Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Wolf and Seven Little Goats – ஓநாயும் ஏழு குட்டி ஆடுகளும்

The Wolf and Seven Little Goats – ஓநாயும் ஏழு குட்டி ஆடுகளும் :- ஒரு காட்டு பகுதியில ஏழு குட்டி ஆடுகளும் அவங்களோட அம்மாவும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க

அவுங்க எல்லாரும் ரொம்ப பாதுகாப்பான எடத்துலதான் விளையாடுவாங்க , எப்பவும் ஆபத்தான காட்டு பகுதிக்கு போகவே மாட்டாங்க

அப்ப ஒரு ஓநாய் ரொம்ப நாளா அதுங்கள திங்கணும்னு காத்துகிட்டு இருந்துச்சு

ஒரு நாள் அம்மா ஆடு கடைக்கு போக கிளம்புச்சு , அதனால தன்னோட குட்டிகள் கிட்ட பத்திரமா வீட்டுக்குள்ளவே இருக்க சொல்லிட்டு போச்சு

அம்மா ஆடு வெளியில போறத பார்த்த அந்த ஓநாய்க்கு ஒரே சந்தோசம்

உடனே நேரா அந்த ஆட்டுக்குட்டிகள் வாழ்ந்துகிட்டு வந்த வீட்டுக்கு போயி நான்தான் அம்மா வந்திருக்கேன் கதவ தொரங்கனு சொல்லுச்சு

ஆனா அதோட கரகரப்பான குரலை கேட்ட அந்த ஆட்டு குட்டிங்க , கதவுகிட்ட போச்சுங்க

எங்க அம்மா குரல் இது இல்லையேனு சொல்லுச்சுங்க

உடனே தன்னோட வீட்டுக்கு போச்சு ஓநாய்

அங்க இருந்த சால்க் பீஸ் எல்லாத்தையும் எடுத்து கரைச்சி குடிச்சிட்டு ,திரும்பவும் வந்து நான்தான் அம்மா வந்திருக்கேன் கதவ திரங்கனு சொல்லுச்சு

ஆனா கதவுக்கு அடியில அந்த ஓநாயோட கால பார்த்த ஆட்டு குட்டிங்க எங்க அம்மா காலு மாதிரி இல்லையே ,உங்க கால் கருப்பா இருக்கேனு சொல்லுச்சுங்க

உடனே வீட்டுக்கு போன ஓநாய் நிறய சால்க் பீஸ் எடுத்து உடைச்சி தன்னோட உடம்பு முழுசும் பூசிக்கிடுச்சு ,

அப்படியே ஆட்டு குட்டிங்களோட வீட்டுக்கு வந்த ஓநாய் நாந்தா அம்மா வந்திருக்கேன்னு சொல்லுச்சு

குரலையும் வெள்ளை காலையும் பார்த்த அந்த ஆட்டு குட்டிங்க அந்த ஓநாய்க்கு கதவ தொறந்து விட்டுடுச்சுங்க

வீட்டுக்குள்ள வந்த ஓநாய் ஆறு ஆட்டு குட்டிங்கள பிடிச்சி முழுசா தின்னுடுச்சு ,ஒரே ஒரு குட்டி மட்டும் அடுப்பு அடியில ஒளிஞ்சிகிட்டு தப்பிச்சிடுச்சு

வீட்டுக்கு திரும்பி வந்த அம்மா ஆட்டுக்கு ரொம்ப அதிர்ச்சியா போச்சு ,ரொம்ப கோபப்பட்ட அம்மா உயிரோட இருந்த ஆட்டு குட்டிய கூட்டிகிட்டு அந்த ஓநாய தேடி போச்சு

அங்க ஒரு மரத்தடியில் உண்ட கலைப்புல தூக்கிகிட்டு இருந்த ஓநாயை பார்த்துச்சு , உடனே மெதுவா அதுகிட்ட போன அம்மா ஆடு

ஒரு கத்திரிக்கோல எடுத்து ஓநாயோட வயித்த கிழிச்சி தன்னோட ஆட்டு குட்டிங்க எல்லாத்தையும் பத்திரமா வெளியில எடுத்துச்சு

அதுக்கு அப்புறமா ஒரு பெரிய கல்ல எடுத்து அதோட வயித்துல வச்சு தச்சிடுச்சு

தூங்கி எழுந்திருச்ச ஓநாய்க்கு நடக்கவே முடியல ,அதுக்கு ரொம்ப தண்ணி தவிச்சுச்சு

உடனே பக்கத்துல இருக்குற கிணத்துக்கு தண்ணி குடிக்க போச்சு

கிணத்துக்கு மேல ஏறுன ஓநாய்க்கு வயித்துல இருந்த கல்லோட பாரம் தாங்காம நிலை தடுமாறுச்சு

உடனே பொத்துனு தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு அந்த ஓநாய் ,அதோட வயித்துக்குள்ள இருந்த கல்லு அந்த ஓநாய தண்ணிக்குள்ள இருந்து வெளிய வர முடியாம அமுக்குச்சு

குட்டி ஆடுகளை பாவம் பாக்காம தின்ன ஓநாய்க்கு சரியான முடிவு கிடைச்சுச்சு

Exit mobile version