The Woodcutter And His Axe – விறகுவெட்டியும் தேவதையும் :- ஒரு கிராமத்துல ஒரு விறகு வெட்டி வாழ்ந்துகிட்டு வந்தாரு
அவரு ரொம்ப நேர்மையா இருந்ததால ஊருல இருந்த எல்லாருக்கும் அவர பிடிக்கும்
ஒருநாள் எப்பவும்போல விறகு வெட்ட காட்டுக்கு போனாரு அந்த விறகுவெட்டி
ஆத்துக்கு பக்கத்துல இருக்குற ஒரு பெரிய மரத்தை வெட்ட ஆரம்பிச்சாரு விறகுவெட்டி
மேல் கிளையை அவரு வெட்டும்போது ,அவரோட கோடாரி தவறி தண்ணியில விழுந்துடுச்சு
தன்னுடைய தொழிலுக்கு மிக முக்கியமான கோடாரி இப்படி தண்ணில விழுந்துடுச்சேன்னு வருத்தப்பட்டாரு அவரு
ஆத்துல தண்ணி வேகமா ஓடுறதால தன்னால உள்ள இறங்க முடியாதுனு நினைச்ச அவரு கடவுளை வேண்ட ஆரம்பிச்சாரு
டக்குனு ஒரு வன தேவதை அவர் கண் முன்னாடி ஆத்துல இருந்து வெளிய வந்துச்சு
நேர்மையான வியாபாரியை கவலை படாதீங்க உங்க கோடாலிய நான் எடுத்து தாரேன்னு சொல்லுச்சு அந்த தேவதை
உடனே தண்ணிக்குள்ள முங்குன அந்த தேவதை ஒரு வெள்ளியால் செஞ்ச கோடாலிய எடுத்துட்டு வந்து கொடுத்துச்சு
அத பார்த்த அந்த விறகுவெட்டி கொஞ்சம் கூட பேராசை படாம ,தேவதையே இது என்னுடைய கோடாலி இல்லைனு சொன்னாரு
ஏன் இந்த கோடாலிய வச்சுக்கோங்க விறகு வெட்டாமலேயே நீங்க பணக்காரனா ஆகிடலாம்னு சொல்லுச்சு அந்த தேவதை ,அதுக்கு அந்த விறகு வெட்டி சொன்னாரு உழைக்காமல் எனக்கு எந்த பணமும் தேவையில்லைனு சொன்னாரு
உடனே திரும்பவும் தண்ணிக்குள்ள போன தேவதை ஒரு தங்க கோடாலிய எடுத்துட்டு வந்து கொடுத்துச்சு
அத பார்த்த விறகுவெட்டி கொஞ்சம் கூட பணத்தாசை இல்லாம தன்னோட கோடாலிதான் வேணும்னு சொன்னாரு
உடனே திரும்ப தண்ணிக்குள்ள போன தேவதை அவரோட இரும்பு கோடாலிய எடுத்துட்டு வந்து கொடுத்துச்சு
அத பார்த்த அந்த விறகுவெட்டி தன்னனுடைய கோடாலி இதுதான்னு சொல்லி தனக்கு அத எடுத்துக்கொடுத்ததுக்கு நன்றியும் சொன்னாரு
ஆனா அந்த தேவதை சொல்லுச்சு உங்களோட நேர்மைய சோதிக்கத்தான் அந்த தங்க கோடாலியாயும் வெள்ளி கோடாலியாயும் உங்ககிட்ட கொடுத்தேன்
ஆனா நீங்க உங்க நேர்மையான குணத்தினால அத வேண்டாம்னு சொல்லிட்டீங்க , உங்களுடைய நேர்மைக்கு பரிசா இந்த மூணு கோடாலியும் உங்களுக்குத்தானு சொல்லி எல்லா கோடாலியாயும் அந்த விறகுவெட்டிக்கு பரிசா கொடுத்துட்டு மறைஞ்சு போச்சு அந்த தேவதை