The Tiny Army That Saved the Forest – எறும்பு கூட்டத்தின் பலம் :- ஒரு மிக பெரிய காட்டுக்கு லொக்ஸ்ட் ங்குற வெட்டுக்கிளி கூட்டம் வந்துச்சு
அந்த வெட்டுக்கிளிகளுக்கு கூட்டமா வந்து பச்ச செடிங்க எல்லாத்தையும் தின்னு மிக கொடூரமான பஞ்சத்தை ஏற்படுத்துறது வழக்கம்
இயற்கைக்கு மாறா எல்லா மிருகங்களுக்கும் உயிர்வாழ தேவைப்படுற எல்லாத்தையும் அந்த வெட்டுக்கிளி கூட்டம் அழிச்சிகிட்டு இருந்துச்சு
உடனே காட்டு மிருகங்கள் எல்லாம் சேர்ந்து இந்த பிரச்னையை எப்படி தீக்குறதுனு பேசுச்சுங்க
அப்ப எறும்பு கூட்டம் ஏதோ யோசனை சொல்ல ஆரம்பிச்சுச்சு அப்ப மத்த மிருகங்கள் இது நம்ம காட்டுக்கு வந்திருக்கிற மிக பெரிய பிரச்னை இத சின்ன கூட்டமான உங்களால தீக்க முடியாது அமைதியா இருங்கனு சொல்லிடுச்சுங்க
ஆனா அந்த காட்டுல இருக்கற எல்லா மிருகங்களும் ஒண்னா சேர்ந்து போராடுனாலும் அந்த வெட்டுக்கிளி கூட்டத்தை அங்க இருந்து விரட்ட முடியல
ஆனா தன்னம்பிக்கையோட இருந்த எறும்புகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துச்சுங்க ,அந்த வெட்டுக்கிளிகள் தங்களோட இனப்பெருக்கத்துக்கு ஈர மண்ணுல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறதா பாத்துச்சுங்க
உடனே எல்லா மிருகங்களும் தொடர்ந்து அந்த முட்டைகளை உடைச்சு வெட்டுக்கிளிகள் புதுசா உருவாகுறத தடுத்துச்சுங்க
இந்த காட்டுல இருந்தா நம்மளோட சந்ததியே வளராதுனு புரிஞ்சுக்கிட்டு அங்க இருந்து போயிடுச்சுங்க வெட்டுக்கிளிங்கை
இத பார்த்த மத்த மிருகங்கள் உருவத்துல சின்னதா இருந்தாலும் தங்களோட புத்திசாலித்தனத்தால் தங்களோட காட்ட காப்பாத்துனதுக்கு நன்றி சொல்லுச்சுங்க