Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Sick Body-Akbar Birbal Tamil Stories-பீர்பாலுக்கு காய்ச்சல்

The Sick Body-Akbar Birbal Tamil Stories-பீர்பாலுக்கு காய்ச்சல்:-ஒருமுறை பீர்பாலுக்கு காய்ச்சல் வந்துடுச்சு அதனால் அரண்மனைக்கு போகாம வீட்லயே இருந்தாரு

பீர்பால் இல்லாம அக்பருக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு ,அதனால் பீர்பாலோட வீட்டுக்கு போனாரு அக்பர்

அக்பர பார்த்த பீர்பாலுக்கு ரொம்ப சந்தோசம் ,அரசரோட ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாரு

அப்பத்தான் அக்பரோட மனசுக்குள்ள சின்ன சந்தேகம் வந்துச்சு ,இந்த காய்ச்சலால பீர்பாலோட உடம்பு மட்டும்தான் கேட்டு போயிருக்கா இல்ல அவரோட அறிவுமா,இதுதான் அந்த சந்தேகம்

உடனே அத தானே சோதிச்சு பார்க்க விரும்புனாரு

அக்பருக்கு குடிக்க மோர் கொண்டுவர போனாரு பீர்பால்

இதுதான் சந்தர்ப்பம்னு ஒரு பேப்பரை நாலா கிழிச்சி ,பீர்பாலோட படுக்கை கால் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொன்னு வச்சாரு

திரும்பி வந்த பீர்பால் அக்பருக்கு மோர் கொடுத்துட்டு ,காட்டில்ல உக்காந்தாரு

அப்ப பீர்பாலுக்கு ஒரு சின்ன வித்தியாசம் தெரிஞ்சது ,பீர்பால யோசிக்க விடாம அக்பர் ஏதேதோ பேசிக்கிட்டே இருந்தாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா பீர்பால் சொன்னாரு அரசே எனக்கு எதோ மாற்றம் தெரியுதுனு ,தொடர்ந்து சொன்னாரு என்னோட வீட்டு தரை ஒரு பேப்பர் உயரத்துக்கு பள்ளமா மாறிருக்கணும் ,இல்லைனா என்னோட படுக்கை பேப்பர் உயரத்துக்கு உயர்ந்திருக்கணும்னு சொன்னாரு

அப்பத்தான் அக்பர் சொன்னாரு உங்க உடம்ப வேணும்னா காய்ச்சல் பாதிக்கலாம் ஆனா உங்களோட நுண்ணிய அறிவு திறமைய எதுனாலயும் பாதிக்க முடியாதுனு சொன்னாரு

இத கேட்ட பீர்பால் புரியாம இருக்கவே,அக்பர் தன்னுடைய சோதனைய பத்தி சொன்னாரு ,கூடிய சீக்கிரம் உடல் தேர்ச்சியடைஞ்சு அரண்மனைக்கு வர வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிட்டாரு அக்பர்

Exit mobile version