Site icon தமிழ் குழந்தை கதைகள்

Top 50 Tamil Small Story with moral – 50 நீதி கதைகள்

Top 50 Tamil Small Story with moral – 50 நீதி கதைகள்:- Here are the top 50 Moral stories in Tamil for your kids

ஊக்கமது கைவிடேல் -The Shoemaker And The Elves-செருப்பு தைப்பவரும் குள்ள மனிதர்களும்

ஊக்கமது கைவிடேல் -The Shoemaker And The Elves-செருப்பு தைப்பவரும் குள்ள மனிதர்களும் :- ஒரு ஊருல ஒரு வயசான செருப்பு செய்ற தாத்தா இருந்தாரு ,அவருக்கு ரொம்ப வயசானதால அவரால ரொம்ப உழைக்க முடியல அதனால சாப்பாட்டுக்கே அவரும் அவர் மனைவியும் கஷ்டப்பட்டாங்க

ஒரு நாள் தன்னோட கடைல இருந்த கடைசி தோல வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப அவரோட மனைவி வந்து கேட்டாங்க ரொம்ப நேரமாச்சு இன்னும் என்ன செய்ரீங்கனு கேட்டாங்க

அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு இதுதான் நம்ம கிட்ட இருக்குற கடைசி தோல் இதவச்சு நல்ல சூ செய்ய போறேன்னு சொன்னாரு

ரொம்ப நேரமாச்சு காலைல எந்திரிச்சு அத செய்ங்கன்னு சொன்னாங்க அந்த பாட்டி ,உடனே அவர் அந்த தோல அப்படியே வச்சுட்டு தூங்க போய்ட்டாரு

மறுநாள் காலைல வந்து பாத்தா அந்த தோல் நல்ல சூவா மாறியிருந்துச்சு ,அடடா இது என்ன நான் இந்த சூவ செய்யலையே யார் இத செஞ்சிருப்பான்னு அத எடுத்து பாத்தாரு

அந்த சூ ரொம்ப அழகாவும் நல்லா உழைக்கிற மாதிரியும் இருந்துச்சு ,அத எடுத்து கடைக்கு முன்னாடி வச்சாரு தாத்தா

அப்ப அங்க வந்த ஒரு வியாபாரி ,அடடா என்ன ஒரு அற்புதமான சூ இந்த சூ இருந்தா பாலைவனத்துல கூட நடக்கலாம்னு சொல்லி நிறைய காசு கொடுத்து அந்த சூவ வாங்கிட்டு போனாரு

ரொம்ப சந்தோஷமான அந்த தாத்தா கடைக்கு போயி நிறைய சாப்பிடும் சூ செய்றதுக்கு நிறைய தோலும் வாங்கிட்டு வந்தாரு

வாங்கிட்டு வந்த தோல வெட்டி மேஜைமேல வச்சுட்டு தூங்க போனாரு ,மறுநாள் வந்து பாத்தா இந்த தோலை அருமையான ரெண்டு சூவா யாரோ செஞ்சிருந்தாங்க

அந்த சூவ எடுத்து கடைக்கு முன்னாடி வச்சாரு அந்த தாத்தா ,உடனே அந்த சூ வித்துடுச்சு ,ரொம்ப சந்தோஷமான அந்த தாத்தா நிறைய தோல்வாங்கிட்டு வந்து மேஜைல வச்சிட்டு தூங்க போனாரு

மறுநாளும் இதேமாதிரி நிறைய சூ யாரோ செஞ்சு வச்சிட்டு போயிருந்தாங்க ,அத வாங்க கடை முன்னாடி ஒரே கூட்டமா இருந்துச்சு

அந்த தாத்தா பாட்டி கிட்ட சொன்னாரு ,யார் இந்த சூவ செய்றானே தெரியலையே ,நம்ம கடைய பூட்டிட்டுட்டுதான் தூங்கறோம் ,கடைக்குள்ள யாரும் வந்த மாதிரியும் தெரியலன்னு சொன்னாரு

உடனே அந்த தாத்தவுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,நாம ரெண்டு பேரும் இன்னைக்கு தூங்காம இருந்து பாப்போம்னு சொல்லிட்டு பீரோவுக்கு பின்னாடி பொய் அந்த தாத்தாவும் பாட்டியும் ஒளிஞ்சுக்கிட்டாங்க

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா பூன வர்ற அளவு ஓட்ட வழியா ரெண்டு அழகான குட்டி மனிதர்கள் வந்தாங்க

ரெண்டு பேரும் சேந்து அந்த மேஜைல இருக்குற தோல எடுத்து அழகான சூ தயாரிச்சாங்க ,இத பாத்த பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஒரே ஆச்சர்யம்

அந்த பாட்டி அன்னைக்கு ரெண்டு அழகான குட்டி சட்டையும் ,நிறைய உணவும் அந்த குள்ளமனிதர்களுக்கு செஞ்சு மேஜை மேல வச்சுட்டு தூங்க போய்ட்டாங்க

ஓட்ட வழியா வந்த அந்த ரெண்டு குள்ள மனிதர்களும் ,பாட்டியோட சாப்பிட சாப்டுட்டு அந்த புது துணிய போட்டுக்கிட்டாங்க

இத ஒளிஞ்சிருந்து பாத்த தாத்தாவும் பாட்டியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க ,கொஞ்ச நாள் கழிச்சு தாத்தா சொன்னாரு நமக்கு இனிமே வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை நமக்கு சூ செய்ய நல்ல வேலைகாரங்க கிடைச்சுட்டாங்க, நாம சாப்பாடு கொடுத்தா அவுங்க வேல செய்வாங்கன்னு முட்டாள் தனமா பேசுனாரு

மறுநாள் காலைல வந்து பாத்தா சாப்பாடு அப்படியே இருந்துச்சு ,சூ தைக்க வச்சிருந்த தோலும் அப்படியே இருந்துச்சு ,என்ன ஆச்சுன்னு தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒரே குழப்பம்

அதுக்கு அப்புறம் அந்த குள்ள மனிதர்கள் அந்த கடைக்கு வரவே இல்ல ,அப்ப பாட்டி சொன்னாங்க நீங்க எப்ப உழைக்குறத கைவிட்டீங்களோ அப்ப இருந்து தான் அவுங்க வர்றது நின்னு போச்சு

ஊக்கமது கைவிடேல் அப்படிங்கிற பழமொழிக்கு ஏற்ப எப்பவும் உழைக்குறத கைவிட கூடாதுனு சொன்னாங்க

பாட்டியோட பேச்ச புரிஞ்சுகிட்டு தாத்தா மறுபடியும் சூ செய்ய ஆரம்பிச்சாரு ,இந்த தடவ அந்த குள்ள மனிதர்கள் செஞ்ச சூ மாதிரியே செஞ்சு கஷ்டம் இல்லாம வாழ்ந்தாங்க அந்த தாத்தாவும் பாட்டியும்


முட்டாள் அரசன் – The Emperors New Clothes Story in Tamil

முட்டாள் அரசன் – The Emperors New Clothes Story in Tamil:- ஒரு ஊருல ஒரு அரசர் இருந்தாரு,எப்பவும் புகழ்ச்சி மேல அக்கறையா இருந்த அவரு ,யார் தன்னை புகழ்ந்தாலும் அப்படியே நம்பிடுவாரு.

அதனால அவரோட மந்திரிங்க எல்லாரும் எப்பவும் அவர புகழ்ந்துகிட்டே இருப்பாங்க, நாட்டுல எல்லாரும் சந்தோசமா இருக்காங்க அதுக்கு நீங்கதான் காரணம்னு சொல்லி அவர நம்ப வச்சுட்டு இருந்தாங்க அந்த மந்திரிமார்கள்

அங்க ஒரு வயசான மந்திரியும் இருந்தாரு ,அவருக்கு இந்த விஷயம் கொஞ்சம் கூட பிடிக்கல ,அவர் அரசர்கிட்ட வந்து நீங்க யார் என்ன சொன்னாலும் நம்பிடுறீங்க நாட்டுல எல்லாரும் கஷ்டப்படுறாங்க அத கொஞ்சம் கவனிங்கன்னு சொன்னாரு

உடனே போன அந்த ராஜா அவர வேலைய விட்டு அனுப்பிச்சுட்டாரு,சோகமான அந்த மந்திரி வீட்டுக்கு வந்தாரு ,அங்க அவரோட மகன் இருந்தான் ,

அப்பா ஏன் சோகமா இருக்கீங்கன்னு கேட்டான் ,அதுக்கு அந்த மந்திரி சொன்னாரு ,புகழுக்கு ஆசைப்படுற அரசுக்கு எப்படி புத்தி சொல்றதுன்னு தெரில ,நான் புத்தி சொல்ல போய் என்னையே வேலைய விட்டு அனுப்பிச்சிட்டாருன்னு சொன்னாரு ,

புத்திசாலியான அந்த மகன் சொன்னான். நான் போய் அந்த அரசருக்கும் பொய் சொல்லிட்டு தெரியுற மந்திரிகளுக்கு பாடம் புகட்டுறேன்னு சொல்லிட்டு அரண்மனைக்கு போனான்

அரசே நான் ஒரு வியாபாரி நான் நீண்ட தூரம் கடல் பயணம் செஞ்சு போனப்ப இந்த அதிசய சட்டையை கேள்விப்பட்டு உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன்னு சொன்னான்.உடனே அரசர் எங்க அந்த சட்டைய காட்டுன்னு சொன்னாரு ,உடனே அந்த பையன் வெறும் கைய சட்ட மாதிரி காமிச்சான்.இது வீண் புகழ்ச்சி செய்றவங்களுக்கும் பொய் சொல்றவங்களுக்கும் கண்ணுக்கு தெரியாதுன்னு சொன்னான்

இத பாத்த மந்திரிகளுக்கு பகீர்னு இருந்துச்சு ,இந்த சட்ட கண்ணுக்கு தெரிலன்னு சொன்னா நாம கெட்டவங்கன்னு அரசருக்கு தெரிஞ்சுடும்னு பொய் சொல்ல ஆரம்பிச்சாங்க.

அரசே இன்னைக்கு உங்களோட பிறந்தநாள் அதனால இந்த சட்டைய போடுங்கன்னு அந்த பையன் சொன்னான் ,உடனே சட்டையை கழட்டிட்டு நின்னரு ,அவருக்கு சட்ட போட்டு விடுறமாதிரி சைகை செஞ்சான் அந்த பையன்

சட்ட இல்லாம நின்ன அரசர பாத்த மந்திரிகளுக்கு என்ன சொல்றதுன்னு தெரில ,உண்மையாவும் சொல்ல முடியல,அதனால அரசே இது ரொம்ப நல்ல சட்டை உங்களுக்கு பொருத்தமா இருக்குன்னு சொன்னாங்க.

ரொம்ப சந்தோசப்பட்ட அந்த ராஜா அப்படியே அரண்மனைய விட்டு வெளிய வந்தாரு ,

அவரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த எல்லாரும் வாசல்ல ராஜாவ பாத்து திகைச்சு போய்ட்டாங்க

ஒருத்தருக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல ,அரசருக்கு பின்னாடியே மந்திரிகளும் நடந்து போனாங்க ,

அப்ப ஒரு குட்டி பையன் சொன்னான் ,என்ன இது அரசர் சட்ட இல்லாம வெளிய போறாருன்னு சொல்லி சிரிச்சான் .அத கேட்ட எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சாங்க.ராஜாவுக்கு ஒரே வெக்கமா போச்சு

அப்ப அந்த கூட்டத்துக்கு வந்த அந்த வயசான மந்திரி சொன்னரு ,எல்லாரும் சிரிக்குறத நிறுத்துங்க ,நான் தான் நீங்க எல்லாரும் சாப்பாடு துணிமணி இல்லாம கஷ்டப்படுறீங்கன்னு சொன்னேன் அதனால ரொம்ப வருத்தப்பட்ட ராஜா இனிமே வெளிய போகும்போது சட்ட போடாம தான் போவேன் ,

என்னைக்கு என்னோட நாட்டு மக்கள் நல்ல சாப்பாடோட ,நல்ல சட்டையோட வாழுறாங்களோ அப்பத்தான் நான் சட்ட போடுவேன்னு சபதம் செஞ்சிருக்காரு அப்படின்னு சொன்னாரு ,

இத கேட்ட எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செஞ்சாங்க தெய்வத்துக்கு ஒப்பான அரசர் தங்களுக்கு கிடைச்சிருக்குறத நினச்சு எல்லாரும் சந்தோச பட்டாங்க.

