The Wolf & the Shepherd – ஓநாயும் ஆடு மேய்ப்பவனும் :- ஒருநாள் ஓநாய்க்கு ரொம்ப பசி எடுத்துச்சு
உணவு தேடி காடு முழுசும் நடந்த ஓநாய்க்கு ஒண்ணுமே கிடைக்கல ,அதனால காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற கிராமத்து பக்கத்துல போயி உணவு தேடுச்சு
அப்ப அங்க ஒரு ஆடு மேய்கிறவரு நிறய ஆடுகளை மேய்ச்சிகிட்டு இருந்தாரு
அதுல ஒரு ஆட பிடிச்சி சாப்பிடலாம்னு நினைச்ச ஓநாய் மெதுவா அந்த ஆட்டு மந்தைக்கு போச்சு
ஓநாய் ஆடுகள் பக்கம் வர்றத பார்த்த ஆடு மேய்கிறவரு வேகமா ஓடி வந்து தன்கிட்ட இருந்த ஈட்டிய ஓநாய் மேல வீசுனாரு
அந்த ஈட்டியில இருந்து தப்பிச்ச ஓநாய் வேகமா வேற பக்கம் ஓடி போய்டுச்சு
கொஞ்ச நேரம் கழிச்சி கிராமத்துக்கு இன்னொரு பக்கம் போச்சு ,அங்க அந்த ஆடு மேய்கிறவரு ஆடுகளை கூண்டுல அடச்சிட்டு வீட்டுக்குள்ள போறத பார்த்துச்சு
அடடா இதுதான் அந்த ஆடு மேய்கிறவரோட வீடானு அங்கேயே நின்னு அந்த வீட்டை பார்த்துகிட்டே இருந்துச்சு
அப்பத்தான் ஆடு பெய்கிறவரு ஒரு பெரிய அரிவாளை எடுத்து ஒரு ஆட்ட வெட்டி கரி எடுக்குறத பார்த்துச்சு
அடடா இந்த ஆட்ட இவ்வளவு கஷ்டப்பட்டு பாதுகாத்தது அத வெட்டி சாப்பிடத்தனா ,இவ்வளவு நாள் இந்த ஆடுகளை வளர்க்குறது பாசத்தாலனு நினைச்சது எவ்வளவு பெரிய தப்புனு அந்த ஓநாய்க்கு புரிஞ்சது
உடனே ஒரு ஆட்டுக்குட்டிய தூக்கிட்டு ஓடிடுச்சு ஓநாய்
நீதி : கசாப்பு கடை காரரின் கருணை ஆட்டு குட்டி வளரும் வரை மட்டுமே