Site icon தமிழ் குழந்தை கதைகள்

THE THIEF AND THE DOG – Thirukkural Kadhaigal – நாயின் நல்லொழுக்கம்

THE THIEF AND THE DOG - Thirukkural Kadhaigal

THE THIEF AND THE DOG – Thirukkural Kadhaigal – நாயின் நல்லொழுக்கம் :- ஒரு சின்ன குடும்பத்துல ஒரு குட்டி நாய் இருந்துச்சு

அது அந்த வீட்டுல இருக்குற எல்லாரோடையும் ரொம்ப சந்தோஷமாவும் இருந்துச்சு ,அங்க இருந்த குட்டி பையன் படிக்கின்ற திருக்குறள கேட்டு பின்பற்றி நடக்க ஆரம்பிச்சது அந்த நாய்

ஒருநாள் அந்த வீட்டுல எல்லாரும் தூக்கிகிட்டு இருந்தாங்க ,அப்பா எதோ சத்தம் கேட்டு முழிச்சது அந்த குட்டி நாய்

சமையலறையில இருந்து சத்தம் வர்றத பாத்த அந்த நாய் வேகமா பொய் என்னனு பாத்துச்சு

அங்க ஒரு திருடன் ஜன்னல் வழியா உள்ள வர பாத்தான்

இந்த நாய பாத்ததும் எனக்கு உள்ள வாரத்துக்கு வழிவிட்டு ,குறைத்து என்ன காட்டி கொடுத்துடாத உனக்கு நல்ல கறி துண்டு கொண்டு வந்திருக்கேன்னு சொல்லி ஒரு இறைச்சி துண்ட தூக்கு அந்த நாய்கிட்ட போட்டான்

நீ அந்த இறைச்சியை சாப்டுட்டு என்ன உள்ள விடு நாம இனிமே நண்பர்களா இருப்போம்னு சொன்னான்

இத கேட்ட அந்த நாய் சொல்லுச்சு நேத்து எங்க வீட்டு பையன் ஒரு திருக்குறள் படிச்சான் அந்த திருக்குறள்

உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

அதோட அர்த்தம் உனக்கு தெரியுமா “தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?”

எங்க வீட்டுக்கு கேடு நினைச்சு என்னோட நட்ப பெற நினைக்கிற உன்னோட நட்பு தேவை இல்லைனு சொல்லி குறைக்க ஆரம்பிச்சது அந்த நாய்

உடனே அந்த வீட்டுக்காரர் எழுந்து வந்து அந்த திருடன தொரத்தி விட்டுட்டு அந்த நாய்க்குட்டிய பாராட்டுனாரு

Exit mobile version