இத எல்லாம் கேட்ட அரசருக்கு அப்பதான் புரிஞ்சது அந்த மந்திரிகள் சொன்னது உண்மை இல்ல ,நாட்டு மக்கள் ரொம்ப கஷ்ட படுறாங்க,நாம்தான் முட்டாள் தனமா வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு இப்படி சட்டை இல்லாம தெருவுல நிக்க வேண்டியதா போய்டுச்சு ,

இனிமே நல்ல படியா ஆட்சி செய்யணும்னு நினச்சு ,அந்த பொய் சொன்ன மந்திரிகளை சிறைல அடைக்க உத்தரவிட்டாரா,

சமயோஜித புதையல தன்னோட மானத்த காப்பாத்துன மந்திரியா தன்னோட முதல் மந்திரியா நியமிச்சு ,மக்களோட கஷ்டம் போக ஆட்சி செய்ய ஆரம்பிச்சாரு

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

 தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும்

The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும் :- ஒரு நாள் காட்டு பகுதியில ஒரு குதிரை நடந்து போய்கிட்டு இருந்துச்சு

அப்ப அந்த பாதைல ஒரு நத்தை ஊர்ந்து போய்கிட்டு இருக்குறத பாத்துச்சு

திமிர்பிடிச்ச அந்த குதிரை “ஏய் நத்தையாரே ஏன் இப்படி மெதுவா நடக்குறீங்க ,என்ன மாதிரி வேகமா நடங்கன்னு சொல்லுச்சு “

குதிரையோட திமிர் பேச்ச கேட்ட அந்த நத்தை இது என்னோட இயல்பு ,நீ உன்னோட வேலைய பாருன்னு சொல்லிட்டு மெதுவா நடக்க ஆரம்பிச்சுச்சு.

நத்தைய பாத்து தொடர்ந்து கேலி செஞ்சுக்கிட்டே இருந்துச்சு அந்த குதிரை ,கோபமான அந்த நத்தை திமிர் பிடிச்ச குதிரைக்கு பாடம் புகட்டணும்னு நினச்சுச்சு உடனே, நீ அவ்வளவு பெரிய திறமைசாலினா என்கூட போட்டிக்கு வர்றியான்னு கேட்டுச்சு

நான் எவ்வளவு வேகமா ஓடுவேன் தெரியுமா ,மெதுவா நடக்குற உன்னால என்ன ஜெயிக்க முடிஞ்சா ஜெயிச்சுக்கோ நாளைக்கு காலைல இதே இடத்துல போட்டி வச்சுக்கலாம்னு அந்த குதிரை சொல்லுச்சு

தன்னோட நண்பர்கள் கிட்ட வந்த அந்த நத்தை நடந்த விஷயத்தை சொல்லுச்சு ,நான்பர்களே நீங்க எனக்கு உதவி செஞ்சீங்கன்னா அந்த திமிர்பிடித்த குதிரைக்கு ஒரு பாடம் புகட்டலாம்னு சொல்லி ,தன்னோட திட்டத்த சொல்லுச்சு

அந்த திட்டத்த கேட்ட எல்லா நத்தைகளும் உதவுறதுக்கு ஒத்துக்கிடுச்சுங்க

மறுநாள் காலைல குதிர வர்றதுக்கு முன்னாடியே மைதானத்துக்கு வந்த நத்தைகள் எல்லாம் ஓடுற பாதை எல்லாத்துலயும் ஒவ்வொரு நத்தையா ஒளிஞ்சு கிடுச்சுங்க

குதிரை வந்ததும் போட்டி ஆரம்பமாச்சு ,

பலசாலியான அந்த குதிரை வேகமா ஓடி ஆரம்பிச்சுச்சு,

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா இருந்த புதர்ல ஒளிஞ்சுக்கிட்டு இருந்த இன்னொரு நத்தை ஓடுற பாதைக்கு வந்துச்சு

இது தான் தன்னோட போட்டி போடுற நத்தைனு குதிரைக்கு நம்ப வைக்க ஓடுற மாதிரி நடிச்சுச்சு ,அடடா இது என்ன நான் இவ்வளவு வேகமா ஓடி வந்தும் இந்த நத்தை எனக்கு முன்னாடி ஓடிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சுட்டு தொடர்ந்து ஓட ஆரம்பிச்சது அந்த குதிரை

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா இன்னொரு நத்தை மரத்துக்கு பின்னாடி இருந்து ஓடுற பாதைக்கு வந்து ஓட ஆரம்பிச்சது ,இத பாத்த குதிரைக்கு குழப்பமா இருந்தாலும் தான் தோத்துக்கிட்டு இருக்கோம்ன்ற நினைப்பு வந்துச்சு ,உடனே வேகமா ஓட ஆரம்பிச்சுச்சு

கடைசியா ஒரு நத்தை பாறைக்கு நடுவில இருந்து வந்து போட்டி முடியிற இடத்துக்கு வந்துச்சு ,

குதிரை அந்த எல்லை கொட்ட தாண்டுறதுக்கு முன்னாடி அந்த நத்தை எல்லை கொட்ட தாண்டிடுச்சு

இது எல்லாத்தையும் உண்மைன்னு நம்புனா அந்த குதிரை ,நத்தை தன்ன தோக்கடிச்சுடுச்சு நம்புச்சு,தன்னோட அறிவில்லாத திமிர்பிடிச்ச குணத்தால நத்தைகிட்ட போட்டி போட்டு தோத்துட்டமேன்னு நினச்சு வறுத்த பட்டுச்சு

உடனே அந்த நத்தைகிட்ட மன்னிப்பு கேட்டுச்சு

Moral:- நீதி :- புத்திமான் பலவான்

ராபின் ஹூட் – Robin Hood story in Tamil

ராபின் ஹூட் – Robin Hood story in Tamil:- இங்கிலாந்து நாட்டுல இருக்குற நாட்டிங்ஹாம்ன்ற ஊருல ரிச்சர்ட்ங்கற அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு

அவரோட தம்பி ஜானும் ரிச்சர்டும் சேர்ந்து கொடூர ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாங்க,

ஏழைகளுக்கு எந்த சலுகையும் காட்டாம ,அவுங்க கிட்ட இருந்து நிறைய வரிப்பணத்தை பிடுங்கிட்டு இருந்தாங்க

அந்த ஊருல இருக்குற ராபின் ஹூட் அந்த ஏழைகளுக்கு உதவி செஞ்சான் ,

ராபின் ஹூட்டும் அவனோட நண்பனும் சேர்ந்து ஏழைகளுக்கு உதவ ஆரம்பிச்சாங்க,

அரசரோட பொருட்க்களை கொள்ளையடித்து இல்லாத ஏழைகளுக்கு கொடுத்தாங்க

அரசரும் ,இளவரசரும் அந்த நாட்டோட தளபதியா கூப்பிட்டு ராபின் ஹூட்ட பிடிக்க சொல்லி சொன்னாங்க

எவ்வளவு முயற்சி செஞ்சாலும் ராபின் ஹூட்ட பிடிக்க முடியல

ராபின் ஹூட்ட பிடிச்சி கொடுக்குறவங்களுக்கு ஆயிரம் தங்க காசு கொடுக்குறோம்னு சொல்லி பாத்தாங்க

ஆனா அந்த நாட்டுல இருக்குற எல்லோருக்கும் ராபின் ஹூட் செய்யிறது சரினு தோணுச்சு ,அதனால யாருமே அவன காட்டி கொடுக்க வரல

கோபமான அந்த தளபதி ஒரு தந்திரம் பண்ணினாரு ,இந்த அரண்மனைல ஒரு வில் போட்டி நடக்கும்னு அறிவிச்சாரு

காட்டுக்கு வந்த ஒரு பையன் ராபின் ஹூட்கிட்ட நீங்க அந்த வில் போட்டியில கலந்துகிடணும்னு சொன்னான் ,அதுக்கு ராபின் ஹூட்டோட நண்பன் வேணாம்னு சொன்னான் ,

இந்த ஊர்லயே நீதான் வில் வித்தைல கெட்டிக்காரன்னு எல்லாருக்கும் தெரியும் ,அப்படி இருக்கிறப்ப இப்படி ஒரு போட்டி வச்சிருக்குறது, உன்ன பிடிக்கத்தானு எச்சரிச்சான்

யோசிச்சு பாத்த ராபின் ஹூட் அந்த வில் போட்டியில நாம மாரு வேசத்துல கலந்துக்குவோம்னு சொல்லிட்டு அரண்மனைக்கு கிளம்புனான்

தலைக்கு முக்காடு போட்டுக்கிட்டு ராபின் ஹூட்டும் அவனோட நண்பனும் அரண்மனைக்கு வந்தாங்க,அங்க இருக்குற வில்ல எடுத்து சரியா குறிப்பது அடிச்சான் ராபின் ஹூட்

அந்த அம்பு சரியா போயி இலக்க அடிச்சுச்சு ,ஊர் மக்கள் எல்லோரும் சந்தோஷத்துல குதிச்சங்க

அடுத்து தொடர்ந்து அம்பு விட்ட ராபின் ஹூட் எல்லா அம்பையும் குறி தப்பாம இலக்குள அடிச்சான்

இத பாத்த தளபதிக்கு அப்பதான் புரிச்சுச்சு ,இப்படி குறி பாத்து வில் விடுற வீரன் ராபின் ஹூட்ட தவிர வேற யாராவும் இருக்க முடியாதுன்னு முடிவு பன்னுன்னான்

உடனே அரண்மனை காவலாளிகள கூப்டு ராபின் ஹூட் பிடிக்க சொன்னான்

கவலைகளும் ராபின் ஹூட்ட சுத்தி நின்னு அவனை ஓட விடாம பிடிச்சாங்க

அப்ப இளவரசர் ஜான் சொன்னான் ,நல்லது தளபதியே நீங்க நல்ல திட்டம் போட்டு ராபின் ஹூட்ட பிடிச்சிடீங்கன்னு சொன்னான்

அப்ப யாருக்குமே தெரியாம இளவரசருக்கு பின்னாடி வந்து நின்னுட்டு இருந்த ராபின் ஹூட் நண்பன் ஒரு கத்திய எடுத்து இளவரசரோட கழுத்துல வச்சான்

எதிர்ப்பாராத இந்த செயல பாத்த எல்லாரும் திகைச்சு பொன்னாக, ராபின் ஹூட் ட விட்டுட சொல்லி சொன்னாரு தளபதி

ராபின் ஹூட்டும் அவனோட நண்பனும் தப்பிச்சு காட்டுக்குள்ள போய்ட்டாங்க

அப்பத்தான் ராபின் ஹூட் நண்பன் சொன்னான் நாம அங்க இருந்து தப்பிச்சு மட்டும் வரல அங்க இருந்த வில் போட்டிக்கான பரிசு பொருளையும் தூக்கிட்டு வந்துட்டோம்னு சொல்லி சிரிச்சான்

அதுக்கு அப்புறமா தொடர்ந்து பணக்காரங்க கிட்ட இருந்து திருடு ஏழைகளுக்கு கொடுத்து உதவுகிட்டே இருந்தாரு ராபின் ஹூட்


The Pied Piper of Hamelin Story in Tamil – நீதி கதை தமிழில்

The Pied Piper of Hamelin Story in Tamil – நீதி கதை தமிழில் :- முன்னொரு காலத்துல ஹாம்லின் அப்படின்னு ஒரு நகரம் இருந்துச்சு,அந்த நகரத்துல நிறைய பேர் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்தாங்க .

அந்த நகரத்துல திடீர்னு எலிங்க தொல்ல அதிகமாச்சு ,எங்க பாத்தாலும் எலிகூட்டமாவே இருந்துச்சு .ஒரு இடம் விடாம எலிங்க சுத்திக்கிட்டு இருந்துச்சுங்க

எல்லா வீடு சமையலறையிலயும் சாப்பிட்ட பத்திரமாவே வைக்க முடியல ,எல்லாத்தையும் எலி கூட்டம் தின்னு தீக்க ஆரம்பிச்சுதுங்க

அந்த நகர வாசிகள் எல்லாரும் ரொம்ப கவலைப்பட்டாங்க ,எல்லோரும் ஒண்ணுக்கு கூடி இந்த எலி தொந்தரவ எப்படி போக்குறதுன்னு விவாதிச்சாங்க

அப்ப தான் இந்த சேதி கேட்டு ஒரு புல்லாங்குழல் ஊதுறவன் அங்க வந்தான்

பெரியோர்களே எனக்கு இந்த எலிகளை பிடிக்க தெரியும் ,எனக்கு நிறைய பணம் கொடுத்தீங்கன்னா இங்க இருக்குற எல்லா எலிகளயும் ஒரேநாள்ல என்னால பிடிக்க முடியும்னு சொன்னான்

அத கேட்ட நகர வாசிகள் சரின்னு சொன்னாங்க ,உடனே தன்னோட பைல இருந்து ஒரு புல்லாங்குழல எடுத்து வாசிக்க ஆரம்பிச்சான் ,

அந்த இசை ரொம்ப ரம்மியமா இருந்துச்சு ,உடனே எல்லா எலிகளும் அந்த இசைக்கு மயங்கி மெதுவா அவன் பின்னாடி நடக்க ஆரம்பிச்சதுங்க,

நகரத்துல இருக்குற எல்லா தெருவுக்கும் போன அவன் புல்லாங்குழல வாசிச்சுகிட்டே நடந்தான் ,அப்படியே மெதுவா காட்டுப்பாக்கம் போனான்

அங்க இருக்குற ஒரு மலைய கடந்து ஒரு பெரிய நதிக்குள்ள இறங்குனான் ,மயக்கத்துல இருந்த எலிங்க எல்லாம் அவன் பின்னாடியே நதிக்குள்ள குதிச்சதுங்க

