திமிர்பிடித்த ஆமை
ஒரு ஆத்துக்கு பக்கத்துல வாழ்ந்துட்ட வந்த ஆமை ரொம்ப திமிருரோட வாழ்ந்துகிட்டு வந்துச்சு
மத்தவங்கள மட்டம் தட்ரது மத்தவங்கள கேலிசெய்யிறதுனு வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த ஆமை ஒரு நாள் மரத்தடியில் படுத்திருந்த அந்த ஆமை வானத்துல பறக்குர பறவைகளை வேடிக்க பாத்
துகிட்டு இருந்துச்சு
சே நம்மளால பறக்க முடியாம போச்சே நமக்கு மட்டும் பறக்குற சக்தி இருந்து அந்த வானத்துல பறந்த பூமியோட அழக வானத்துல இருந்து பாத்து ரசிக்கலாமேனு தனக்கு தானே பேசிகிட்டு இருந் துச்சு
அப்பத்தா வானத்துல பறந்து வந்த ஒரு கழுகு அந்த ஆமை உக்காந்திருந்த பாறைக்கு பக்கத்துல வந்து உக்காந்துச்சு
இதப்பாந்த அந்த ஆமை கழுகாரே கழுகாரே எனக்கும் உங்களப்போல பறக்கனும் போல ஆசையா இருக்கு என்னயும் தூக்கிகிட்டு வானத்துல பறக்குரீங்களானு கேட்டுச்சு
இதக்கேட்ட அந்த கழுகு உன்னத் தூக்கிட்டு பறந்தா எனக்கு என்ன கிடைக்கும்னு கேட்டுச்சு
உடனே அந்த ஆமை எனக்கு புதையல் இருக்கிற இடம் தெரியும்
என்ன தூக்கிட்டு பறந்திங்கன்னா அந்த இடத்த உங்களுக்கு காட்டுரேனு சொல்லுச்சு
உடனே அந்த கழுக அந்த அமைய துாக்கிகிட்டு பறந்துச்சு
வானத்துல பறந்த அந்த ஆமை ஆகா வானத்துல பறக்குரது எவ்வளவு சந்தோசமா இருக்குனு சொல்லி சிரிச்சுச்சு
ஆமைய திரும்பவும் கீழ இறக்கிவிட்ட அந்த கழுகு எங்க என்னோட புதையல் இருக்கு சொல்லுனு
கேட்டுச்சு
புதையலா புதையல் இருக்கிற இடம் எனக்கு தெரிஞ்சா நான் அத எடுத்து சந்தோசமா இருக்க மாட்-ே டனானு சொல்லி சிரிச்சுச்சு
இதக்கேட்ட அந்த கழுகு தான் ஏமாத்த பட்டத தெரிஞ்சு கிச்சு
உடனே அந்த ஆமைக்கு நல்ல பாடம் புகட்டனும்னு முடிவு பன்னுச்சு
இல்ல எனக்கு தெரிஞ்ச ஒரு புதையல் பக்கத்து காட்டுல இருக்கு அதவிட நீ சொன்ன புதையல் பெருசா இருக்குமோனு நினைச்சேன்னு சொல்லுச்சு
இதக்கேட்ட ஆமை உண்மையாவே புதையல் இருக்கா அப்ப மீண்டும் இந்த கழுக ஏமாத்தி பு-ை தயல் இருக்கிற இடத்த தெரிஞ்சுக்கனும்னு முடிவு பன்னுச்சு அந்த ஆமை
உடனே கழுகாரே கழுகாரே புதையல் இருக்குரது உண்ம தான் நீங்க உங்க புதையல் காட்டுங்க நான் என் புதையல் காட்ரேனு சொல்லுச்சு
உடனே மறுபடியம் அந்த ஆமைய தூக்கிட்டு பறந்த அந்த கழுக
ஒரு பெரிய பாறை மேல போயே டாமாள்னு போட்டுச்சு அந்த அமைய
வேகமா வானத்துல இருந்த விழந்ததால் அந்த அமையோட ஓடு உடைஞ்ச போச்சு
அடடா நமக்கு பாதுகாப்பான ஓடு உடைஞ்சு போச்சேனு வருத்தபட்டுச்சு அந்த ஆமை
மத்தவங்கள கேலி பன்னி அவுங்கள மட்டம் தட்டுன நமக்கு நல்ல தண்டன அந்த கழுகு கொடுத் துருச்சுனு நினைச்சு வலியயில் துடிச்சு மயங்கி போச்சு அந்த ஆமை
குழந்தைகளா இந்த கதையில் வார ஆமை மாதிரி மத்தவங்கள ஏமாத்தனும்னு நீங்க நினைச்சிங்கன்னா நீங்கதான் ஏமாந்து போவீங்க அதனால எப்பவும் நேர்மையா இருங்க