The Verbal Reward – கிருமியும் பீர்பாலும் – Akbar Birbal Story in Tamil:-அக்பரோட நண்பரான புலவர் ஒருத்தர் இருந்தாரு
அவரு ஒருநாள் ஒரு பணக்காரர் கிட்ட போயி அவர புகழ்ந்து பாடுனாரு ,ஆனா அந்த பணக்காரர் ஒரு கஞ்சன்
தன்ன புகழன்றத அவர் ரொம்ப விரும்புனாரு ,ஆனா புலவருக்கு பரிசு கொடுக்க விருப்பம் இல்ல
அதனால நாளைக்கு வாங்க புலவரேனு சொன்னாரு
இதைக்கேட்ட புலவரும் மறுநாள் தனக்கு நல்ல பரிசு கிடைக்கும்னு நினச்சு ,மறுநாளும் போனாரு
அன்னைக்கும் புலவர தன்ன புகழ்ந்து பாட சொன்னாரு ,அதையும் கேட்டுட்டு நாளைக்கு வாங்கன்னு சொன்னாரு
இப்படியே கொஞ்ச காலம் போச்சு ,ஒருநாள் கோப பட்ட புலவர் என்ன நாளைக்கு வா நாளைக்கு வானு சொல்றிங்களே தவற பரிசு ஒன்னும் கொடுக்க மற்றிங்கனு கேட்டாரு ,அதுக்கு அந்த பணக்காரர் சொன்னாரு
உங்கள மறுநாள் வரத்தான சொன்னேன் பரிசு கொடுக்குறேனு சொன்னேனானு கேட்டாரு
தான் ஏமாத்த பட்டத நினச்ச அந்த புலவர் பீர்பால் கிட்ட போய் இந்த விஷயத்தை சொன்னாரு
உடனே பீர்பால் சொன்னாரு ,ஒருநாள் அந்த பணக்காரரை விருந்துக்கு வாங்கனு சொல்லி அவரோட வீட்டு கூப்பிட சொன்னாரு
புலவரும் அந்த பணக்காரர் கிட்ட போயி ,விருந்துக்கு வாங்கனு சொன்னாரு
அந்த பணக்காரருக்கு புலவரோட வீட்டுக்கு வந்தாரு ,அங்க பீர்பாலும் இருந்தாரு
பீர்பாலும் அந்த புலவரும் நிறைய பேசிக்கிட்டே இருந்தாங்க
நேரம் ஆக ஆக பணக்காரருக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சது ,அவரு கேட்டாரு புலவரே நேரம் ஆகிடுச்சு இன்னும் ஏன் விருந்து வைக்கலைனு கேட்டாரு
உடனே பீர்பால் சொன்னாரு ,விருந்துக்கு வாங்கனு தானே கூப்பிட்டோம் ,விருந்து சாப்பிட வாங்கனு கூப்பிடலையேனு சொன்னாரு
பணக்காரருக்கு ஒரே திகைப்பா போச்சு ,தான் செஞ்ச தப்ப தான் பீர்பால் சுட்டி கட்டுறாருனு புரிஞ்சிக்கிட்டாரு
உடனே பீர்பால் கிட்டயும் ,புலவர்கிட்டயும் மன்னிப்பு கேட்டாறு,புலவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாரு