Site icon தமிழ் குழந்தை கதைகள்

நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் – The Wolf & the Kid

நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் – The Wolf & the Kid:- ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ஒரு ஆட்டுக்குட்டி இருந்துச்சு

அது எப்பவும் தன்னோட அம்மவோடவும் தங்களோட ஆட்டு மந்தையோடயும் சேர்ந்து அந்த காட்டுக்குள்ள போயி இரைதேடி சாப்பிடும்

சாயந்திரம் ஆனதும் தன்னோட மந்தையோட சேர்ந்து வீட்டுக்கு வந்திடும் அந்த ஆட்டுக்குட்டி

ஒருநாள் அதே மாதிரி காட்டுக்குள்ள இரைதேட போன அந்த ஆட்டுக்குட்டி ரொம்ப பசிச்சதால தனக்கு வேண்டிய இலை தலைகளை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு

அப்படி சுவாரசியமா சாப்டுகிட்டு இருந்த ஆட்டுக்குட்டி தன்னோட அம்மாவயும் தன்னோட ஆட்டு கூட்டத்தையும் மறந்துடுச்சு

சாயந்திரம் ஆனதால அந்த ஆட்டு கூட்டம் தங்களோட கிராமத்த நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க

ஆனா இது தெரியாத ஆட்டு குட்டி தன்னோட சாப்பாட்ட சாப்பிட்டுக்கிட்டே இருந்துச்சு

அப்ப அங்க ஒரு ஓநாய் வந்துச்சு அத பார்த்த ஆட்டுக்குட்டி ரொம்ப பயந்து போச்சு

கொஞ்சம் தைரியமா இருந்த ஆட்டுக்குட்டிக்கு ஒரு யோசனை வந்துச்சு

உடனே அந்த ஓநாய்கிட்ட ஐயா நீங்க எப்படியும் என்ன சாப்பிட போறீங்க அதனால என்னோட கடைசி அசைய நிறைவேத்துங்கனு சொல்லுச்சு

அந்த ஓநாயும் உன்னோட கடைசி ஆசை என்னனு கேட்டுச்சு ,அதுக்கு அந்த ஆட்டுக்குட்டி சொல்லுச்சு எனக்கு டான்ஸ் ஆடணும்போல இருக்கு நீங்க ஒரு பாட்டு பாடுங்கனு சொல்லுச்சு

உடனே அந்த ஓநாய் பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த சத்தம் கேட்ட ஆட்டு கூட்டத்தை சார்ந்த வேட்டை நாய்களுக்கு அந்த சத்தம் கேட்டுச்சு

உடனே அந்த வேட்டை நாய்கள் எல்லாம் ஓநாய் சத்தம் வர்ற இடத்துக்கு ஓடி வந்துச்சுங்க

வேட்டை நாய்கள பார்ததும் ஓனாய் அங்க இருந்து ஓடி போய்டுச்சு ,அங்க வந்த அந்த ஆட்டு குட்டியோட அம்மா நடந்த எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டு ,ஆட்டு குட்டியோட புத்திசாலித்தனத்தை பாராட்டுச்சு

Exit mobile version