அப்ப எல்லா எலிகளும் அந்த நதி தண்ணில முங்கிடுச்சுங்க ,தன்னோட வேலைய முடிச்சுட்டு தன்னோட பரிச வாங்க நகரத்துக்கு வந்தான் அவன்

எலி தொல்ல தீர்ந்த நகர வாசிங்க அவனுக்கு நன்றி சொன்னாங்க ,ஆனா அவன் கேட்ட பணத்த மட்டும் கொடுக்க பட்டேன்னு சொல்லி அவன ஏமாத்த பாத்தாங்க

கோபமான புல்லாங்குழல் ஊதுறவன் இன்னொரு புல்லளங்குழல எடுத்து ஊத்திக்கிட்டே நடக்க ஆரம்பிச்சான்

இந்த தடவ அந்த நகரத்துல இருந்த எல்லா குழந்தைகளும் அவன் பின்னாடிபோக ஆரம்பிச்சாங்க

எல்லா குழந்தைகளையும் கொட்டிட்டு காட்டுக்கு போன அவன் அங்க இருக்குற ஒரு குகைக்குள்ள அவுங்கள விட்டு பூட்டிட்டான்

குழந்தைகளை காணோம்னு தேடுன நகர்வாசிகளுக்கு உண்மை தெறிச்சது ,அடடா நாம ஒருத்தர ஏமாத்த நினைச்சு ,நம்ம ஏமாந்துட்டமேன்னு எல்லாரும் புல்லாங்குழல் ஊதுறவன தேடி போனாங்க

அவன் கிட்ட தயவு செய்து எங்கள மன்னிச்சிடுங்க எங்க குழந்தைகள திருப்பி அணிப்பிடுங்க ,உங்க பணம் இதோன்னு சொல்லி ,பணப்பைய அவன்கிட்ட கொடுத்தாங்க

உடனே அந்த புல்லாங்குழல் ஊதுறவன் குகைய அடைச்சு வச்சிருந்த பாறைய தொறந்து எல்லா குழந்தைகளையும் வெளியில விட்டான்

அப்ப அந்த குழந்தைகள் கிட்ட சொன்னான் ,நீங்க ஒருத்தர ஏமாத்த நினைசீங்கன்னா நீங்க தான் ஏமாந்து போவீங்க ,அதனால யாரையும் ஏமாத்த நினைக்காம நல்லபடியா வாழுங்கனு சொல்லி அனுப்பிச்சான் .


Gingerbread Man (Be careful who you trust) – ரொட்டி மனிதன்

Gingerbread Man (Be careful who you trust) – ரொட்டி மனிதன் :- ஒரு வீட்டுல ஒரு பாட்டியும் தாத்தாவும் இருந்தாங்க ,ஒருநாள் அந்த பாட்டி மனுச வடிவத்துல ரொட்டி சுட்டாங்க

சாப்பிடலாம்னு அத அடுத்தப்ப அந்த ரொட்டி மனிதன் ஜன்னல் வழியா குதிச்சு ஓடிருச்சு

உடனே பாட்டியும் தாத்தாவும் அத தொரத்திக்கிட்டே ஓடுனாங்க

ரொட்டி மனிதன் சொல்லுச்சு உங்களுக்கு நான் கிடைக்க மாட்டேன்னு சொல்லிட்டு தொடர்ந்து ஓடுச்சு

கொஞ்ச தூரத்துக்கு அப்பறமா ஒரு பன்னி குட்டி இத பாத்துச்சு ,உடனே அதுக்கும் ஐந்தே ரொட்டி மனித சாப்பிடனும்னு ஆச வந்துச்சு

அதுவும் அந்த தாத்தா பாட்டி கூட சேந்து அந்த ரொட்டி மனிதன தொரத்த ஆரம்பிச்சிச்சு

யாருகிட்டயும் மாட்டிக்காம தொடர்ந்து ஓடுச்சு அந்த ரொட்டி மனுஷன்

கொஞ்ச தூரத்துல ஒரு மாடு இத பாத்துச்சு ,அடடா இந்த ரொட்டி மனுசன சாப்டா நல்லா இருக்குமேன்னு அதுவும் தொரத்த ஆரம்பிச்சுச்சு

யார்கிட்டயும் மாட்டாம ஓடுன ரொட்டி மனிதன் கடைசியா ஆத்துப்பக்கம் வந்தான் ,அடடா இந்த ஆத்துல இறங்குனா நாம கரைஞ்சு போய்டுவமேன்னு நினச்சுச்சு

அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு ,இந்த ரோட்டிய எப்படி சாப்பிட்றதுன்னு யோசிச்சு ,ரொட்டியே நீ என் மேல ஏறிக்கிட்டேனா உன்ன நான் காப்பாத்துறேன்னு சொல்லுச்சு

உடனே அந்த ரொட்டி மனிதன் நரியோட தலைல ஏறிக்கிடுச்சு ,கொஞ்சதூரம் போனதுக்கு அப்புறமா வாய நல்லா தொறந்து தலைய ஆட்டுச்சு ரொட்டி மனிதன் சரியா அதோட வாய்க்குள்ள விழுந்துச்சு

ரொட்டி மனிசனோட வாழ்க்கை இப்படி “யாரையும் சீக்கிரமா நம்ப கூடாதுங்குற “ நீதியோட முடிஞ்சுச்சு


தங்க ஆப்பிள் The golden apple story

தங்க ஆப்பிள் The golden apple story :- ஒரு காட்டுக்கு பக்கத்துல இரண்டு சகோதரர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அதுல அண்ணன் தன்னோட தம்பிய எப்பவும் அடித்துக்கிட்டே இருப்பான்

தம்பிக்கு கொடுக்காம எல்லா பொருளையும் தானே வச்சுக்கிட்டு சுயநலமா இருந்தான் அந்த அண்ணன்,அண்ணன் எவ்வளவுதான் கொடும பண்ணுனாலும் தம்பி அமைதியாவே இருப்பான்

ஒரு நாள் அந்த அண்ணன் காட்டுக்கு விறகு வெட்ட போனான் ,நிறைய விறகுகள வெட்டுனான் அவன் ,அப்ப அங்க ஒரு தங்க ஆப்பிள் மரத்த பாத்தான் அந்த அண்ணன்

உடனே அந்த தங்க ஆப்பிள் மரத்த வெட்ட போனான் , அப்ப ஆப்பிள் மரம் சொல்லுச்சு என்ன விட்டத நான் உனக்கு நிறைய தங்க ஆப்பிள் தரேன்னு சொல்லுச்சு

பேராசை பிடிச்ச அந்த அண்ணன் தங்க ஆப்பிள விட உன்ன வெட்டுனா நிறைய பணம் கிடைக்கும்னு சொல்லி வெட்ட போனான்

கோபமான அந்த தங்க மரம் தங்க ஊசிநால அவன குத்துச்சு,வலி தாங்காம அங்கேயே விழுந்தான் அந்த அண்ணன்

தன்னோட அண்ணன் வீட்டுக்கு வராததுநால காட்டுக்கு போன அந்த தம்பி ,ஊசி குத்தி கீழ கிடந்த அண்ணன பாத்து வறுத்த பட்டான்

அப்ப அந்த மரம் சொல்லுச்சு நான் உனக்கு தங்க ஆப்பிள் தரேன் அவன இங்கயே விட்டுட்டு போய்டுன்னு சொல்லுச்சு

அத கேட்ட தம்பி சொன்னான் எனக்கு என் அண்ணன் தான் வேணும்போ சொன்னான் ,உடனே அந்த ஆப்பிள் மரம் ஆயிரக்கணக்கான தங்க ஆப்பிள்கள கொட்டுச்சு

தன்னோட கொடுமைய கூட தாங்கிகிட்டு தன்ன காப்பாத்துன தம்பிய பாத்து மன்னிப்பு கேட்டான் அந்த அண்ணன்

அப்ப அந்த ஆப்பிள் மரம் சொல்லுச்சு ,இந்த உலகத்துலயே சுயநலம் இல்லாம இருக்குறவங்களுக்குத்தான் எல்லாமே கிடைக்கும்,அதனாலதான் நிறைய ஆப்பிள் உங்களுக்கு கிடைச்சது இனியும் சுயநலமில்லாம உன்னோட தம்பி கூட இருன்னு சொல்லி அனுப்புடிச்சு


ஓநாயும் கொக்கும் – The Wolf and Crane Story in Tamil

ஓநாயும் கொக்கும் – The Wolf and Crane Story in Tamil :- ஒரு காட்டுல ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு, அந்த ஓநாய் ஒருநாள் சாப்டுகிட்டு இருந்துச்சு

அப்ப திடீர்னு ஒரு எலும்பு அதோட தொண்டைல சிக்கிக்கிச்சு ,அதனால ஓநாய்க்கு ஒரே வலி எடுத்துச்சு

அந்த காட்டுல இருக்குற எல்லா மிருகத்து கிட்டயும் போய் உதவி கேட்டுச்சு ,அந்த ஓநாய்

ஓநாயோட குணத்த தெரிஞ்சுக்கிட்ட விலங்குகள் எல்லாம் எங்களால முடியாதுன்னு சொல்லிட்டு போயிடுச்சுங்க

அப்ப அங்க ஒரு கொக்கு வந்துச்சு ,அப்ப ஓநாய் கேட்டுச்சு ,கொக்காரே கொக்காரே எனக்கு உதவு பண்ணுங்க ,என்னோட தொண்டைல இருந்து எழும்ப எடுத்து என்ன காப்பாத்துங்கனு கேட்டுச்சு

ஆனா அந்த கொக்கு தனக்கு ஆபத்து வந்துடும்னு தயங்குச்சு

ஓநாய் சொல்லுச்சு நீங்க எனக்கு உதவுனீங்கன்னா உங்க வாழ்க்கையிலயே பெருசா நினைக்கிற பரிசு நான் தருவேன்னு சொல்லுச்சு

உடனே அந்த கொக்கு தன்னோட நீண்ட மூக்க ஓநாயோட தொண்டைக்குள்ள விட்டு அந்த எழும்ப எடுத்துச்சு

உடனே அந்த ஓநாய் கொக்குக்கு நன்றி சொல்லுச்சு ,அதுக்கு அந்த கொக்கு கேட்டுச்சு எனக்கு ஏதோ பரிசு தரேன்னு சொன்னீங்களே அது எங்கன்னு கேட்டுச்சு

நீங்க வாழ்க்கைல அதிகமா நேசிக்கிறது உங்க உயிர்தான் ,நீங்க என்னோட வாய்க்குள்ள மூக்க விட்டப்ப உங்கள கடிக்காம இருந்தேன் பாருங்க அதுதான் நான் உங்களுக்கு கொடுத்த பரிசுன்னு சொல்லுச்சு

ஓநாயோட பேச்ச கேட்டு ஏமாந்துட்டமேன்னு நினைச்சது அந்த கொக்கு ,இருந்தாலும் ஒரு உயிர காப்பாத்துன திருப்தில பறந்து போச்சு அந்த அந்த கொக்கு


மந்திர பானை – The Magic Pot Kids Moral Story

மந்திர பானை – The Magic Pot Kids Moral Story:- ஒரு ஊருல விவசாயி இருந்தார் ,அவர் ஒருநாள் தன்னோட நிலத்துல உழுதுகிட்டு இருந்தார் ,அப்ப ஒரு பானை தென்பட்டுச்சு

உடனே அதுக்குள்ள புதையல் இருக்குமான்னு பாத்தாரு ,ஆனா அந்த பானைக்குள்ள ஒண்ணுமே இல்ல ,தொடர்ந்து அந்த இடத்த தோண்டி புதையல் இருக்கான்னு தேடுன்னாரு

அவருக்கு ஒண்ணுமே கிடைக்கல ,சோர்வான அவரு தன்னோட மண்வெட்டியை அந்த பனைக்குள்ள வச்சுட்டு ,மரத்தடியில் போய் ஓய்வெடுக்க ஆரம்பிச்சாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா வந்து பாத்தா அந்த மண்வெட்டி 100 மண்வெட்டியா மாறியிருந்துச்சு

ஆகா இது ஏதோ மந்திர பானை போலனு சொல்லிட்டு ஒரு மாம்பழத்த எடுத்துட்டு வந்து அதுக்குள்ள போட்டாரு ,அந்த மாம்பழமும் 100 மாம்பலமா மாறுச்சு

அந்த 100 மாம்பழங்களை சந்தையில வித்து நிறைய பணம் வாங்குனாரு

வீட்டுக்கு வந்த அவர் தன்னோட மனைவி கிட்ட நடந்தத சொன்னாரு ,உடனே அவுங்க ஒரு தங்க நாணயத்த அதுக்குள்ள போட்டாங்க ,அந்த மந்திர பான அந்த ஒரு தங்க காச 100 தங்க காசா மாத்திருச்சு

அந்த மந்திர பானயோட உதவினால பணக்காரரா ஆனாரு அந்த விவசாயி ,இத பாத்த பக்கத்துக்கு வீட்டுக்காரங்களுக்கு சந்தேகம் வந்துச்சு

