The Wolf, the Kid, & the Goat- ஓநாய் ராஜா வாழ்க :- ஓநாய்கள் அதிகம் வாழுற காட்டுக்குள்ள ஒரு ஆடு வீடுகட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த ஆட்டுக்கு ஒரு மனைவியும் குழந்தையும் இருந்துச்சு , அந்த காடு ஆபத்து நிறைந்த காடுங்கறதால , காட்டு மிருகங்கள் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுனு அந்த ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாடம் நடத்துவாங்க அம்மா ஆடும் அப்பா ஆடும்
ஒருநாள் வீட்டு வாசலுக்கு வந்த அப்பா ஆடு ,நான் சந்தைக்கு போயிட்டு வரேன் , யாரும் வந்து வீட்டு கதவ தட்டுனா நம்மளோட பாஸ்வர்ட் ” ஓநாய் ராஜா வாழ்க ” சொன்னா மட்டும் திரங்கனு சொல்லிட்டு போய்டுச்சு
ஆனா தன்னோட குழந்தைகிட்ட பாஸ்வர்ட் சொல்லுறதை அங்க மறைஞ்சிருந்து ஒரு ஓநாய் கேட்டுடுச்சு
அப்பா ஆடு அங்குட்டு போனதும் வீட்டு கதவ தட்டுச்சு அந்த ஓநாய்
உடனே அந்த ஆட்டுக்குட்டி பாஸ்வர்ட் சொல்லுங்கன்னு சொல்லுச்சு
உடனே அந்த ஓநாய் “ஓநாய் ராஜா வாழ்க”னு சரியா சொல்லுச்சு , ஆனா காட்டு மிருகங்கள் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கணும்னு தினசரி பாடம் படிச்சா ஆடு ஓநாயோட குரலை கண்டுபிடிச்சிடுச்சு
உடனே அடடா உங்களோட குரல் ஒரு மாதிரி இருக்கு ,எங்க அப்பாவுக்கு ஓநாய் மாதிரி கூறிய நகங்கள் இருக்கு அத கதவோட இடைவெளியில காட்டுங்கனு சொல்லுச்சு ஆடு
உடனே அந்த முட்டாள் ஓநாய் கதவு இடைவெளியில தன்னோட கூறிய நகங்களை காட்டுச்சு
வந்திருக்குறது ஓநாய்தான்னு சந்தேகத்துக்கு இடமில்லாம தெரிஞ்சிகிட்ட ஆட்டுக்குட்டி “அம்மா அப்பா ஏன் இப்ப திரும்ப வந்திருக்காரு , இது சிங்க ராஜா வர்ற நேரமாச்சேன்னு ” சத்தமா சொல்லுச்சு
அத கேட்ட ஓநாய் “என்னது சிங்கராஜா வர்ற நேரமானு ” சொல்லிட்டு அங்க இருந்து ஓடி போய்டுச்சு
நீதி : தகுதி உள்ளவையே பிழைத்திருக்கும் (survival of the fittest)