Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Wolf and the Lamb – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

The Wolf and the Lamb – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:- ஒரு கிராமத்துல ஒரு பெரிய ஆட்டு மந்தை இருந்துச்சு

அந்த ஆட்டு மந்தையை ஒரு ஆடு மேய்ப்பவர் தினமும் பக்கத்துல இருக்குற காட்டுக்கு கூட்டிட்டு போயி மேய வைப்பாறு

ஒருநாள் அப்படி போகும்போது ஒரு ஆட்டு குட்டி மட்டும் கூட்டத்த விட்டு தனியா போயி மேய ஆரம்பிச்சது

அப்ப திடீர்னு ஒரு ஓநாய் பக்கத்துல வந்துடுச்சு

அடடா கூட்டத்த விட்டு தனியா வந்து இப்படி மாட்டிக்கிட்டமேன்னு நினைச்சது

மெதுவா அந்த ஓநாய் கிட்ட பேச்சு கொடுத்தது, என்ன சாப்பிட போறீங்களான்னு கேட்டது

ஆமாம்னு சொல்லுச்சு அந்த ஓநாய்

எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்க நான் நிறைய புள்ள சாப்பிடுறேன் அதுக்கு அப்புறமா என் எடை கூடும் நீங்க அப்புறமா சாப்பிட்டீங்கன்னா நிறைய சாப்பிடலாம்னு சொல்லுச்சு

அத கேட்ட ஓநாய் ஒத்துக்கிடுச்சு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா இப்ப உன்ன சாப்பிடட்டுமான்னு கேட்டுச்சு அந்த ஓநாய்

இல்ல இல்ல என் வயித்துல புள் இன்னும் செரிக்கவே இல்ல நான் கொஞ்சம் டான்ஸ் ஆடுறேன் அப்பத்தான் புள் செமிச்சு என் எடை கூடும்னு சொல்லுச்சு

அதுக்கும் ஓநாய் சரின்னு சொல்லுச்சு

மெதுவா நடனமாடுன்னு ஆட்டுக்குட்டி எனக்கு நல்லா டான்ஸ் ஆட முடியல நீங்க கொஞ்சம் பாட்டு படுங்கன்னு சொல்லுச்சு

பொறுமை இழந்த ஓநாய் கோபத்துல சத்தமா பாடுச்சு

ஓநாயோட சத்தத்தை கேட்ட ஆடுமேய்க்குறவறு வந்து அந்த ஆட்டு குட்டிய காப்பாத்துனாரு

Exit mobile version