The Stranger in the Garden – ஆப்பிள் திருடன் :- ஒரு அழகிய கிராமத்துல ஒரு ஆப்பிள் விவசாயி இருந்தாரு
அவர் ஒரு பெரிய ஆப்பிள் தோட்டம் வச்சிருந்தாரு
அந்த தோட்டத்துல பெரிய பெரிய மரங்களும் பழச்செடிகளும் காய்கனி கொடிகளும் இருந்துச்சு
சோம்பேறித்தனம் இல்லாம உழைச்ச அந்த விவாசியினால அந்த தோட்டமே செழிப்பா இருந்துச்சு
ஒருநாள் தோட்டத்த பார்வையிட நடந்து போனாரு விவசாயி
அப்ப ஒரு மரத்துமேலே ஒருத்தர் இருந்து ஆப்பிள் பிடுங்குறத பாத்தாரு
நீங்க யாரு எதுக்கு என்னோட தோட்டத்துக்கு வந்து என் உழைப்புல விளைஞ்ச ஆப்பிள் பழங்கள எடுக்குறீங்கன்னு கேட்டாரு
இது கடவுளோட உலகம் , கடவுளோட தோட்டம் ,கடவுளோட மரம் , கடவுளோட பழம். உன் கிட்ட எதுக்கு நான் அனுமதி வாங்கணும்னு கேட்டாரு
அடுக்கு அந்த விவசாயி என்ன சொன்னாலும் திரும்பி கீழ இறங்க மறுத்தாரு அந்த புதியவர்
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா நிறைய ஆப்பிள் பழங்கல எடுத்துக்கிட்டு இறங்கிவந்து புதியவர புடிச்சு அந்த மரத்துலயே கட்டி வச்சாரு அந்த விவசாயி
ஒரு பெரிய மரத்து குச்சியை எடுத்துட்டு வந்து அடிக்க ஆரம்பிச்சாரு
எதுக்குப்பா இப்படி அடிக்குறன்னு கேட்டாரு
இரு கடவுளோட உலகம் ,கடவுளோட மரம் ,கடவுளோட குச்சி ,கடவுளோட மகன் நான் அடிக்கிறது அந்த கடவுளே அடிக்கிற மாதிரி அப்படினு சொன்னாரு
தன்னோட தவற உணர்ந்த அந்த புதியவர நீ செய்றதே தப்பு அதுக்கு கடவுள் பெயரை பயன்படுத்தாதன்னு சொல்லி போக விட்டாரு