அது எப்படி கொஞ்ச காலத்துக்குள்ள இவரு பணக்காரர் ஆனாருன்னு எல்லோரும் சந்தேகத்தோட பேசிக்கிட்டாங்க

அதுல ஒருதர்மட்டும் விவசாயியோட வீட்டு ஜன்னல் வழியா மந்திர பனையோட சக்திய பாத்தாரு

உடனே அந்த நாட்டோட ராஜாகிட்ட பொய் மந்திர பானையை பத்தி சொன்னாரு ,ராஜாவுக்கு கோவம் வந்துடுச்சு ,அது எப்படி இந்த நாட்டுல கிடைக்குற பொருள் எல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தம்,

அதனால அந்த மந்திர பானையை காவலர்கள விட்டு தூக்கிட்டு வர சொன்னாரு

காவலர்களும் அந்த மந்திர பானையை தூக்கிட்டு வந்து அரசர் கிட்ட கொடுத்தாங்க ,ஆவலா அந்த பானைக்குள்ள எட்டி பாத்தாரு அரசர்

உடனே அந்த பானை குள்ள சின்னதா மாரி உள்ள விழுந்துட்டாரு ,கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா வெளிய வந்து பாத்தா 100 அரசர்கள் இருந்தாங்க

எல்லோரும் நான் தான் அரசன்னு சண்ட போட ஆரம்பிச்சாங்க ,இந்த செய்தி விவசாயிக்கு தெரிஞ்சது

உடனே தன்னோட மனைவி கிட்ட சொன்னாரு ,என்னதான் அந்த பானை நமக்கு நல்லது செஞ்சாலும் ,மாயா மந்திரங்களோட முடிவு ஆபத்துல தான் போய் முடியும்னு பெரியவங்க சொன்னது உண்மையாகிடுச்சு

ஆண்டவன் அருளால அந்த ஆபத்து நமக்கு வராம தப்பிச்சிட்டோம் ,அந்த பானை அரசரோட இடத்துல யாருக்கும் கிடைக்காம இருக்குறத்துத்தான் சரினு சொன்னாரு


Slow and Steady Wins the Race in Tamil – முயலும் ஆமையும் சிறுவர் சிறுகதை

Slow and Steady Wins the Race in Tamil – முயலும் ஆமையும் சிறுவர் சிறுகதை :- ஒரு காட்டு பகுதியில எல்லா மிருகங்களும் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

அப்ப ஒருநாள் அங்க ஒரு திருவிழா நடந்துச்சு ,அங்க வந்த எல்லா மிருகங்களும் சந்தோசமா சிரிச்சு பேசிகிட்டு இருந்துச்சுங்க

அப்ப அங்க வந்த முயல் தந்தான் இந்த கூட்டத்துலயே வேகமான மிருகம்னு சொல்லுச்சு ,அத கேட்ட எல்லா மிருகங்களும் அத ஒத்துக்கிடுச்சுங்க

அப்ப அந்த முயல் சொல்லுச்சு எங்கூட போட்டிபோட உங்கள்ள யாருக்குமே தகுதி இல்லைனு திமிரோட சொல்லுச்சு

அத கேட்ட அங்க இருந்த ஒரு ஆமை சிரிச்சுச்சு ,ஏன் சிரிக்கிறான்னு எல்லா மிருகங்களும் கேட்டுச்சுங்க

அதுக்கு அந்த முயல் சொல்லுச்சு ,முயல் வேகமான மிருகமா இருக்கலாம் அதுக்காக யாருமே அதுகூட போட்டி போடா கூடாதுன்னா எப்படி ,

எல்லா மிருகங்களும் வேகமா ஓட முடியும் ,வேணும்னா என்கூட ஓடி இந்த முயல ஜெயிக்க சொல்லுங்கன்னு கேட்டுச்சு அந்த அந்த முயல்

அத கேட்ட எல்லா மிருகங்களும் சந்தோச பட்டுச்சுங்க உடனே போட்டி தயாராச்சு , முயலும் ஆமையும் காட்ட சுத்தி ஓட ஆரம்பிச்சாங்க

மின்னல் வேகத்துல ஓடுச்சு முயல் ,ஆனா மெதுவா ஓடுன ஆமை தன்னோட விடா முயற்சியோட நிலையான வேகதோட தொடர்ந்து ஓடுச்சு

ஒரு மேட்டுக்கு வந்த முயல் ரொம்ப தூரத்துல ஆமை வர்றத பாத்து சிரிச்சுச்சு ,இந்த ஆமை நம்ம கிட்ட வரவே ரொம்ப நேரமாகும் அதனால கொஞ்ச நேரம் ஓய்வெடுப்போம்னு சொல்லிட்டு படுத்து தூங்குச்சு

மெதுவா வந்த ஆமை தூங்கிகிட்டு இருந்த முயல முந்திட்டு அந்த போட்டியில ஜெய்ச்சிடுச்சு

திமிர் பிடித்த முயல் ரொம்ப அசிங்க பட்டு போயிடுச்சு ,

குழந்தைகளை Slow and Steady Wins the Race, அப்படிங்கிற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப மெதுவாவும் உறுதியவும் எந்த ஒரு செயலையும் செஞ்சீங்கன்னா வெற்றி உங்களுக்குத்தான்


வாலில்லா நரி |The Fox without a Tail

வாலில்லா நரி |The Fox without a Tail :- ஒரு காட்டு பகுதியில ஒரு நரி நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அந்த நரிக்கு ரொம்ப பசிச்சதால உணவு மட்டுமே தேடிகிட்டு வேகமா நடந்துச்சு

திடீர்னு டம்முனு ஒரு சத்தம் கேட்டுச்சு ,ஒரு பெரிய இரும்பு வேட்டை காரன் வச்சிருந்த வலைல அந்த நரியோட வால் மாட்டிக்கிச்சு

வலில துடிச்ச அந்த நரி அந்த வளைய விட்டு தப்பிக்க முயற்சி செஞ்சுச்சு ,எவ்வளவு முயற்சி செஞ்சும் அதோட வால விடுவிக்க முடியல

ரொம்ப நேரத்துக்கு அப்புறமா கஷ்ட பட்டு இழுத்தப்ப அதோட வால் மட்டும் தனியா போயிடுச்சு

அடடா வால் இல்லாம நம்ம கூட்டத்துல எப்படி பொய் சேருறதுன்னு யோசிச்சுச்சு அந்த நரி

தன்னோட கூட்டத்துக்கு போன அந்த நரி ஒரு தந்திரம் பன்னுச்சு ,தான் மட்டும் வால் இல்லாம இருந்தா எல்லா மிருகங்களும் சிரிக்கும் அதனால.எல்லா நரிகளையும் வால் இல்லாம செஞ்சிடணும்னு முடிவு பன்னுச்சு

உடனே நண்பர்களே நமக்கு கடவுள் பாக்குறதுக்கு கண்ணையும் ,சாப்பிட வாயையும் ,கேக்குறதுக்கு வாயையும் கொடுத்திருக்காரு

ஆனா இந்த வாழ் எதுக்குன்னு யாருக்காச்சும் தெரியுமான்னு கேட்டுச்சு ,அதுக்கு எல்லா நரியும் விடை தெரியாம முழிச்சுச்சுங்க

அப்பத்தான் இந்த வாலில்லா நரி சொல்லுச்சு ,நமக்கு இந்த வாழ் எந்த பயனையும் தராததாலதான் என்னோட வால வெட்டிக்கிட்டேன்

இப்ப எனக்கு ரொம்ப வேகம் வந்துடுச்சு ,வேகமா ஓடுற முயல கூட என்னால விரட்டி பிடிக்க முடியும் அதனால நீங்களும் உங்க வால வெட்டிக்கோங்கனு சொல்லுச்சு

அந்த நரியோட பேச்ச கேட்ட அந்த நரி கூட்டத்துல ஒரே குழப்பம் உண்டாச்சு ,அப்பத்தான் புத்திசாலியான நரி ஒன்னு கேட்டுச்சு

ஆமா நீ ஒன்னோட வால எப்படி வெட்டுன அந்த வால் எங்கன்னு கேட்டுச்சு ,திடீர்னு இந்த கேள்விய கேட்டதும் வாலில்லா நரிக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சது

அப்ப எல்லா நரியும் சேர்ந்து சொல்லுச்சுங்க அட அயோக்கிய நரியே ,எங்கயோ வெட்டுப்பட்ட உன் வால நீயே வெட்டிகிட்டதா சொல்லி எங்கள ஏமாத்த பாத்ததும் இல்லாம ,எங்களையும் வால வெட்டிக்கவா சொல்லுறான்னு ரொம்ப கோபப்பட்டுச்சுங்க ,

தன்னோட குட்டு வெளிப்பட்டத நினச்சு அசிங்க பட்ட அந்த நரி அந்த கூட்டத்த விட்டே ஓடிடுச்சு


தவளையும் இளவரசியும் – The Princess Frog Tamil Story

தவளையும் இளவரசியும் – The Princess Frog Tamil Story :- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு ,அவருக்கு அழகான ஒரு இளவரசியும் இருந்தா,அவளுக்கு தான் ஒரு இளவரசின்ற கர்வம் அதிகமா இருந்துச்சு

எப்பவும் அடுத்தவங்கள ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டா அந்த இளவரசி

இளவரசியோட இந்த போக்க கண்டிச்சாறு அரசர் ,எப்போதும் அடுத்தவங்கள மதிக்கனும்னு இளவரசிக்கு அறிவுரை சொல்லிகிட்டே இருப்பாரு ,அரசரை ஒருநாள் இளவரசிக்கு ஒரு தங்க பந்த விளையாட கொடுத்தாரு அரசர்

அந்த தங்க பந்த எடுத்துக்குட்டு அரண்மனை தோட்டத்துல விளையாட போனா அந்த இளவரசி ,அப்ப எதிர்பாராத விதமா அந்த பந்து அங்க இருக்குற குளத்துக்குள்ள விழுந்துடுச்சு

தங்க பந்த தொலச்ச இளவரசி ரொம்ப வறுத்த பட்டா ,அப்ப அங்க ஒரு தவள வந்துச்சு ,அழகிய இளவரசியே நீ ஏன் அழுகுறேன்னு கேட்டுச்சு அந்த தவள

தன்னோட தங்க பந்த தொலச்ச கதையை சொன்ன இளவரசி ,அத எடுத்து கொடுக்க சொல்லி கேட்டா ,அதுக்கு அந்த தவள சொல்லுச்சு எனக்கு ஒரு ஆச இருக்கு என்ன உங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போயி 3 நாள் உன்னோட தட்டுல சாப்பாடு போட்டு என்னோட படுக்கையிலயே படுக்கணும்னு ,

அந்த ஆசைய நிறைவேத்துவியான்னு கேட்டுச்சு அந்த தவள ,தன்னோட பந்து கிடைச்சா போதும் இந்த தவளைய அதுக்கு அப்புறமா விட்டுட்டு ஓடிடலாம்னு நினச்சு சரின்னு சொன்னா அந்த இளவரசி

உடனே தண்ணிக்குள்ள குதிச்சி அந்த தவள அந்த தங்க பந்த எடுத்துட்டு வந்து கொடுத்துச்சு ,உடனே அந்த இளவரசி வேகமா அரண்மனைக்கு ஓடி போய்ட்டா

மறுநாள் அரசர்கூட உக்காந்து சாப்டுகிட்டு இருந்தா அந்த இளவரசி ,அப்ப அந்த தவள அங்க வந்துச்சு ,தான் ஏமாத்த பட்டத அரசருக்கு சொல்லி அழுதுச்சு தவள

நாம் அரச பரம்பரை நாம எப்பவும் சொன்ன சொல்ல எப்பவும் காப்பாத்தனும் ,என்ன சொன்னாலும் நீ செஞ்சது தப்பு அந்த தவளைக்கு செஞ்ச சத்தியத்த காப்பாத்துன்னு சொன்னாரு

அரசர் சொன்ன மாதிரியே அந்த தவளையை தன்னோட தட்டுலயே சாப்பிட வச்சா அந்த இளவரசி

அடுத்ததா இளவரசியோட படுக்கையிலேயே படுத்து தூங்குச்சு அந்த தவள , வெறுப்போட தன் தந்தை சொன்னத செஞ்சா அந்த இளவரசி

மூணு நாளைக்கு அப்புறமா காலைல எந்திருச்சு பாக்குறப்ப அந்த தவள ஒரு அழகிய இளவரசரா மாரி இருந்துச்சு

இளவரசியே என்னோட சாபத்துநாள இப்படி தவளயா இருந்தேன் ,நீ என்ன ஏமாத்துனாலும் என்ன காப்பாத்துனது நீயும் உங்க அப்பாவும் ,உன்னோட அப்பாவோட நேர்மைய நீயும் கடை பிடிக்கணும்னு சொன்னான் அந்த இளவரசர்

மனம் திருந்தின இளவரசியை கல்யாணம் செஞ்சு ரொம்ப சந்தோசமா வாழ்ந்தார் அந்த தவளை இளவரசர்


