Twin Brothers Kids Story – சகோதரர்கள் நீதிக்கதை :- ஒரு ஊருல ராமு சோமுன்னு ரெண்டு சகோதரர்கள் இருந்தாங்க, அவுங்க ரெண்டுபேரும் சகோதரர்களா இருந்தாலும் ரெண்டுபேரும் வெவ்வேற குணாதிசயங்களோட இருந்தாங்க.
ராமு பொறுமைசாலி, சோமு அவசரக்காரன்
ராமு நல்ல படிப்பாளி சோமு நல்லா விளையாடுவான்
ராமு நிறைய நண்பர்கள் வச்சிருந்தான் சோமு அதிகமா பேசமாட்டான்
ராமு தனக்கு கிடச்சத வச்சு சந்தோஷப்படுவேன் சோமு மேலும் மேலும் வேணும்னு அல்லல் படுவான்
ஒருநாள் ராமு சோமு ரெண்டுபேரையும் அவுங்க அப்பா கூப்பிட்டாரு
எனக்கு வயசாகிடுச்சு நம்ம நிலங்கள உங்க ரெண்டு பேருக்கும் பிரிச்சு கொடுக்கலாம்னு முடிவு பன்னி இருக்கேன்
யாரு யாருக்கு என்ன வேணும்னு சொல்லுங்கன்னு சொன்னாரு
ராமு நீங்க என்ன கொடுத்தாலும் எனக்கு போதும்னு சொன்னான்
சோமு எனக்கு கொஞ்சம் அதிகமான நிலங்கள் வேணும்னு சொன்னான்
இத கேட்ட ராமு சோமு வோட அப்பா அப்ப உங்க ரெண்டு பெத்துக்கும் ஒரு போட்டி வச்சுக்கிடலாம்
நீங்க ரெண்டுபேரும் நம்ம நிலத்துல நடக்கணும் சூரியன் அஸ்தமிக்கிறதுக்குள்ள இங்க திரும்பியும் வரணும்,நீங்க நடந்து கடந்த இடத்த உங்களுக்கு கொடுத்திடுறேன், ஆனா நீங்க செருப்பு இல்லாம நடக்கணும்,தண்ணிகூட கொண்டு போக கூடாதுன்னு சொன்னாரு
உடனே ராமுவும் சோமுவும் நடக்க ஆரம்பிச்சாங்க
மதியம் வரைக்கும் நடந்த ராமுவுக்கு தனக்கு கிடைச்ச நிலம் போதும்னு நினைப்பு வந்துச்சு உடனே திரும்பி நடக்க ஆரம்பிச்சான்
சோமுவுக்கு எவ்வளவு நடந்தாலும் ஆசை அடங்கவே இல்ல அதனால மேலும் மேலும் நடந்துக்கிட்டே இருந்தான்
சூரியன் மறையர நீரம் ராமு அவுங்க அப்பாகிட்ட வந்து சேந்தான்,ஆனா நடந்துக்கிட்டே இருந்த சோமுவால திரும்பி வரமுடியல
ராமுசோமு வோட அப்பா போட்டியில ஜெயிச்ச ராமுவுக்கு நம்ம நிலத்துல முக்கால்வாசிய கொடுக்குறேன், போட்டியில தோத்தாலும் சோமுவுக்கு இந்த சின்ன இடத்தை கொடுக்குறேன்னு சொன்னாரு
நீதி : போதுமென்ற மனவே பொன் செய் ம் மருந்து