Site icon தமிழ் குழந்தை கதைகள்

ஆந்தையும் அன்னமும் – The Swan and Owl Kids Bedtime Story in Tamil

ஆந்தையும் அன்னமும் – The Swan and Owl Kids Bedtime Story in Tamil:-ஒரு காட்டு பகுதியில நிறய பறவை கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு,ஒருநாள் ஓடைக்கு பக்கத்துல ஒரு அன்ன பறவை கூட்டம் வந்துகிட்டு இருந்துச்சு ,அதுங்களோட அரசன் பின்னாடி எல்லா அன்ன பறவைகளும் வரிசையா வந்துகிட்டு இருந்துச்சுங்க

இத தூரத்துல இருந்து ஒரு ஆந்த பாத்துச்சு ,அடடா இந்த அன்ன பறவை அரசர் எவ்வளவு கம்பீரமா இருக்காரு ,நம்மளும் ஒரு நாள் நம்ம கூட்டத்துக்கு அரசரா மாறணும்னு நினைச்சது

ஒருநாள் அந்த அன்ன பறவையோட அரசர் தனிமையில இருந்துச்சு ,அப்ப அங்க வந்த ஆந்தை அவர்கூட பேசுச்சு

நல்லா பேசுன ஆந்தைக்கும் அன்ன பறவை அரசருக்கும் நட்பு உண்டாச்சு,

அன்ன பறவை தன்னோட கூட்டத்தை பத்தியும் தன்னோட ஆட்சிய பத்தியும் நிறைய பேசும் ,ஆனா ஆந்தை தன்னோட வாழ்க்க பத்தி எதுவும் சொல்லவே சொல்லாது

ஒருநாள் காட்டுக்கு பக்கத்துல ஒரு போர் நடந்துச்சு ,அந்த போர் படைகள் இருக்குற பாசறைக்கு பக்கத்துல பறந்து போச்சு ஆந்தை

அப்பத்தான் அந்த படை எங்கயோ கிளம்ப தயாராகிட்டு இருந்துச்சு ,அப்ப ஆந்த எதேச்சையா கூவுச்சு ,ஆந்தையோட சத்தத்தை கேட்ட படை வீரர்கள் ,அபச குணமா இருக்குனு படைய நாளைக்கு நகர்த்திக்கிடலாம்னு அங்கேயே தங்கிட்டாங்க

இத பாத்த ஆந்தை அடடா என்னோட குரலுக்கு இவ்வளவு மவுசானு நினைச்சிகிடுச்சு ,மறுநாளும் படை புறப்புடுற நேரத்துல கத்த ஆரம்பிச்சது ,அன்னைக்கும் படையை நகர்த்தாம விட்டுட்டாங்க

இத பாத்த ஆந்தைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,தன்னோட நண்பரான அன்ன ராஜாகிட்ட தம்பட்டம் அடிக்க ஒரு விஷயம் கிடைச்சுடுச்சுனு நினச்சு அவர்கிட்ட வந்துச்சு

அரசரே,நானும் இப்ப ஒரு படைக்கு அரசரா மாறிட்டேன் ,என்னால ஒரு படையவே கட்டுப்படுத்த முடியும்னு சொல்லுச்சு ,ஓ அப்படியா ஆந்தையாரேனு ஆச்சார்ய பட்டுச்சு அன்ன பறவை

மறுநாள் அன்ன பறவை அரசரை கூட்டிகிட்டு படை இருக்குற இடத்துக்கு வந்துச்சு ஆந்தை ,அங்க வந்த உடனே அன்ன பறவை அரசருக்கு தெரிஞ்சிடுச்சு ,ஆந்தை ஏதோ தப்பு செய்துன்னு

பாருங்க தயாரா இருக்குற இந்த படை நான் சொன்ன உடனே கலைஞ்சு போயிடும்னு சொல்லிட்டு ,படை இருக்குற பக்கம் பறக்க ஆரம்பிச்சது ஆந்தை ,இன்னைக்கும் ஆந்தை அபசகுனமா கத்திட கூடாதுனு காத்துகிட்டு இருந்த ஒரு போர் வீரன் ஒரு ஈட்டிய எடுத்து ஆந்தை மேல வீசினான்

அந்த ஆந்தை அங்கேயே அடிபட்டு செத்து போச்சு

Exit mobile version