நல்ல பெண்ணும் கொடுமைக்கார சித்தியும் Tamil Moral story For Children

நல்ல பெண்ணும் கொடுமைக்கார சித்தியும் Tamil Moral story For Children :- ஒரு கிராமத்துல ஒரு அப்பாவும் தியானு ஒரு குட்டி பொன்னும் இருந்தாங்க,அந்த பொன்னோட அம்மா இல்லாததால அவுங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி கியானு இன்னொரு பொன்னும் பெத்துக்கிட்டாரு

அந்த சித்தி அவுங்க கியாவ நல்லா பாத்துகிட்டு தியாவ கொடும படுத்த ஆரம்பிச்சாங்க

தியா ரொம்ப நல்ல பொன்னா இருந்தா ,ஆனா கியா சோம்பேறி பொன்னா இருந்த ,ஒருநாள் நீ போய் யார் வீட்லயாவது வேல செஞ்சு நிறைய பணம் கொண்டுவான்னு தியாவ வீட்டை விட்டு வெளியில தள்ளிட்டாங்க

சோகமா வேலை தேடி நடந்து போனா தியா

அப்படி போறப்ப ஒரு பழைய மரம் ஒன்ன பாத்தா ,அந்த மரம் அவ கிட்ட அழகிய பெண்ணே நீ எங்க போறான்னு கேட்டது

அதுக்கு அவ சொன்னா நான் வேலைதேடி போறேன்னு சொன்னா

நீ போகுறதுக்கு முன்னாடி என்னோட கிளைகள்ல இருக்குற காய்ந்த குச்சிகள உடைச்சி எனக்கு உதவுரியான்னு கேட்டுச்சு

எல்லோருக்கும் நல்லது செய்யிற தியா அந்த மரத்துல ஏறி அந்த பழைய கிளைகளை உடைச்சு சரி செஞ்சா

கொஞ்ச தூரம் போனதும் ஒரு திராட்சை கொடி இருந்துச்சு

அந்த கோடி கேட்டுச்சு அழகிய பெண்ணே நீ எங்க போறான்னு

நான் வேலைதேடி போறேன்னு சொன்னா தியா

சரி சரி ஆனா என்னோட பழைய காய்ந்த கொடிகள் எனக்கு பாரமா இருக்கு அத கொஞ்சம் சுத்தம் செஞ்சுவிடேன்னு சொன்னா

உடனே தியா போயி அந்த திராட்சை கொடிய சுத்தம் செஞ்சுட்டு மேல நடக்க ஆரம்பிச்சா

அவ போற வழியில ஒரு மண் அடுப்பு இருந்துச்சு அந்த அடுப்பு ரொம்ப உடைஞ்சு போயிருந்துச்சு ,தியா கிட்ட அந்த உடைஞ்ச பகுதிகள சரி செய்ய உதவு கேட்டுச்சு அந்த அடுப்பு

உடனே பக்கத்துல இருக்குற குளத்துக்கு போன தியா அங்க இருந்து

களிமண்ணை எடுத்துட்டு வந்து தண்ணி ஊத்தி கலக்கி அந்த மண் அடுப்ப சரி செஞ்சா 

தொடர்ந்து நடந்த தியா ஒரு பாழடைந்த கிணத்து கிட்ட வந்தா அந்தக் கிணறு சுத்தமில்லாமல் இருந்துச்சு

அந்த கிணறு கேட்டுச்சு அழகிய பெண்ணே நீ எங்க போறனு

அதுக்கு தியா சொன்னா நான் வேலை தேடி போறேன்

நீ வேலைதேடி போறதுக்கு முன்னாடி என்ன கொஞ்சம் சுத்தம் செய் அப்படின்னு வேண்டிக் கேட்டுக்கிச்சு அந்த கிணறு

 உடனே தியா அங்க இருக்குற வாளிய எடுத்து நீர் இறைத்து கிணறோட சுவர் எல்லாத்தையும் சுத்தம் செஞ்சா , உடனே அந்த கிணறு தியாகு ரொம்ப நன்றி சொல்லுச்சு

தொடர்ந்து நடந்த தியா கிட்ட ஒரு அழுக்கு நாய்க்குட்டி வந்துச்சு ,என்ன சுத்தம் செஞ்சு விடுங்கக்கான்னு கேட்டுச்சு அந்த நாய்க்குட்டி

அது மேல பரிதாப பட்ட தியா அந்த நாய்க்குட்டிய ஆத்துக்கு தூக்கிட்டு போயி குளிப்பாட்டி விட்டா

தொடர்ந்து நடந்த தியா ஒரு காட்டுப் பகுதியில இருக்கிற ஒரு பழைய மாளிகை கிட்ட வந்தா,அந்த மாளிகைக்கு உள்ளே போன தியா எனக்கு இங்க ஏதாவது வேலை கிடைக்குமானு கேட்டா

அது உண்மையாகவே தேவதைகள் வாழ்ற மாளிகை அங்க இருக்கிற தேவதைகள் எல்லாரும் சேர்ந்து நீ இங்கேயே வேலை செய்யலாம் இங்க இருக்கிற எல்லா அறைகளையும் சுத்தம் செய்யிற வேலை இனிமே உனக்கு அப்படின்னு சொன்னாங்க 

இந்த வீட்டில மொத்தம் ஏழு அறைகள் இருக்கு அதுல முதல் ஆறு அறைகளை மட்டும் சுத்தம் செஞ்சா போதும். கடைசியா இருக்கிற 7வது அறையை நீ எப்பயும் திறக்கக் கூடாதுனு சொன்னாங்க அந்த தேவதை.

அதைக் கேட்டதும் ரொம்ப நல்ல பொண்ணா நடந்துக்கிட்டா தியா தினந்தோறும் அந்த வீட்டை சுத்தம் பண்ற வேலைய பொறுப்பா செஞ்சா ,

இப்படியே ஒரு வருஷம் போச்சு ஒரு வருஷம் கழிச்சு என்னோட வீட்டுக்கு போயி தன்னோட அப்பாவ பாக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டா தயா

உடனே அந்த தேவதைகள் எல்லோரும் சேர்ந்து அந்த ஏழாவது அறைக்கதவை திறந்து உள்ள கூட்டிட்டு போனாங்க ,அங்க விலை உயர்ந்த நவரத்தினங்களும் தங்க நாணயங்களும் குவிஞ்சி கிடந்தது

நீ மேல படுத்து எந்திரிச்சா உனக்குத் தேவையானதை விட அதிகமான பொருட்கள் உன்னோட ஒட்டிவிடும் நீ அதை கொண்டு போய் வாழ்நாள் முழுதும் சந்தோஷமா இருக்கலாம்னு அந்த தேவதைகள் சொல்லுச்சு

அது மாதிரியா அந்த பொண் நகைகள் மேல படுத்து எந்திரிச்சா தியா அப்ப நிறைய நாணயங்களும் வைர வைடூரியங்கள் அவ கூடிவே ஒட்டிக்கிச்சு

தேவதைகளுக்கு நன்றி சொல்லிட்டு தன்னோட வீட்டுக்கு நடந்து போக ஆரம்பிச்சா போற வழியில அவ உதவி செஞ்ச நாய்க்குட்டியை பார்த்தா அந்த நாய்க்குட்டி இங்க வான்னு கூட்டிட்டு போயி வைரங்கள் நிறைந்த ஒரு புதையலை காமிச்சு,

தனக்கு உதவி செய்ததற்கு நன்றி விசுவாசமா இந்த நாய் தனக்கு இவ்வளவு பெரிய புதையலை காமிச்சி இருக்கு அப்படின்னு நினைச்சு தியா அவ்வளவு எடுக்க முயற்சி பண்ணாம தனக்கு தேவையானதை மட்டும் தன்னோட பையில எடுத்துக்கிட்டா

நாய்க்கு நன்றி சொல்லிட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சா

அவ போற வழியில் அவளுக்கு ரொம்பப் பசி எடுத்துச்சு , அப்பத்தான் அவ சரி செஞ்சு அந்த மண் அடுப்ப பார்த்தா அந்த மண்அடுப்பு இப்ப நிறைய சமையல் செய்ர இடமா மாரி இருந்துச்சு

அழகிய பெண்ணே நீ என்ன சுத்தம் செஞ்சு நல்லபடியா வச்ச அதனால நிறைய பேரு என் மேல சமைக்கிறாங்க அவங்க வச்சுட்டு போற உணவை எடுத்து உதவி தேவை படுறவங்களுக்கு கொடுக்கிறேன்,நீ உனக்கு வேண்டிய உணவை இதுல சாப்பிட்டுக்கோ அப்படின்னு சொல்லுச்சு

உடனே அந்த உணவை சாப்பிட்ட தியா மெதுவா நடக்க ஆரம்பிச்சா

 நடந்து போறப்ப தியாவுக்கு ரொம்ப தாகமா இருந்துச்சு அப்படி போறப்ப அவ சுத்தம் செஞ்ச கிணறு வந்துச்சு . அவளை வரவேற்ற கிணறு இப்ப எனக்குள்ள சுத்தமான தண்ணீர் இருக்கு நீ வேண்டிய அளவு தண்ணீரை எடுத்து குடித்து உன்னோட தாகத்த தீத்துக்கோன்னு சொல்லுச்சு

நிறைய தண்ணி குடிச்சு தாகத்த தீத்துக்கிட்ட தியா கிணற்றுக்கு நன்றி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிச்சா

அதுக்கு அப்புறமா அவள் சுத்தம் செஞ்சு உதவி செஞ்ச திராட்சை கொடிய பார்த்தா இப்ப அந்த திராட்சை கொடி நிறைய திராட்சைகளை வெச்சிருந்துச்சு

அழகிய பெண்ணே நீ எனக்கு உதவி செஞ்ச அதனால இப்ப நான் நிறைய திராட்சை கனிகளை கொடுக்கிறேன்,இந்தா என்னோட திராட்சை கனிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களை வைத்து உனக்காக பழரசம் செஞ்சிருக்கேன் இதை குடிச்சிட்டு நல்லா நடந்து போ அப்படின்னு சொல்லுச்சு

அதே மாதிரி நடந்து போனது தியா அவ உதவி செய்த ஆப்பிள் மரத்தை பார்த்தால் அந்த மரத்துல இப்ப நிறைய நிறைய ஆப்பிள் பழங்கள் இருந்துச்சு அவள வரவேற்ற அந்த ஆப்பிள் மரம் உனக்கு எவ்வளவு பழங்கள் வேணுமோ எல்லாத்தை எடுத்துக்க அப்படின்னு சொன்னது , தன்னோட அப்பாவுக்காக கொஞ்சம் பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் தியா,அவங்க அப்பாவை பார்த்து நடந்தது எல்லாம் சொன்னா

அத கேட்ட சித்திக்கு பொறாமை தாங்கல,நீ என்ன இவ்வளவு சம்பாதிசுட்டு வந்திருக்கியா உன்ன விட என் மக ரொம்ப கெட்டிக்காரி அவ போய் இன்னும் நிறைய சம்பாதிப்பா அப்படின்னு சொல்லிட்டு அவ மகள அதே மாதிரி சம்பாதிப்பதற்கு அனுப்பிச்சா

கியா நடந்து போறப்ப அதே மாதிரி ஒரு ஆப்பிள் மரம் வந்துச்சு தனக்கு உதவும்படி கேட்டுச்சு சோம்பேறியான கியா என்னால எல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சா

அடுத்ததா திராட்சை கொடியையும் பார்த்தான் திராட்சை கொடிதன்ன சுத்தம் செய்ய சொல்லுச்சு ,அதையும் செய்யாம மேலும் நடந்தது உடைந்து போன அடுப்ப பார்த்தா அடுப்பு கேட்ட உதவியையும் செய்யாம தொடர்ந்து நடக்க ஆரம்பிச்ச கியா

பாழடைஞ்ச கிணத்த பாத்த கியா அது தன்னை சுத்தம் செய்ய சொன்னத செய்யாம தன்னோட வேலையை பார்த்துட்டு நடக்க ஆரம்பிச்சா

போற வழியில அந்த அழுக்கு நாய்க்குட்டியும் வந்துச்சு இந்த நாய்க்குட்டியை பார்த்து எரிச்ச பட்ட கியா அது என்ன சொல்லுதுன்னு கூட கேட்காம மேலும் நடக்க ஆரம்பிச்சா

கடைசியா அந்த தேவதைகள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்து அ எனக்கு வேலை வேணும்னு கேட்டா, அப்ப அந்த தேவதைகள் சொன்னாங்க இங்கே இருக்கிற எல்லா இடத்தையும் சுத்தமாக வச்சிக்கிறது உன்னோட வேலைனு சொன்னாங்க

தியா கிட்ட சொன்ன மாதிரியே ஏழாவது கதவைத் திறக்கவே கூடாதுன்னு சொன்னாங்க,சோம்பேறியான கியா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரிவரச் செய்யாம சோம்பேறியா இருந்தா

அவளுக்கு தன்னுடைய அக்கா நிறைய பொன்னும் பொருளும் ஏழாவது அறையிலிருந்து எடுத்தது ஞாபகத்துக்கு வந்துச்சு,உடனே அந்த ஏழாவது அறையை திறந்து பார்த்தான் ஆனா அங்க அந்த அறை ரொம்ப பாழடைந்து போய் இருந்துச்சு

