The Thief and Mulla’s Rooster – முல்லாவும் கோழி திருடனும் :- முல்லா தன்னோட கழுதய கூட்டிகிட்டு சந்தையில இருந்து வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தாரு
அப்பதான் ஒரு கோழி வியாபாரி நிறய கோழி குஞ்சுகளை வித்துக்கிட்டு இருக்குறத பார்த்தாரு , உடனே முல்லாவுக்கு தானும் கோழி வளக்கணும்னு ஆச வந்துச்சு ,உடனே பத்து கோழி குஞ்சுகளை வாங்கி ஒரு கூடையில் வச்சு வீட்டுக்கு வந்தாரு
அத பார்த்த முல்லாவோட மனைவி இது என்ன நம்ம படுக்குறதுக்கே வீட்டுல இடம் இல்ல இதுல கோழி வேற வழக்க போறீங்களானு கேட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க ,
உடனே முல்லா வீட்டுக்கு பின்னாடி இருக்குற தோட்டத்துல ஒரு கூண்டு அடிச்சி அதுல எல்லா கோழிகளும் விட்டு வளர்க்க ஆரம்பிச்சாரு
கொஞ்ச நாள்லயே எல்லா கோழி குஞ்சுகளும் நல்லா வளர ஆரம்பிச்சுச்சுங்க ,அப்பத்தான் முல்லா நினைச்சாரு அடடா இப்படி வேகமா கோழிகள் வளர்த்துடுச்சே இனிமே இதுகள சந்தையில வித்து வேற குஞ்சுகள் வாங்கி வளர்த்து பணக்காரனா ஆகிடனும்னு நினைச்சாரு
அப்பத்தான் ஒருநாள் கவனிச்சாறு ஒரு கோழியை காணோம் ,அந்த கூண்டுக்கு வெளியில ஒரு திருடனோட கால் தடம் மட்டும் இருந்துச்சு ,அடடா திருட்டுப்பய யாரோ இங்க வந்து திருடிட்டானேன்னு வருத்தப்பட்டார் ,மறுநாள் இன்னொரு கோழிய காணோம் ,உடனே முல்லா இன்னைக்கு ராத்திரி தூங்காம யாரு அந்த திருடன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சாரு
அதனால ராத்திரி ஆனதும் கழுதைக்கு பின்னாடி ஒளிஞ்சு கிட்டு திருடன் வரானானு பார்த்துகிட்டே இருந்தாரு ,அப்பத்தான் அடுத்த தெருவுல வாழ்ந்துகிட்டு இருக்குற ஒரு வியாபாரி மெல்லமா அங்க வந்தாரு ,தன்னோட கல்ல போட்டிருந்த ஷூவ கழட்டி வச்சிட்டு கோழிய திருட போனான்
அடடா இவன் பெரிய முரடன் ஆச்சே இப்ப இவன பிடிச்சா நம்மள தள்ளி விட்டுட்டு ஓடிருவானே யோசிச்சாறு முல்லா , உடனே முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு
உடனே முல்லா ஒரு கோழி றெக்கைய எடுத்து அந்த ஷூ குள்ள போட்டாரு ,போட்டுட்டு திரும்பவும் கழுதைக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுக்கிட்டாரு ,கோழிய திருடுன திருடன் மெதுவா தன்னோட சூவை கால்ல மாட்டிகிட்டு நடந்து போய்ட்டான்
மறுநாள் காலையில டீ கடையில அந்த திருடன் உக்காந்து டீ குடிச்சிகிட்டு இருக்குறத பார்த்தாரு முல்லா ,உடனே அங்க வந்த முல்லா டீ கடைக்காரர்கிட்ட நேத்து எங்க வீட்டுல ஒரு திருடன் எல்லா கோழியையும் திருடிட்டான்னு சொன்னாரு
இத கேட்ட உண்மையான திருடனுக்கு தூக்கி வாரி போட்டுச்சு ,அடடா நாம ஒரு கோழி தான திருடுனோம் இவரு என்ன எல்லா கோழியும் திருடு போய்டுச்சுன்னு சொல்றாருனு பார்த்தான் ,அப்பத்தான் அங்க ஊர் காவல் காரர் வந்தாரு
உடனே டீ கடை காரன் இங்க பாருங்க முல்லாவோட கோழி எல்லாம் காணாம போய்டுச்சு ,நீங்கதான் திருடனை கண்டுபிடிச்சி கொடுக்கணும்னு சொன்னாரு ,உடனே அந்த அதிகாரி முல்லா கிட்ட என்ன நடந்துச்சு ,திருடனை பார்த்தீங்களானு நிறய கேள்வி கேட்டாரு
அப்பத்தான் முல்லா சொன்னாரு நான் இங்க இருக்குற யாரோட ஷூவுல கோழி றெக்கை ஒட்டிக்கிட்டு இருக்கோ அவன்தான் திருடனு சொன்னாரு ,உடனே தன்னோட கால தூக்கி பார்த்தான் திருடன் ,இத கவனிச்சா காவல் அதிகாரி ,நீ எதுக்கு இப்ப கால பார்த்த நீ தான் திருடனானு கேட்டாரு
அதுக்கு திருடன் சொன்னான் இங்க பாருங்க என்னோட சூல அவரு சொல்லுற மாதிரி எந்த கோழி றெக்கையும் ஒட்டிக்கிட்டு இல்லைனு சொன்னான் ,அப்பத்தான் முல்லா சொன்னாரு சூவ கழட்டி உள்ள பாருன்னு சொன்னாரு ,
உடனே திருடன் தான் போட்டிருந்த சூவ கழட்டினான் உள்ள இருந்த கோழி ரெக்கை வெளிய வந்துச்சு ,அத பார்த்த காவல் அதிகாரி அந்த திருடனோட கழுத்தை பிடிச்சி இழுத்துகிட்டு போனாரு
