Site icon தமிழ் குழந்தை கதைகள்

பாபரை வென்ற தெனாலிராமன்

கிருஷ்ணதேவராயர் மற்றம் தெனாலி ராமன் வாழ்ந்த காலத்துல டெல்லிய பாபர் ஆண்டு வந்தாரு

தெனாலி ராமன் கிட்ட ஒரு நாள் கிருஷ்ணதேவராயர் ஒரு போட்டி போட்டாரு

நீ மட்டும் பாபர்கிட்ட போயி உன்னோட வித்தைய எல்லாம் காமிச்சு ஏதாவது பரிசு வாங்கிட்டு வா அப்ப உன்ன திறம சாலினு ஒத்துக்கிறேன்னு சொன்னாரு கிருஷ்ணதேவராயர்

இதக்கேட்ட தெனாலி ராமன் உடனே கிளம்பி டெல்லிக்கு போனாரு

தெனாலி ராமன் தோக்கனும்கிறதுக்காக பாபர்க்கு இந்த போட்டிய பத்தி ஓலைஎழுதி அனுப்பிச்சாரு கிருஷ்ணதேவராயர்

அந்த ஓலைய படிச்ச பாபம் ஓஹோ நாம தெனாலிராமன பாராட்சி பரிசு கொடுத்தா நம் நண்பர் கிருஷ்ண தேவராயர் தோத்துப்போயிடுவாரா

அப்ப நம்ம அவையில் இருக்குற யாரும் தெனாலிராமனோட பேச்சுக்கு சிரிக்ககூடாதுன்னு

கட்டளையும் போட்டாரு

டெல்லி வந்த தெனாலிராமன் பாபரோட அவைக்கு வந்தாரு

தன்னோட விகடகவி திறமை முழுசையும் காமிச்சாரு

ஆனா யாருமே சிரிக்கள். ஓஹோ ஏதோ விசயம் இருக்குன்னு புரிஞ்சுகிட்ட தெனாலிராமன் ஒண்ணுமே பேசாம வெளிய போட்டாரு

இதப்பாத்த பாபர் தெனாலி ராமன் தோற்றான்னு தனக்குள்ள நினைச்சுகிட்ட ஊர்காவல் படைகளை பாக்க நகர்வலம் போனாரு

அப்ப ஒரு முதியவர் மாமரம் நட்டுகிட்டு இருக்குறத பாத்தாரு

அடா முதியவரே எதுக்கு இப்ப இந்த தள்ளாத வயதுல மாமரம் நட்டுகிட்டு இருக்கீங்கன்னு கேட்டடாரு

இது என்னோட கடமை மன்னா நம் முன்னோர்கள் கடமையான மாமரம் நடுரத ஒழுங்கா செஞ்ச தால இப்ப நமக்கு மாம்பழம் கிடைக்குது

அது மாதிரி நம்ம வம்சாவளியினருக்கு மாம்பழம் கிடைக்கனும்ன நான் இப்போ மரம் நடுரேன்னு சொன்னாரு

இதக்கேட்ட பாபர் பிரமாதம் முதியரேனு சொல்லி அவருக்கு ஒரு தங்க மாம்பழம் கொடுக்க

சொன்னாரு,..

அத வாங்கிகிட்ட முதியவர் மாம்மரம் நட்டா உடனே பழம் கிடைக்காதுன்னு சொன்னாங்க ஆனா பாபர் ஆட்சியில் உடனே மாம்பழம் அதுவும் தங்க மாம்பழம் கிடைக்குதேனு சொன்னாரு

இதக்கேட்டு ரொம்ப சந்தோசப்பட்ட பாபர் இன்னோரு மாம்பழம் கொடுக்க சொன்னாரு

அதயும் வாங்கிகிட்ட முதியவர் அல்லாவோட கருணையினால மாமரம் செடியிலயே காய்கிறத

பாருங்கனு சொன்னாரு

மீண்டும் ஒரு தங்க மாம்பழம் கொடுக்க சொன்ன பாபர் போதும் முதியவரே

நீங்க பேசிகிட்டே இருந்தீங்கன்னா உங்களை பாராட்ட நான் தங்க மாம்பழம் கொடுத்து கிட்டே இருக்கனும் அதனால நான் கிளம்புரேன்னு சொன்னாரு

இதக்கேட்ட அந்த முதியவர் தன்னோட தாடியை பிச்சு எடுத்தாரு

அங்க வேசம் போட்டு இருந்த தெனாலிராமன் இருந்தாரு

அடடா நம்ம கிட்ட தன்னோட திறமைய காமிச்சு மூனு பரிசு வாங்கிட்டாரே இந்த தெனாலிரா மன்னு ஏமாத்ததமடைஞ்சாரு பாபர்

உடனே கிருஷ்ணதேவராயருக்கு உங்கள் ஊர் தெனாலிராமன் உண்மையவே மிகவும்

கெட்டிக்காரர்னு ஓலை அனுப்பினாரு பாபர்

அரண்மனைக்கு திரும்புன தெனாலிராமனுக்கு மிகப்பெரிய விழாவும் விருந்தும் நடத்தி

கவுரவிச்சாரு கிருஷ்ணதேவராயர்

Exit mobile version