அங்கு இருந்த பழைய வண்டுகளும் தேனீக்களும் அவ முகத்தில் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு பயந்துபோன கியா வேகமாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பிச்சா

போற வழியில அந்த நாய்க்குட்டியை பார்த்தா இந்த வண்டுகள் எல்லாம் என்ன தொரத்திக்கிட்டு வருதுங்க என்னை காப்பாத்து நாயே அப்படின்னு சொல்லி கெஞ்சினா

ஆனால் தனக்கு உதவி செய்யாததால அவளுக்கு உதவி செய்ய முன்வரல அந்த நாய்

கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பாழடைந்த கிணறு கிட்ட வந்தா கொஞ்சம் தண்ணி கிடைக்குமா நாம் முகத்தைக் கழுவிக்கிறேன் அப்படின்னு கேட்டா

நீ எனக்கு உதவி செய்யாதனால நான் இன்னும் பாழடைந்து போய்தான் இருக்கேன் எனக்கு உள்ள இருந்து தண்ணீர் எடுக்க முடியாது அதனால நீ வேற இடம் பாருன்னு சொல்லி அனுப்பிடுச்சு அந்த கிணறு

கொஞ்ச தூரம் போனதும் அவளுக்கு ரொம்ப பசிக்குது அந்த அடுப்பு இருக்கிற இடத்துக்கு பக்கத்துல போயி எனக்கு ஏதாவது உணவு கிடைக்குமான்று கேட்டா

நீ அன்னைக்கு என்ன சரி செஞ்சிருந்தா யாராவது என் மேல உணவு சமைச்சிருப்பாங்க அந்த உணவு உனக்கு கிடைத்திருக்கும் நீ என்ன அப்படியே விட்டுட்டு போன அதனால நான் பாழடைந்து அடுப்பா இருக்கிறேன்

என்னால் சமைக்கமுடியாது உனக்கு உணவு தரவும் முடியாது நீ வேற இடம் பாரு அப்படின்னு சொல்லி அனுப்பி வைத்து அந்த அடுப்பு

அடுத்ததா திராட்சைக்கொடி கிட்ட போன கியா ஏதாவது உணவு கிடைக்குமான்னு கேட்டா திராட்சை சிரிச்சுகிட்டே சொல்லுச்சு நீ என்னை சுத்தம் பண்ணல அதனால உனக்கு திராட்ச கொடுக்க முடியாது அப்படின்னு சொல்லுச்சு

அடுத்ததா ஆப்பிள் மரத்துக்கிட்ட வந்த கியா எனக்கு ரொம்ப பசிக்குது எனக்கு ஒரு ஆப்பிள் கு டு அப்படின்னு கேட்டா

நீ எனக்கு அன்னைக்கு உதவாததாள இன்னைக்கு ஆப்பிள் தர மாட்டேன்னு சொல்லி அனுப்பி வச்சது அந்த ஆப்பிள் மரம்

வெறும் கையோட வீட்டுக்கு வந்த கியவையும் அவங்க அம்மாவையும் கோவத்தோட பார்த்த அவுங்க அப்பா

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் மகள ரொம்ப கொடும படுத்துனீங்க ,இப்ப அவ சம்பாதிச்சதுக்கு அப்புறமா நிறைய பொறாமை படுறீங்க அதனால நீங்க வீட்டை விட்டு போங்கன்னு சொல்லி வெளிய அனுப்பிச்சிட்டாரு அந்த அப்பா

The Deligent Girl And The Lazy Girl Story in Tamil


Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

Old Dog Tamil story With Moral (வயதான நாய் ) :- ஒரு வீட்டுல ஒரு முதியவர் இருந்தாரு அவர் ஒரு நாய் வளர்த்துக்கிட்டு வந்தாரு

அந்த நாய்க்கு ரொம்ப வயசாகிடுச்சு அதனால ஓடியாடி விளையாட முடில ,வேட்டையாட முடில

அந்த நாய கூட்டிட்டு ஒருநாள் தோட்டத்துக்கு போனாரு அந்த முதியவர்

அப்ப அங்க ஒரு குட்டி பன்னி குழி தோண்டிகிட்டு இருந்துச்சு ,உடனே கோபப்பட்ட அந்த முதியவர் அந்த நாய் கிட்ட அந்த குட்டி பன்னிய பிடிக்க சொன்னாரு

அந்த நாயும் வேகமா ஓடி அந்த குட்டி பன்னிய பிடிக்க பாத்துச்சு

வயசான அந்த நாயால அந்த குட்டி பன்னிய பிடிக்க முடில மெதுவா முதியவர்கிட்ட வந்து நின்னுச்சு அந்த நாய் ,அந்த முதியவர் உன்னால ஒரு சின்ன பன்னி குட்டிய கூட பிடிக்க முடியலயான்னு கோபமா கேட்டுட்டாரு

அதுக்கு அந்த நாய் முதலாளி என்ன தனியா தொரத்தி விட்டுடாதீங்க ,வயசான காலத்துல என்னால உங்களுக்கு வேல செய்யணும்னு ஆசை இருந்தாலும் என்னோட உடம்பு ஒத்துழைக்கல உங்கள மாதிரியே என்னையும் தனியா வாசிக்க விட்டுடாதீங்கன்னு சொல்லுச்சு

அப்பத்தான் அந்த முதியவருக்கு முதுமையின் துன்பம் என்னனு புரிஞ்சது

தான் எப்படி புறக்கணிக்க பட்டு தனியா வாழுறமோ அதுமாதிரி இந்த நாயும் வாழ கூடாது அதனால அந்த நாய சேர்த்துக்கிட்டாரு


Ramu Somu Story in Tamil (Karadi Story) Wild Bear Moral Story

Ramu Somu Story in Tamil (Karadi Story) Wild Bear Moral Story :- ராமுவும் சோமுவும் சிறந்த நண்பர்கள் ,அவுங்க ஒருநாள் காட்டு வழியா பக்கத்து ஊருக்கு போய்கிட்டு இருந்தாங்க

அப்படி போறப்ப ஒரு அடர்ந்த புதர்ல இருந்து ஏதோ சத்தம் வந்தது

ரெண்டு நண்பர்களும் ரொம்ப பயந்து போனாங்க

அப்பத்தான் ஒரு பெரிய கரடி அவுங்கள நோக்கி வந்துகிட்டு இருந்துச்சு

ராமு உடனே வேகமா ஓடி போயி ஒரு மரத்துல எறிகிட்டான் ,

அவனுக்கு தன்னோட வந்த நண்பன விட தன்னோட உயிர் தான் முக்கியமா இருந்துச்சு அதனாலதான் சோமுவ அந்த கரடிகிட்டயே விட்டுட்டு ஓடிட்டான்

இத பாத்த சோமுவுக்கு அதிர்ச்சியா இருந்துச்சு ,எனக்கு மரம் ஏற தெரியாதேன்னு இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சான்

அப்பத்தான் அவுங்க தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு கரடி செத்துப்போன எந்த பொருளையும் சீண்டாதுன்னு

உடனே சோமு மெதுவா கீழ படுத்துகிட்டு செத்தது மாதிரி நடிச்சான்

கிட்ட வந்த அந்த கரடி மெதுவா அவனை மோந்து பாத்துச்சு

எந்த அசைவும் இல்லாம இருந்த சோமுவ விட்டுட்டு அது பாட்டுக்கு போயிடுச்சு

இந்த காட்சிய மரத்துமேல இருந்து பாத்த ராமுவுக்கு கரடி என்னமோ சோமு காதுல சொன்ன மாதிரி இருந்துச்சு

மெதுவா கீழ வந்த ராமு சோமுகிட்ட அந்த கரடி உன் காதுல என்ன சொல்லுச்சுன்னு கேட்டான்

அப்பத்தான் சோமு சொன்னான் ஆபத்தான நிலைல உன்ன விட்டுட்டு போன நண்பன் கூட எப்போதும் சேராதனு சொல்லுச்சுன்னு சொல்லிட்டு தனியா நடக்க ஆரம்பிச்சான்

தன்னோட சுயநலத்த நினைச்சு வருத்த பட்டான் ராமு


The fox and the goat short story With Moral – நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை

The fox and the goat short story With Moral – நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை :- ஒரு நாள் ஒரு நரி பாலைவனத்துக்கு போச்சு ,அங்க ரொம்ப வெயில் அடிச்சதால அந்த நரி ரொம்ப சோர்வகிடுச்சு

ரொம்ப தாகம் எடுத்த அந்த நரி எதாவது தண்ணி தர்ற கிணறு , குளம் இருக்கானு பாத்துகிட்டே போச்சு

அப்பத்தான் அங்க ஒரு கிணறு இருக்குறத பாத்துச்சு,உடனே ரொம்ப சந்தோஷமான அந்த நரி அந்த கிணத்துமேல ஏறி தண்ணி இருக்கான்னு பாத்துச்சு

அப்ப திடீர்னு கால் வழுக்கி தண்ணிக்குள்ள விழுந்துச்சு அந்த நரி ,எவ்வளவு முயற்சி செஞ்சும் அதனால வெளிய வர முடியல

காப்பாத்துங்க ,காப்பாத்துங்கனு கத்திகிட்டே இருந்துச்சு அந்த நரி ,அந்த பக்கம் யாருமே இல்லதுனால ரொம்ப நேரம் அந்த நரி கத்திகிட்டே இருந்துச்சு

அப்பத்தான் ஒரு ஆடு அந்த பக்கமா வந்துச்சு ,கிணத்துக்குள்ள இருந்து சத்தம் வராத கேட்ட அந்த ஆடு மெதுவா எட்டி பாத்துச்சு

அடடா நரியாரே கிணத்துக்குள்ள என்ன பன்றிங்கன்னு கேட்டுச்சு

அப்பத்தான் நரிக்கு ஒரு யோசனை வந்துச்சு ,நம்மள யாரும் மேல இருந்து காப்பாத்த முடியாது ,யாராவது உள்ள குதிச்சுதான் காப்பாத்த முடியும்

ஆனா தன்னோட உயிர பணயம் வச்சு யாரும் தன்ன காப்பாத்த கிணத்துக்குள்ள குதிக்க மாட்டாங்க அப்படிங்கிற உண்மையும் புரிஞ்சுச்சு

நமக்குன்னு கிடைச்ச இந்த ஆட்ட ஏமாத்துறத தவிர வேற வழி இல்லைனு முடிவு பண்ணுன அந்த நரி ,ஆடு கிட்ட சொல்லுச்சு இங்க நிறைய நல்ல தண்ணி இருக்கு ரொம்ப குளிர்ச்சியவும் இருக்கு அதான் ரொம்ப சந்தோஷத்துல கத்திடேன்னு சொல்லுச்சு

அவ்வளவு நல்ல தண்ணியா இருக்குன்னு கேட்டுச்சு அந்த ஆடு ,ஆமாம் ஆடாரே நீங்க வேணும்னா உள்ள வந்து பாருங்கன்னு சொல்லுச்சு

முட்டாளான அந்த ஆடு யோசிக்காம உள்ள குதிச்சது ,உடனே அந்த ஆடு அந்த தண்ணிய குடிச்சு ரொம்ப சந்தோசப்பட்டுச்சு

நரியாரே நீங்க சொன்ன மாதிரி இது ரொம்ப சுவையான நீரை இருக்குன்னு சொல்லுச்சு ,ஆமா இப்ப நாம எப்படி வெளிய போகப்போறோம்பு கேட்டுச்சு

அதுக்கு அந்த நரி நாந்தான் இருக்கேன்ல நீ என்மேல ஏறி வெளிய போயிடுனு சொல்லுச்சு ஆடும் அதுக்கு சரின்னு சொல்லுச்சு ,

ஆனா முதல்ல நான் உன்மேலே ஏறி வெளிய போறேன் அடுத்து நீ என்மேல ஏறி வெளிய வான்னு சொல்லுச்சு

நரியோட பேச்சுல இருக்குற சூத அறியாத அந்த முட்டாள் ஆடும் நரி வெளிய போக குனிஞ்சு நின்னுச்சு ,உடனே அந்த நரி அந்த ஆடு மேல ஏறி வெளிய போயிடுச்சு

நரியாரே இப்ப என்ன வெளிய எடுங்கன்னு சொல்லுச்சு ,நான் உள்ள இல்லாதப்ப என்னால எப்படி உனக்கு குனிய முடியும் முட்டாள் ஆடேன்னு சொல்லிட்டு ஓடிப்போயிடுச்சு அந்த நரி

நரியால ஏமாத்த பட்ட அந்த ஆடு அடடா அந்த நரி சொன்னத அப்படியே நம்பி இப்படி ஏமாந்துட்டமேன்னு சொல்லி வறுத்த பட்டு அழுத்துச்சு அந்த ஆடு

குழந்தைகளா யார் என்ன சொன்னாலும் அந்த வார்த்தைய நல்லா புரிஞ்சுகிட்டு அதுல இருக்குற உண்மைய தெளிவா தெரிஞ்சுக்கிட்டு அடுத்த காரியத்த செய்யணும் இல்லைனா இந்த ஆடு மாதிரி கஷ்டம்தான் கிடைக்கும்


