Two Eagles Tamil Kids Story – இரண்டு பருந்துகள் :- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு பருந்துகள்னா ரொம்ப பிடிக்கும்
பக்கத்துக்கு நாட்டுக்கு செய்திஅனுப்ப பருந்துகளை அவர் பயன்படுத்துனாரு அதனால உயர பறக்கிற பருந்துகள அவருக்கு ரொம்ப பிடிக்கும்
ஒருநாள் பக்கத்துக்கு நாட்டு ராஜா அரணமனைக்கு வந்தாரு அவர் வரும்போது ரெண்டு பருந்துகள பரிசா கொண்டுவந்து கொடுத்தாரு
அந்த பருந்துகள் ரெண்டும் சாம்பல் நிறத்துல ரொம்ப அழகா இருந்தது
உடனே அந்த பருந்துகள பறவைகள் பலக்குற ஆள்கிட்ட ஒப்படைச்சாரு
செய்திகள் கொண்டுபோகுற பயிற்சியை அதுங்களுக்கு கொடுக்க ஆணையிட்டாரு
சில நாள்களுக்கு அப்புறமா அந்த பறவைகளை பார்வையிட வந்தாரு அரசர்
ஒரு பறவை மிக உயரமா பறந்துச்சு அதிகமாக காத்து அடிச்சத கூட பொருட்படுத்தாம வேகமா பறந்துகாட்டுச்சு அந்த பருந்து
இத பாத்த அரசருக்கு ரொம்ப சந்தோஷம் , நிறைய தங்க காசுகளை அந்த பறவை பயிற்சியாளரும் கொடுத்தாரு
இன்னொரு பறவையை பாத்தாங்க , ஆனா அந்த பறவை மரக்கிளைல இருந்து பிறக்காம அங்கேயே இருந்துச்சு
இதப்பத்தி கேட்ட அரசருக்கு ரொம்ப கோபம் வந்தது ஊருல இருக்குற நல்ல பயிற்சியாளரை கூட்டிவங்க இந்த பறவையும் பறக்குறத நான் பாக்கணும்னு சொன்னாரு
ஒரு முதியவர் வந்து என்னால அந்த பறவையை என்னால பறக்க வைக்க முடியும்னு சொன்னாரு
சில நாட்களுக்கு பிறகு வந்த அரசருக்கு அந்த பறவை நல்லா பறந்து காமிச்சது
இது எப்படி சாத்தியமாச்சுன்னு கேட்டாரு அரசர்
அது ஒன்னும் பெரிய விஷயமில்லை அந்த பறவை உக்காருற கிளையை வெட்ட சொன்னேன் , அந்த கிளை இல்லாம தன்னோட இறக்கையோட பலத்த நம்ப ஆரம்பிச்சது அந்த பருந்து அதனாலதான் அது பறக்க ஆரம்பிச்சது
நீதி – யார் ஒருவர் தன்னோட பலத்த தெரிஞ்சு அத உபயோகிக்குறாங்களோ அவுங்களுக்கு தோல்வியே இல்ல