Site icon தமிழ் குழந்தை கதைகள்

Thirsty Crow Kids Moral Stories – தாகமான காகம்

tamil thirsty crow

ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சு
அந்த காக்கா ஒரு நாய் உணவு தேடி வானத்துல பறந்து போச்சு அப்போ அந்த காக்காய்க்கு ரொம்ப தண்ணீர் தாகமா இருந்துச்சு
அது ஒரு காட்டுப்பகுதிங்கிரதால எங்க தேடியும் அதுக்கு தண்ணீர் கிடைக்கல


ரொம்ப சோகமான காக்கா சுத்திசுத்தி பறந்து தண்ணீர் கொடுக்குர கிணறு ஆறு ஏரினு ஏதாவது கண்ல படுமானு பாத்துச்சு
ஆனா அந்த காக்காவுக்கு அப்படி ஒரு இடம் கண்ல படவே இல்ல
தண்ணி தாகத்துனால ரொம்ப சோர்ந்து போன காக்கா மேலும் பறக்க முடியாம தினருச்சு
அப்பத்தா ஒரு பழைய வீடு கண்ல பட்டுச்சு
ஆகா இது மனிதர்கள் வாழ்ந்த இடம் மாதிரி தெரியுது இதுல கண்டிப்பா தண்ணி இருக்கும்னு நினைச்சு அந்த வீட்டு மேல போயி உக்காந்துச்சு
ஆனா அங்க மனிதர்கள் யாரும் இல்லாததுனால தண்ணீர் எதுவும் இல்லை
அப்போ தான் ஒரு பாத்திரத்துல கொஞ்சமா தண்ணி இருக்குரத பாத்துச்சு
உடனே ரொம்ப சந்தோசப்பட்ட காக்கா அடடா நமக்கு தண்ணி கிடைச்சிடுச்சுனு உடனே அந்த பாத்திரத்துக்குள்ள தலையவிட்டுச்சு
ஆனா ரொம்ப கொஞ்சமா தண்ணி இருந்ததால் அந்த காக்கானால தண்ணி குடிக்க முடியல
அடடடா இவ்வளவு துரம் அலைஞ்சு திரிஞ்சு தண்ணி கண்டுபிடிச்சும் நம்மாள அத குடிக்க
முடியலையேனு ரொம்ப வருத்தப்பட்டுச்சு
அந்த பாத்திரத்துல இருக்குர தண்ணிய எப்படி குடிக்குரதுனு யோசிச்சப்பதான் அதுக்கு ஒரு யோசன வந்துச்சு
உடனே அக்கம்பக்கத்துல இருந்த கல்ல எடுத்து அந்த பாத்திரத்துல போட்டுச்சு உடனே அந்த
பாத்திரத்துல இருந்த தண்ணி கொஞ்சமா மேல வந்துச்சு
அதபாத்த காக்காக்கு ரொம்ப சந்தோசம்
உடனே நிறைய கல்ல எடுத்து அந்த பாத்திரத்துக்குள்ள போட்டுச்சு
உடனே அந்த பாத்திரத்துல இருந்த தண்ணீர் மெதுவா மேல வந்துச்சு
இப்ப அந்த காக்கா பாத்திரத்துல தலையவிட்டு தண்ணீர் குடிச்சு தன்னோட தாகத்த போக்கிகிச்சு
குழந்தைகளா இந்த கதையில் இருந்து என்ன தெரியுதுனா கஸ்ட காலங்கள்ள நாம புத்திசாலித் தனமா நடந்துகிட்டா நாம அந்த காக்கா மாதிரி எந்த சூழ்நிலையில் இருந்தும் எப்படியும் தப்பிச்சிடலாம்.

Exit mobile version