Site icon தமிழ் குழந்தை கதைகள்

புகழுக்காக தர்மம் Two farmers Kids Story in Tamil

புகழுக்காக தர்மம் Two farmers Kids Story in Tamil :- ஒரு ஊருல கருப்புசாமி வெள்ளைச்சாமினு ரெண்டு விவசாயிகள் இருந்தாங்க.அவுங்க ரெண்டு பேருமே ரொம்ப ஈகை குணம் உள்ளவர்களா இருந்தாங்க

கருப்புசாமிக்கு எப்பவும் புகழ்மேல ஆச அதிகம் ,எப்பயும் யாராவது தன்னப்பத்தி பேசிக்கிட்டே இருக்கணும்னு நினைச்சான் ,அதனால அளவுக்கு அதிகமா தர்மம் செஞ்சான் ,யார் என்ன கேட்டாலும் கொடுத்து அவுங்க தன்ன பத்தி புகழ்ந்து பேசுறத கேட்டு சந்தோஷப்பட்டான்

ஆனா வெள்ளைச்சாமி புத்தி கூர்மையோட இருந்தான்,அவனும் தானம் தர்மம் செஞ்சாலும் ,யாருக்கு உதவணும்னு தெரிஞ்சு இருந்தான்.

தொடர்ந்து புகழுக்காக தானம் பண்ணுன தன்னோட நண்பன திருத்தணும்னு நினைச்சான் ,அதுக்காக அவன் ஒரு திட்டம் போட்டான் ,

ஒரு நாள் கருப்புசாமி தானம் கொடுத்துக்கிட்டு இருக்குற இடத்துக்கு வந்து ,உன்னோட நிலத்த உங்க அப்பா எப்பவோ எங்க அப்பா கிட்ட வித்துட்டாரு ,அதுக்கான சாட்சி இந்த பைல இருக்குனு சொன்னான்,

வெள்ளைச்சாமி எப்பவும் பொய் சொல்ல மாட்டான்னு அந்த ஊருல இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது ,அதனால கருப்புசாமிகிட்ட இருந்து இனி எதுவும் வாங்க முடியாது அவனும் இனி நம்மளைப்போலதான்னு சொல்லிட்டு திரும்பிக்கூட பாக்காம எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க

அப்ப ஒரு சிலர்மட்டும் ஐயா எங்களுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் எங்களுக்கு ஏதாவது கொடுங்கன்னு கேட்டு நின்னுகிட்டு இருந்தாங்க.

இத்தனை நாள் தன்னோட ஈகை குணத்தை பாத்து தன்ன பாராட்டுன எல்லாரும் எப்ப அவுங்க வேலைய பாத்துட்டு போனத பாத்து வறுத்த பட்டான் கருப்புசாமி ,

அப்பதான் வெள்ளைச்சாமி பேச ஆரம்பிச்சான் ,அங்க பாத்தியா உன்கிட்ட எதுவுமே இல்லைனு தெரிஞ்சும் உன்கிட்ட யாசகம் கேக்குற அவுங்களுக்குத்தான் நீ உதவனும் ,அத விட்டுட்டு உன்ன புகழறாங்கன்னு எல்லாருக்கும் தானம் கொடுக்க கூடாது

அதனாலதான் இப்படி ஒரு பொய் சொன்னேன்னு சொன்னான் ,

அப்ப அந்த பைல என்ன இருக்குன்னு பாத்தான் கருப்புசாமி ,அதுல ஒரு ஓலைல

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
.

அப்படிங்கிற திருக்குறள் எழுதி இருந்துச்சு

அப்பத்தான் ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே அப்படிங்கிற அர்த்தமும் அவனுக்கு புரிஞ்சது

Exit mobile version