிலேயே தங்க சொன்னாரு
மறுநாள் மூத்த பையன கூப்பிட்டு அவனுக்கு அரண்மனை சாப்பாட்ட சாப்பிட கொடுத்தாரு அரசர் ,
அரசர் சொல்படி சாப்பாட்ட சாப்பிட ஆரம்பிச்சான் அந்த பையன் ,திடீர்னு சாப்பிடுறது நிப்பாட்டுனா அவன் இந்த சாப்பாட்டுல லேசா சாணி வாசனை வருதுன்னு சொன்னான்
இத கேட்ட அரசர் ரொம்ப குழம்பி போனாரு ,இந்த சாப்பாடு அரசருக்காக பாத்து பாத்து சமைச்சது இத போயி சாணி வாடை அடிக்குதுனு இவன் சொல்ரானேன்னு அமைச்சர்களை கூப்பிட்டு விசாரணை நடத்த சொன்னாரு
நல்லா விசாரிச்ச அமைச்சர் அரசர் கிட்ட சொன்னாரு அரசே இந்த சாப்பாடு செய்ய பயன்படுத்துற அரிசி மாட்டு சாணத்தை உரமா போட்டு விளைய வச்சது ,இத கண்டு பிடிக்க முடிஞ்ச இந்த பையன் நிஜமாவே மிக பெரிய திறமைசாலியா இருக்கணும்னு சொன்னாரு
அடுத்தநாள் தன்னோட சேவகர்களை அனுப்பிச்சு ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்குற கிணத்துல இருந்து தண்ணி எடுத்துட்டு வர சொன்னாரு ,அத அந்த ரெண்டாவது பையனுக்கு குடிக்க கொடுத்தாரு ,அந்த தண்ணிய குடிச்ச அந்த ரெண்டாவது பையன் இந்த தண்ணியில கற்பூர வாடை அடிக்குதுனு சொன்னான்
இத கேட்ட அரசர் மீண்டும் அமைச்சர கூப்பிட்டு விசாரிக்க சொன்னாரு ,அவரும் அந்த கிணத்தை போய் பார்த்துட்டு வந்து அரசர சந்திச்சாரு
அரசே இந்த தண்ணி எடுத்த கிணத்துக்கு பக்கத்துல ஒரு கோவில் இருக்கு அதுல தினமும் கற்பூரம் கொளுத்துறாங்க ,இந்த சின்ன வாடையை கூட கண்டுபிடிச்சவனும் மிக சிறந்த திறமைசாலியா இருக்கணும்னு சொன்னாரு
அடுத்ததா ஒரு அறையில நிறய பட்டு மெத்தையை போட்டு அந்த மூணாவது பையன ஓய்வெடுக்க சொன்னாரு ,மறுநாள் வந்து அந்த பையன பார்த்தாரு அரசர் ,ராத்திரி நல்லா தூங்கி ஓய்வெடுத்தியானு கேட்டாரு
இல்லை அரசே என்னோட படுக்கைக்கு அடியில் ஏதோ துருத்திகிட்டு இருந்துச்சு அதனால என்னோட தோள்ல வலி வந்துடுச்சுனு சொன்னான் ,உடனே அமைச்சரை கோபித்து அந்த மேதைகளை சோதிச்சு பாக்க சொன்னாரு
அமைச்சர் அந்த மெத்தை எல்லாத்தையும் பார்த்துட்டு அரசே ஒரே ஒரு முடித்தான் இதுக்கு அடியில இருக்கு இத கூட இந்த பையன் கண்டுபிடிச்சுட்டான் இவனும் திறமைசாலிதான்னு சொன்னாரு
-அப்பத்தான் வேதாளம் கேட்டுச்சு இந்த மூணு பேருமே திறமைசாலிங்கதானு அரசர் அறிச்சிருப்பாரா இல்லையானு கேட்டுச்சு
-அப்ப ஒரு விடை விக்கிரமாதித்தனுக்கு கிடைச்சுச்சு அப்பத்தான் அவனுக்கு விக்கிரமாதித்தனுக்கு ஞாபகம் வந்துச்சு அடடா எனக்கு இந்த கதைக்கும் விடை தெரிஞ்சுருச்சே இத சொல்லலைனா என்னோட தலை வெடிச்சிடுமேனு சொல்லிட்டு அந்த கேள்விக்கு விடை சொன்னான்
-அந்த மூணு பேத்துல கடைசி பையன்தான் திறமைசாலி ,ஏன்னா மத்த ரெண்டு பேரோட திறமை நல்லா இருந்தாலும் மூணாவது பையனோட திறமை அவனோட உடம்பு வரைக்கும் அனிச்சையா மாறிடுச்சு ,அதனாலதான் அவன் கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாடி அவனோட தோள்ல காயம் ஏற்பட்டுச்சு அதனால அவனோட திறமைதான் பெருசுனு சொன்னான்
இதுக்காகவே காத்துகிட்டு இருந்த வேதாளம் திரும்பவும் புளியமரத்துல ஏறிக்கிடுச்சு