Ungrateful Lion and Clever Fox Story in Tamil:-ஒருநாள் ஒரு மரம் வெட்டுறவர் காட்டுக்குள்ள மரம் வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப யாரோ கத்துற மாதிரி சத்தம் கேட்டுச்சு
உடனே சத்தம் கேட்ட பக்கம் போய் பாத்தாரு அந்த விறகுவெட்டி.அங்க ஒரு சிங்கம் கூண்டுக்குள்ள அடைஞ்சு கிடைச்சது ,அத பாத்ததும் தெரிஞ்சது எதோ வேட்டைக்காரன் கூண்டு வச்சு அந்த சிங்கத்தை பிடிச்சிட்டான்னு
விறகுவெட்டிய பாத்ததும் மனிதனே என்னை காப்பாத்துன்னு சொல்லி கத்துச்சு அந்த அந்த சிங்கம் ,இருந்தாலும் தயக்கமா இருந்த அந்த விறகுவெட்டி சிங்கமே நீ வேட்டையாடி சாப்புடுற மிருகம் உன்ன வெளிய விட்டா நீ என்ன கொன்னு தின்னுடுவான்னு சொன்னாரு
மனிதனே நானே கூண்டுக்குள்ள அடிபட்டு கிடைக்குறேன் என்னால உனக்கும் எந்த ஆபத்தும் வராது கூண்ட தொறந்து விடுன்னு கெஞ்சி கேட்டுக்கிடுச்சு
சிங்கத்தோட பேச்ச கேட்டு மனசு இறங்குன அவரு கூண்ட தொறந்து விட்டாரு ,வெளிய வந்த சிங்கம் திடீர்ன்னு அந்த மனுசன பிடிக்க பாஞ்சது
பயந்துபோன விறகுவெட்டி நன்றி கெட்ட சிங்கமே இது என்ன உன்ன காப்பாத்துன என்னையே கொள்ள வரேன்னு கத்துனாரு
அப்ப அந்த சிங்கம் சொல்லுச்சு என்னோட குணம் உனக்கு தெரியாத ,நான் ஒரு வேட்டை மிருகம்னு தெரிஞ்சும் என்ன விடுவிச்ச உனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்லன்னு சொல்லி அவரு மேல குதிக்க ஆரம்பிச்சது
சிங்கத்த நம்புனது ரொம்ப தப்புனு நினச்சு வருத்தப்பட்ட மனுஷன் அந்த சிங்கத்துக்கு உணவா ஆகுறது தனக்கு கிடைச்ச தண்டனைனு நினச்சுகிட்டு இருக்கும்போது அங்க ஒரு நரி வந்துச்சு.
நரியாரே நரியாரே என்ன காப்பாத்துங்கன்னு சொல்லுச்சு ,நடந்தத தெரிஞ்சுக்கிட்ட நரி அந்த மனுசன காப்பாத்த நினைச்சது
அது எப்படி சிங்கத்த நீ காப்பாத்துனனு கேட்டுச்சு ,உடனே சிங்கம் சொல்லுச்சு நான் இந்த கூண்டுக்குள்ள இருந்தப்பனு கதைய செல்ல ஆரம்பிச்சது
இருங்க இருங்க சிங்கராஜாவே அது எப்படி நீங்க கூண்டுக்குள்ள மாட்டுனீங்க ,இந்த மனுஷன் எந்த பக்கம் இருந்து வந்தான் ,எப்படி இவனால கூண்ட தொறக்க முடிஞ்சதுன்னு கேள்வி கேட்டுகிட்டே இருந்துச்சு
அப்ப சிங்கம் நடந்தத நடிச்சு காமிக்க ஆரம்பிச்சது,அப்ப சொல்லுச்சு நான் இந்த கூண்டுக்குள்ள இருந்தானான்னு சொல்லிகிட்டே கூண்டுக்குள்ள போச்சு சிங்கம் ,இதுதான் சமயம்னு டக்குனு கூண்ட மூடிடுச்சு நரி
இது என்ன தீர்ப்பு சொல்ல வந்த நீ இப்படி பண்ணலாம்ணு கேட்டது , வேட்டையாடுற உன்னோட குணத்த எப்படி உன்னால மாத்திக்க முடியாதோ ,அதுமாதிரி அடுத்தவங்களை ஏமாத்துற பழக்கத்த என்னால விட முடியாதுன்னு சொல்லி அந்த மனுசன காப்பாத்துச்சு அந்த நரி
அப்பத்தான் அந்த சிங்கத்துக்கு ஒரு குறள் ஞாபகத்துக்கு வந்துச்சு
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
தனக்கு நன்மை செய்ய வந்த மனுசன கொள்ள நினைச்சது தன்னோட தன்னோட நன்றி இல்லாத தனம் அதனால தனக்கு கிடைச்ச தண்டனை சரிதான்னு நினைச்சது