Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Wolf And The Three Pigs – மூன்று பன்றிகள்

The Wolf And The Three Pigs – மூன்று பன்றிகள் :- ஒரு காட்டு பகுதியில மூணு பண்ணி குட்டிங்க அவுங்க அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

அதுங்களுக்கு கொஞ்சம் வயசானதும் அவுங்க அம்மா பண்ணி அதுங்கள கூப்பிட்டுச்சு

உங்களுக்கு வயசாகிடுச்சு நீங்க இப்ப தனியா வாழ பழகிக்கிடனும் ,எப்பவும் நான் உங்களுக்கு துணையா இருக்க முடியாது ,அதனால் காட்டுக்குள்ள ஒவ்வொருத்தரும் தனி தனியா வீடு காட்டி உங்க வாழ்க்கை ஆரம்பிங்கனு சொல்லுச்சு

உடனே அந்த மூணு பன்னிகுட்டிகளும் அவுங்க அம்மா பண்ணிய விட்டுட்டு காட்டுக்குள்ள போச்சுங்க

ஒரு வளமான இடத்துக்கு வந்ததும் அந்த மூணு பன்னிகுட்டிகளும் இதுதான் நாம வீடு கட்ட சரியான இடம்னு முடிவு பண்ணுச்சுங்க

உடனே மூணு பண்ணிகளும் தனித்தனியா போயி வீடுகட்ட முடிவு பண்ணி பிரிஞ்சு போச்சுங்க

முதல் பண்ணி தான் நடந்து போறப்ப நிறய வைக்கோல் இருக்குறத பார்த்துச்சு ,

உடனே அந்த வைக்கோல் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து தனக்கான வீட கட்டுச்சு

அடுத்த பண்ணி குட்டி தான் போகுற பாதையில் நிறய விறகு வெட்டப்பட்டு கிடக்கிறதா பார்த்துச்சு

உடனே அந்த விறகு கட்டைகளை எடுத்துட்டு வந்து தனக்கான வீட்ட கட்டுச்சு அந்த பண்ணி

மூணாவது பண்ணி நடந்து போறப்ப நிறைய செங்கல்லும் வீடுகட்டற பொருட்களும் இருக்குறத பார்த்துச்சு

உடனே அந்த செங்கல் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து தனக்கான வீட்டை கட்டிகிடுச்சு

அந்த பண்ணிங்க அங்க வந்ததுல இருந்து அதுங்கள பார்த்துகிட்டே இருந்துச்சு ஒரு ஓநாய்

ஒருநாள் ராத்திரி வைக்கோல் வச்சு வீடு கட்டுன பண்ணியோட வீட்டுக்கு போச்சு அந்த ஓநாய்

அந்த வீடு வைக்கோலால கட்டுனதால ரொம்ப லேசா இருந்துச்சு

அங்க வந்த ஓநாய் ஓங்கி ஒரு ஊது ஊதுச்சு ,அந்த காத்துல அந்த வைக்கோல் எல்லாம் பறந்து போச்சு

உள்ள இருந்த அந்த பண்ணிக்குட்டி பயந்து போயி குச்சிய வச்சு வீடுகட்டுன பின்னியோட வீட்டுக்குள்ள ஓடி போய்டுச்சு

அது பின்னாடியே வந்த ஓநாய் அந்த குச்சி வீட்டை பார்த்துச்சு ,அதுவும் சுலபமா ஓடயிர மாதிரி இருந்ததால

திரும்பவும் ஒரு ஊது ஊதுச்சு , உடனே அந்த வீடும் காத்துக்கு தாங்காம விழுந்துடுச்சு

உள்ள இருந்த ரெண்டு பன்னிகுட்டிகளும் தங்களோட அண்ணன் வீட்டுக்குள்ள ஓடி போயிடுச்சுங்க

அதுங்கள தொரத்திக்கிட்டே வந்த ஓநாய் அந்த பெண்களால கட்டுன வீட்ட பார்த்துச்சு

தான் ஏற்கனவே ரெண்டு வீட்ட ஊதி தள்ளுனதால கர்வத்தோட இருந்த அந்த ஓநாய் இந்த வீட்டையும் ஊதுச்சு

ஆனா பலமான அந்த வீடு அப்படியே இருந்துச்சு ,உடனே கோபமான அந்த ஓநாய் ஓடி வந்து ஒரு முட்டு முட்டுச்சு அந்த வீட்ட ஆனா அந்த வீட்டுக்கு ஒண்ணுமே ஆகல

செங்கல் வீட்ட முட்டுனதால ஓநாய்க்கு தான் மண்டை உடைஞ்சு ரெத்தம் வந்துடுச்சு

அப்பதான் அந்த ஓநாய்க்கு புரிஞ்சது

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
.

அப்படிங்கிற திருகுரலோட அர்த்தம்

(செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க)

Exit mobile version