The other side of the wall moral story – Tamil Short Stories

The other side of the wall moral story – Tamil Short Stories :- ஒரு ஊருல ஒரு அழகான பாப்பா இருந்துச்சு,அந்த பாப்பாவுக்கு தோட்ட வேலை செய்றதுன்னா ரொம்ப இஷ்டம்

அவளே குழிதோண்டி புது புது செடி வளர்க்கறதுல அவளுக்கு ரொம்ப ஆர்வம் இருந்துச்சு ,அந்த செடியில் பூக்குற பூக்கள அவளுக்கு ரொம்ப பிடிக்கும்

தன்னோட தோட்டத்துல மஞ்சள் பூ இல்லாததால ஒருநாள் அவ சந்தைக்கு போயி புது செடிக்கு விதைகள் வாங்குனா

தன்னோட தோட்டத்துல அவளே குழி தோண்டி அந்த விதைகளை விதைச்ச அந்த பாப்பா ,தினமும் அந்த செடிக்கு தண்ணி ஊத்துனா

வேகமா வளர ஆரம்பிச்ச அந்த செடி ரொம்ப நாள் ஆகியும் பூ பூக்கவே இல்ல,ஒருநாள் பொறுமை இழந்த அந்த பாப்பா

அந்த செடியை வெட்டலாம்னு போனா ,அப்பத்தான் அந்த வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டு பாட்டி நீ என்ன பண்றேன்னு கேட்டாங்க

நான் இந்த செடிய வெட்ட போறேன் இனியும் இந்த செடி பூ பூக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லைனு சொன்னா

நீ எங்க வீட்டு பக்கம் வானு சொன்னாங்க அந்த பாட்டி ,உடனே அந்த பக்கம் போனா அந்த பாப்ப்பா

அங்க அந்த செடியோட ஒரு பகுதி ஒரு ஓட்ட வழியா இந்த பக்கம் வந்து அழகா பூத்து இருந்துச்சு

அடடா நம்மோட பார்வைக்கு படாத காரணத்துனால நல்ல ஒரு செடிய அவசரப்பட்டு வெட்ட போணோமேன்னு சொல்லி வருத்தப்பட்டா

கொஞ்ச நாள் கழிச்சி எல்லா பக்கமும் பூ பூத்தது அந்த செடி

குழந்தைகளா எல்லா விஷயத்துலயும் பொறுமையோட இருக்கணும்


Who will Bell the Cat – Kids Story – பூனைக்கு யார் மணி கட்டுவது

Who will Bell the Cat – Kids Story – பூனைக்கு யார் மணி கட்டுவது :- ஓர் கிராமத்துல இருக்குற விவசாயியோட வீட்டுல நிறைய எலிங்க இருந்துச்சு

அவரு சேமிச்சு வச்சிருந்த தானியங்களை திங்கிறதுதான் அதுங்களோட ஒரே வேலை , இத பாத்து ரொம்ப கோபப்பட்டாரு அந்த விவசாயி

தான் பாடு பட்டு விவசாயம் செஞ்ச அந்த தானியங்களை இப்படி வெட்டியா எலிங்க திங்குறது அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கல

உடனே ஒரு பெரிய பூனையை வாங்கிட்டு வந்தாரு அந்த விவசாயி ,தன்னோட வீட்டுல இருக்குற எலிங்கள பிடிக்க அந்த பூனை உதவும்னு நினைச்சாரு

அந்த பூன வந்த நாள்ல இருந்து அங்க இருந்த எலிங்கள பிடிச்சி திங்க ஆரம்பிச்சது

பூனைக்கு பயந்த அந்த எலிக்கூட்டம் ஒரு முடிவு பண்ணுச்சுங்க , அந்த பூனைக்கு ஒரு மணிய கட்டி விட்டுட்டம்னா அது வர்றத நாம கண்டு பிடிச்சிடலாம்னு முடிவு பண்ணுச்சுங்க

ஆனா யார் தைரியமா அந்த பூனைக்கு மணி காட்டுவாங்கன்னு ஒரு கேள்வி வந்துச்சு

அப்ப தைரிய சாலியான ஒரு குட்டி எலி நான் காட்டுறேன்னு சொல்லி ஒரு மானிய எடுத்துட்டு அந்த புனைகிட்ட போச்சு

பூனையாரே பூனையாரே நீங்க வந்ததுல இருந்து இங்க இருந்த கேட்ட எலிங்க எல்லாம் ஓடிடுச்சு ,உங்களோட சேவையை பாராட்டி நல்ல எலிங்க எல்லாம் சேந்து ஒங்களுக்கு இந்த விலைமதிப்பில்லாத மணிய பரிசா தரோம்னு சொல்லி அந்த மணிய அதோட கழுத்துல கட்டுச்சு

அன்னைல இருந்து ஒரு எலிய கூட அந்த பூனையாள பிடிக்க முடியல ,அதனால அந்த பூனைய தொரத்தி விட்டுட்டாரு அந்த விவசாயி

முட்டாள் தனமா யார் என்ன கொடுத்தாலும் வாங்க கூடாது குழந்தைகளா


Hen Story In Tamil – கோழி கதை

Hen Story In Tamil – கோழி கதை :- ஒரு ஊருல ஒரு கோழிக்குஞ்சு வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அது இருக்குற வீட்டுல ஒரு சோம்பேறி நாய் இருந்துச்சு ,அதோட ஒரு தூங்குமூஞ்சி பூனையும் இருந்துச்சு ,அதுங்களோட சேந்து ஒரு முட்டாள் வாத்தும் இருந்துச்சு

ஒரு நாள் அந்த கோழிக்குஞ்சு வெளியில வந்து நண்பர்பலே எனக்கு சில கோதுமை விதைகள் கிடைச்சிருக்கு வாங்க அத விதைப்போம்னு சொல்லுது

அதுக்கு அந்த நாய் நா வரலனு சொல்லுச்சு ,உடனே அந்த பூன என்னால முடியாதுன்னுச்சு ,அந்த வாத்து எனக்கு தெரியாதுன்னு சொல்லுச்சு

உடனே அந்த கோழி மட்டும் தனியா அந்த விதைகளை விதைச்சது

கொஞ்ச நாளுக்கு அப்புறமா அந்த விதைகள் வளர்ந்து புது கோதுமை மணிகள் உருவாச்சு

அத பாத்த அந்த கோழிக்குஞ்சு வாங்க நண்பர்களே நாம அறுவடை செய்வோம்னு சொல்லுச்சு

அதுக்கு அந்த நாய் நா வரலனு சொல்லுச்சு ,உடனே அந்த பூன என்னால முடியாதுன்னுச்சு ,அந்த வாத்து எனக்கு தெரியாதுன்னு சொல்லுச்சு

கஷ்டப்பட்டு அறுவடை செஞ்ச அந்த கோழி குஞ்சு வாங்க நண்பர்களே நாம பொய் மாவு அறச்சிட்டு வருவோம்னு சொல்லுச்சு

அதுக்கு அந்த நாய் நா வரலனு சொல்லுச்சு ,உடனே அந்த பூன என்னால முடியாதுன்னுச்சு ,அந்த வாத்து எனக்கு தெரியாதுன்னு சொல்லுச்சு

தூக்க முடியாம அந்த கோதுமையை தூக்கிட்டு போயி அந்த ஊருல இருக்குற மாவு மில்லுல போயி மாவா அறச்சிட்டு வந்துச்சு அந்த கோழி குஞ்சு

வீட்டுக்கு வந்த அந்த கோழிக்குஞ்சு வாங்க நண்பர்களே நாம சமைக்கலாம்னு சொல்லுச்சு

அதுக்கு அந்த நாய் நா வரலனு சொல்லுச்சு ,உடனே அந்த பூன என்னால முடியாதுன்னுச்சு ,அந்த வாத்து எனக்கு தெரியாதுன்னு சொல்லுச்சு

வேற வழி இல்லாம வீட்டுக்குள்ள போன அந்த கோழிக்குஞ்சு அந்த கோதுமை மாவா வச்சு புதுசா பன் கேக் எல்லாமே செஞ்சுச்சு

வெளியேவந்து வாங்க நண்பர்களே எல்லோரும் சாப்பிடலாம்ணு கேட்டுச்சு

அதுக்கு அங்க இருந்த நாய் ,பூனை மற்றும் வாத்து ஓ சாப்பிடலாமேன்னு சொல்லுச்சுங்க

அத கேட்டு சிரிச்ச அந்த கோழிக்குஞ்சு வேணா வேணா ஒண்ணுமே செய்யத்தெரியாத நாய்க்கும் ,ஒண்ணுமே செய்ய வராத பூனை க்கும் ,எதுவுமே தெரியாத வாத்துக்கும் , கேக் மட்டும் எப்படி சாப்பிட தெரியும் அதனால நீங்க உங்க வேலைய பாருங்க அப்படினு சொல்லிட்டு

வீட்டுக்குள்ள போயி தான் சமைச்சி வச்சிருந்த அந்த உணவை நல்லா சாப்பிடுச்சு

சோம்பேரித்தனமா இருந்ததால அந்த நாய் , பூனை ,வாத்துக்கு ஒண்ணுமே கிடைக்கல


Ant and Elephant Story in Tamil – யானையும் எறும்பும் சிறுவர் நீதி கதை

Ant and Elephant Story in Tamil – யானையும் எறும்பும் சிறுவர் நீதி கதை:- ஒரு ஊருல ஒரு திமிர் பிடிச்ச யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அது ரொம்ப பெருசா இருக்குறதால ரொம்ப திமிரா இருந்துச்சு

அந்த யானை எப்பவும் மத்த மிருகங்களுக்கு தொல்லை கொடுத்துகிட்டே இருந்துச்சு ,

அந்த யானைய பாத்தாலே எல்லா மிருகங்களும் ஓடி போயிடும்

அந்த காட்டுல ஒரு எறும்பு கூட்டமும் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு , அந்த எறும்புங்க எப்பவும் சுறுசுறுப்பா இருந்துச்சுங்க ,

அதுங்க எப்பவும் தங்களோட உணவ சேமிச்சு வைக்கிற வேலைய பாத்துகிட்டே இருந்துச்சுங்க

ஒருநாள் அந்த எறும்புங்க செய்ற வேலைய பாத்த அந்த யானை பக்கத்துல இருந்த குலத்துக்கு போயி தண்ணிய தன்னோட துதிக்கையாள எடுத்துட்டு வந்து

அந்த எறும்புங்க மேல அடிச்சி விட்டுச்சு,அந்த எறும்புங்க தங்களோட சாப்பாடு எல்லாம் நனைஞ்சு போனத பாத்து ரொம்ப வறுத்த பட்டுச்சுங்க

தொடர்ந்து அந்த எறும்புகளுக்கு தொல்லை கொடுத்துகிட்டே இருந்துச்சு அந்த யானை

ஒருநாள் ரொம்ப கோபமான ஒரு எறும்பு தன்னோட தாத்தா கிட்ட போயி நடந்த சொல்லுச்சு ,அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு

ரௌத்திரம் பழகு ,அப்படிங்கிற பழமொழிக்கு என்ன அர்த்தம் தெரியுமா ,கோபப்பட வேண்டிய விசயத்துக்கு சகிச்சிக்கிட்டு இருக்க கூடாது அப்படின்னு சொல்லுச்சு

உடனே அந்த சின்ன எறும்பு அந்த யானை இருக்குற இடத்துக்கு போச்சு ,அங்க அந்த யானா படுத்து தூக்கிகிட்டு இருந்துச்சு

அதோட துதிக்கைக்குள்ள போன அந்த எறும்பு மெதுவா கடிக்க ஆரம்பிச்சது

வலிதாங்காத யானை யார் என்னோட துதிக்கைக்குள்ள கடிக்கிறதுன்னு கேட்டு அலறுச்சு

எங்களை சின்ன விளங்குன்னு தான நீ எங்க மேல தண்ணி ஊத்தி விளையாண்ட இப்ப உன்ன என்ன பண்றேன்னு பாருன்னு சொல்லி திரும்ப திரும்ப கடிக்காது,வலிதாங்க முடியாத யானையோட துதிக்கைல இருந்து வெளிய வந்த அந்த எறும்ப பாத்து சொல்லுச்சு

தயவு செஞ்சு என்ன மன்னிச்சுடுங்க என்னால உங்களுக்கு இனிமே தொந்தரவு இருக்காதுன்னு சொல்லுச்சு

குழந்தைகலா நாம பலசாலியா இருந்த அடுத்தவங்கள தொல்லை படுத்தக்கூடாது ,அதே நேரத்துல பலம் குறைவா இருந்த யார பாத்தும் பயப்பட கூடாது


Monkey Story in Tamil – குரங்கும் முதலையும் குழந்தை கதைகள்

Monkey Story in Tamil – குரங்கும் முதலையும் குழந்தை கதைகள் :- ஒரு காட்டுல ஒரு குரங்கு வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த காட்டுக்கு பக்கத்துல ஒரு நதி ஓடிக்கிட்டு இருந்துச்சு ,அந்த நதிக்கு நடுவுல ஒரு தீவு இருந்துச்சு ,அந்த தீவுல நிறய பழங்களும் அதிகமான உணவு பொருட்களும் விளைஞ்சது

