Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Sun or the Moon? Mulla Story – முல்லா நிலவும் சூரியனும்

The Sun or the Moon? Mulla Story – முல்லா நிலவும் சூரியனும் :- முல்லா ஒருநாள் சந்தைக்கு பக்கத்துல நடந்து போய்கிட்டு இருந்தாரு அப்ப அங்க இருந்த டீ கடையில ஒரே சத்தமா இருந்துச்சு

என்னனு ஒரு நிமிஷம் யோசிச்ச முல்லா உள்ள போயி அவரு ஒரு டீ வாங்கிட்டு என்ன வாக்கு வாதம் நடக்குதுன்னு பார்த்தாரு ,அங்க இருந்த ஒருத்தர் சூரியன்தான் இந்த உலகத்துக்கு முக்கியம்னு சொன்னாரு ,ஆனா இன்னொருத்தர் சொன்னாரு இந்த உலகவத்துலயே சிறந்தது நிலாதான்னு சொன்னாரு

அட சூரியனுக்கும் நிலவுக்கும் சண்ட போல இருக்கு இன்னைக்கு நல்லா பொழுது போகும்னு அந்த சண்டையை வெடிக்க பார்க்க ஆரம்பிச்சாரு முல்லா ,ஆனா சண்டை கைகலப்பு வரைக்கும் போய்டுச்சு

அப்பத்தான் அந்த டீ கடைக்காரர் முல்லா நீங்க என்ன வெடிக்க பார்த்துகிட்டு இருக்கீங்க ,இவுங்க என்னோட கடையவே உடைச்சிடுவாங்க போல ,தயவு செஞ்சு இந்த சண்டைய முடிச்சி வைங்கன்னு சொன்னாரு

உடனே கடைக்கு நடுவுல வந்த முல்லா எல்லாம் இங்க பாருங்க நான் உங்களுக்கு ஒரு மேஜிக் செஞ்சு காட்ட போறேன்னு சொன்னாரு ,உடனே சண்டையை நிறுத்திட்டு இது என்ன இவ்வளவு பெரிய பிரச்னை போய்கிட்டு இருக்க இப்ப வந்து மேஜிக் செய்யுறேன்னு முல்லா உளருறாருனு எல்லாரும் பார்த்தாங்க

அப்பதான் சூரியனுக்காக சண்டை போட்டவங்க கிட்ட போயி உங்க கைகளை காமிங்கனு சொன்னாரு ,உடனே எல்லாரும் அவுங்களோட கைய முல்லாகிட்ட காமிச்சாங்க ,அத பார்த்த முல்லா நீங்க நிறைய பேரு விவசாய தொழில் செய்யுறீங்கன்னு சொன்னாரு ,உடனே எல்லாரும் ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்னு ஆச்சர்யப்பட்டு கேட்டாங்க

அடுத்ததா நிலாவுக்காக சண்டை போட்டவாங்க கிட்ட போயி அவுங்களோட கைகளையும் காட்ட சொல்லி பார்த்தாரு ,நீங்க எல்லாம் ராத்திரி வேலை செய்யுறவங்கனு சொன்னாரு ,அவுங்களும் ஆமாம்னு சொல்லி முல்லாவையே பார்த்தாங்க ,அப்பத்தான் எல்லாரும் கேட்டாங்க எங்களை பத்தி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் இது எந்த மாதிரி மேஜிக்னு கேட்டாங்க

அப்பத்தான் முல்லா சொன்னாரு மேஜிக்கும் கிடையாது ஒரு கழுதையும் கிடையாது ,ஒரு மனுஷன் தனக்கு உதவுரு பொருளுக்காகவும் தனக்கு உதவுரவங்களுக்காகவும் மட்டுமே சண்டை போடுவான்

நீங்க சூரியனுக்காக சண்டை போடுறீங்க அப்ப சூரியனை வச்சு செய்யிற விவசாயம்தான் செய்வீங்கன்னு யூகிச்சேன் ,நீங்க நிலாவுக்கு சண்டை போட்டீங்க நிலாவோட பயன் ராத்திரி வேலை செய்யுறவங்களுக்கு தான் அதனாலதான் நீங்க ராத்திரி வேலை செய்யுறத கண்டு பிடிக்க முடிஞ்சது

வேகமா வளர்ந்துக்கிட்டு வர்ற அறிவியல் முன்னேற்றத்துல சூரியன் இல்லாம வெறும் குடிசை போட்டு அதுக்குள்ளவே விவசாயம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க அப்ப நீங்க சூரியனுக்காக சண்டை போடுவீங்களானு கேட்டாரு

அதே நேரத்துல சின்ன சின்ன கிராமங்கள் கூட மின்சார விளக்கு வெச்சு ஜொலிக்க ஆரம்பிச்சிடுச்சு ,கொஞ்ச நாள்ல நிலாவ நம்பி தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லாம போகும் ,அப்ப நீங்க நிலாவுக்கு சண்டை போடுவீங்களானு கேட்டாரு

எல்லாரும் திகைச்சு போய் நின்னாங்க ,தங்களோட சுய லாபத்துக்காக ,ஒரு கூட்டத்தை சேர்த்துக்கிட்டு எடுத்தவங்களோட சண்டை போட்டது பெரிய தவறுன்னு நினைச்சு வறுத்த பட்ட ரெண்டு கூட்டமும் அமைதியா கலைஞ்சு போனாங்க

Exit mobile version