அந்த குரங்கு எப்பவும் பக்கத்துல இருக்குற பாறை மேல தாவி குதிச்சு அந்த தீவுக்கு போகும் , அங்க போயி நல்லா சாப்டுட்டு திரும்பவும் அந்த பாறை மேல குதிச்சி இங்குட்டு வந்துடும்

இந்த குரங்க எப்படியாவது பிடிச்சி சாப்பிடணும்னு அந்த நதில இருந்த முதலைகள் ரொம்பா நாளா காத்திருந்துச்சுங்க

ஆனா அந்த குரங்கு வேகமா குதிச்சு ஓடுறதால யாராலயும் அந்த குரங்க பிடிக்க முடியல

ஒருநாள் அந்த முதலைகள் எல்லாம் சேந்து ஒரு திட்டம் போட்டுச்சுங்க

அதுபடி ஒரு முதல அந்த பாறை மேல ஏறி படுத்துகிச்சு, அந்த குரங்கு இப்ப இந்த பாறை மேல குதிச்சா உடனே அத பிடிச்சி சாப்பிடலாம்னு காத்துகிட்டு இருந்துச்சு

ஆனா மரத்துமேல இருந்த அந்த குரங்கு அந்த பாறை பெருசா இருக்குறத பாத்துச்சு ,புத்திசாலியான அந்த குரங்குக்கு என்ன நடக்குதுன்னு தெரிய வந்துச்சு

உடனே முதலையாரே முதலையாரே நீங்கதான் பாறையானு கேட்டுச்சு

முட்டாள் முதலை நான் இல்லனு பதில் சொல்லுச்சு

முதலயோட முட்டாள் தனத்தை நினச்சு சிரிச்ச அந்த குரங்கு

எனக்கு ரொம்ப வயசாகிடுச்சு , நீங்க மட்டும் முதலயா இருந்தா கண்ண மூடிக்கிட்டு வாய நல்லா தோரங்க ,உங்க வாய்க்குள்ள விழுந்து நான் சாக போறேன்னு சொல்லுச்சு

இத உண்மைன்னு நம்புனா அந்த முட்டாள் முதலை கண்ண நல்லா மூடிக்கிட்டு வாய நல்லா தொறந்துச்சு

இதுதான் சமயம்னு காத்திருந்த அந்த குரங்கு டக்குனு அந்த முதல மேல குதிச்சு அந்த பக்கமா போயிடுச்சு

அப்பத்தான் தான் ஏமாற்ற பட்டத்த தெரிச்சுக்கிட்ட அந்த முதல வெட்கப்பட்டு அந்த பாறைல இருந்து இறங்கி போயிடுச்சு


The Ugly Duckling Tamil Fairy Tales – அசிங்கமான வாத்து கதை

The Ugly Duckling Tamil Fairy Tales – அசிங்கமான வாத்து கதை :- ஒரு குட்டைக்கு பக்கத்துல ஒரு வாத்து கூட்டம் இருந்துச்சு ,

அந்த வாத்து கூட்டத்துல ஒரு வாத்து நிறைய முட்டைகள் இட்டு குஞ்சி பொறிக்க காத்துகிட்டு இருந்துச்சு

கொஞ்ச காலத்துக்கு அப்புறமா ஒவ்வொரு முட்டையா ஒடஞ்சு குட்டி குட்டி வாத்துகலா வெளியில வர ஆரம்பிச்சது

கடைசியா வித்தியாசமா ஒரு வாத்து வெளியில வந்துச்சு

மத்த வாத்துக எல்லாம் சொல்லுச்சு நீ ரொம்ப அசிங்கமா இருக்கன்னு

ரொம்ப வறுத்த பட்ட அந்த வாத்து மெதுவா நடந்து வேற இடத்துக்கு போக ஆரம்பிச்சது

கொஞ்ச கொஞ்சமா தனியா வளந்த அந்த வாத்து பெருசா ஆகிடுச்சு

ஒருநாள் ஒரு நதிக்கரையோரம் தான் ஏன் இவ்வளவு அசிங்கமா இருக்கோம் மத்த வாதுங்க மாதிரி நாம எப்ப மாறுறதுன்னு நினைச்சு வறுத்த போட்டுக்கிட்டு இருந்துது

அப்பத்தான் ஒரு அன்ன பறவை கூட்டம் அங்க வந்துச்சு

பறவையே நீ ஏன் இங்க இருக்கன்னு கேட்டுச்சுங்க

அதுக்கு நான் ஒரு அசிங்கமான வாத்துனு சொல்லுச்சு

அப்ப ஒரு அன்ன பறவை சொல்லுச்சு கொஞ்சம் முன்னாடி வந்து ஒன்னோட உருவத்த அந்த தண்ணில பாருன்னு சொல்லுச்சு

உடனே அந்த வாத்தும் தண்ணில பாத்துச்சுது , அடடா என்ன என் உருவம் உங்கள போலவே மாறிடுச்சு அப்படினு கேட்டுச்சு

ஆமாம் நீ அசிங்கமான வாத்து கிடையாது ,நீ அழகான அன்ன பறவை

உன்ன பத்தி நீ தெரிஞ்சிக்காம அடுத்தவங்க சொல்றத கேட்டு இத்தன நாள் வறுத்த பட்டுருக்கான்னு சொல்லுச்சு

உடனே அந்த அன்ன பறவை தன்னோட தவற உணர்ந்து அந்த அன்ன பறவைங்களோட கூட்டத்துலயே சேந்துடுச்சு


TAMIL STORIES FOR KIDS விறகு வெட்டுபவரும் கோடாரி தந்த மரமும்

TAMIL STORIES FOR KIDS விறகு வெட்டுபவரும் கோடாரி தந்த மரமும் :- ஒரு ஊருல ஒரு விறகு வெட்டுறவர் இருந்தாரு

ஒருநாள் அவரு காட்டுக்கு விறகு வெட்ட போனாரு ,அப்ப அவரோட கோடாரியோட கைபிடி ஒடஞ்சு போச்சு ,

உடனே அவருக்கு ரொம்ப அழுகையா வந்துச்சு.இனிமே நான் எப்படி வாழுவேன் , என்னோட கோடரி இல்லாம என்னால சம்பாதிக்க முடியாதேன்னு வறுத்த பட்டாரு

உடனே அங்கே இருந்த மரம் சொல்லுச்சு உங்களுக்கு வேணும்னா என்னோட கிளைகள்ல இருந்து ஒரு பாகத்த வெட்டி எடுத்துக்கோங்க அதுல நீங்க கோடரிக்கு கைப்பிடி செஞ்சுக்கலாம்னு சொல்லுச்சு

உடனே அந்த விறகு வெட்டி அந்த மரத்து மேல ஏறி ஒரு கிளையை வெட்டுனாரு

அந்த கிளைய வச்சு தன்னோட கோடாரிக்கு கைப்பிடி செஞ்சாரு ,மறுநாள் எல்லா மரத்தையும் வெட்ட ஆரம்பிச்சாரு

அப்பதான் அந்த மரத்துக்கு தெரிஞ்சது நாம் வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கணும்

யாரு என்ன செய்ய போறாங்கன்ற விஷயம் தெரியாம அடுத்தவங்களுக்கு உதவ போயி இப்ப நமக்கே ஆபத்து வந்துடுச்சுன்னு சொல்லி வறுத்த பட்டுச்சு

தனக்கு சம்பந்தமே இல்லாத விசயத்துல தலையிட்ட அந்த மரமும் அந்த விறகு வெட்டியால வெட்டப்பட்டு கீழ விழுந்துச்சு

குழந்தைகளா இதுமாதிரிதான் எப்பவும் யோசிக்காம அடுத்தவங்களுக்கு உதவி செய்ய கூடாது , நல்லா யோசிச்சு நல்ல உதவிகள செய்யவும் தயங்க கூடாது


Peter Rabbit in Tamil – Kids Bedtime Story – சொல்பேச்சு கேக்காத முயல்

Peter Rabbit in Tamil – Kids Bedtime Story:- ஒரு கிராமத்துல ஒரு முயல் குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த முயல் குடும்பத்துல பீட்டர்னு ஒரு முயல் குட்டி இருந்துச்சு.

ஒருநாள் முயல்களோட அம்மா எனக்கு ஒரு வேலை இருக்கு நான் பக்கத்துக்கு கிராமத்துக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வெளியில கிளம்புச்சு

போறப்ப யாரும் பக்கத்துக்கு தோட்டத்துக்கு போக கூடாது ,அங்க போனீங்கன்னா உங்களுக்கு ஆபத்து ஏற்படும்னு எச்சரிச்சிட்டு போச்சு அந்த முயல் அம்மா .

உடனே எல்லா முயல்களும் அடுத்த தோட்டத்துக்கு போகாம வெளியிலேயே விளையாடுச்சுங்க

ஆனா அப்படி அந்த தோட்டத்துல என்ன தான் இருக்குன்னு ஒரு ஆர்வம் உண்டாச்சு பீட்டர் முயலுக்கு உடனே மெதுவா அந்த தோட்டத்துக்கு போச்சு

அங்க நிறைய காய்கறிகள் இருக்குறத பாத்துட்டு அத திங்க போறப்ப அந்த தோட்டத்தோட முதலாளி வந்து அந்த முயல தொரத்த ஆரம்பிச்சாரு

வேகமா ஓடுன அந்த முயல் ஒரு தண்ணி இருக்குற வாலிகுள்ள ஒளிஞ்சுக்கிடுச்சு

தண்ணிய நிறைய குடிச்ச அந்த முயல் அந்த முதலாளி போகுறவரைக்கும் அங்கேயே இருந்துச்சு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அந்த வாழிய அவரு எடுத்து வெளியில வச்சாரு,உடனே அதுல இருந்து வேகமா குதிச்சு தன்னோட வீட்டுக்கு போச்சு முயல்

அன்னைக்குன்னு பாத்து அவுங்க அம்மா அவனுக்கு புடிச்ச நூடுல்ஸ் செஞ்சாங்க

தண்ணிய நிறைய குடிச்ச அந்த பீட்டர் முயல் அத சாப்பிட முடியாம தூங்கிடுச்சு

அம்மா சொல்படி நடந்துகிட்டு மத்த எல்லா முயலும் தங்களுக்கு புடிச்ச உணவ சாபிடுச்சுங்க


ஓநாயும் குதிரையும் WOLF AND THE HORSE – Tamil Kids Story

ஓநாயும் குதிரையும் WOLF AND THE HORSE – Tamil Kids Story :- ஒரு காட்டு பகுதியில ஒரு குதிரை நடந்து போய்கிட்டு இருந்துச்சு

ரொம்ப தூரம் நடந்த குதிரைக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சுச்சு , அந்த பசியோட நடந்த அந்த குதிர ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு

உணவு தேடிகிட்டே நடந்த அந்த குதிரைய அங்க இருந்த ஒரு ஓநாய் பாத்துச்சு

அடடா இவ்வளவு பெரிய குதிர தனியா போகுதே ,இந்த குதிரைய நாம வேட்டையாடுனோம்னா நம்ம கூட்டத்துக்கே ஒரு வாரம் வேற உணவு தேவ இல்லையேனு நினைச்சி பாத்துச்சு

ஆனா இந்த குதிரை ரொம்ப பெருசா இருக்கே இத எப்படியாவது நம்ம கூட்டம் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போனா மட்டும்தான் எல்லோரும் சேந்து இந்த குதிரைய வேட்டையாடலாம் இல்லைனா இந்த குதிரை தப்பிச்சு போயிடும்னு தனக்குள்ள பேசிக்கிட்டே ஓநாய் குதிரை கிட்ட வந்தது

நண்பரே நீங்க ரொம்ப சோர்வா இருக்குற மாதிரி இருக்கு என்கூட வாங்க நான் வைக்கோல் நிறைய இருக்குற இடத்த கட்டுரேன்னு சொல்லுச்சு

புத்திசாலியான அந்த குதிரை லேசா சிரிச்சிகிட்டு

நீ என்ன வைக்கோல் திங்குற மிருகமா ? , உனக்கு எப்படி அந்த இடம் தெரியும் ? உனக்கு வைக்கோல் திங்கிற பழக்கம் இருந்தா கூட நீ எதுக்கு எனக்கு அத விட்டு கொடுக்கணும் ? இது மாதிரி நிறைய கேள்வி கேட்க ஆரம்பிச்சிச்சு குதிரை

திடீர்னு இந்த கேள்விகள சந்திச்ச குதிரைக்கு என்ன பண்றதுனு தெரியாம உளறுச்சு

உன்னோட வேலை எல்லாம் என்கிட்டே காட்டதன்னு சொல்லிட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சுச்சு குதிரை

குழந்தைகளை எப்போதும் துன்பத்தையே தர்றவங்க நல்லது செஞ்சாலும் அவுங்கள முழுமையா நம்ப கூடாது , அப்படி நம்பினீங்கன்னா இந்த குதிரமாதிரி தப்பிச்சி போகாம , ஓநாயோட சூழ்ச்சில மாட்டிக்குவீங்க

Exit mobile version