The Seed of a Tree- Akbar Birbal Stories in Tamil- விதையின் உயிர்:-ஒருநாள் பீர்பால் மேல பொறாமை வச்சிருந்த சில மந்திரிங்க அக்பர் கிட்ட முறையிட்டாங்க ,அரசே பீர்பால் வந்ததுல இருந்து எங்க கருத்த நீங்க கேக்குறதே இல்ல
எங்கள அவமதிக்குறீங்கன்னு சொன்னாங்க ,இத கேட்ட அரசர் நான் ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு பதில் சொன்னா உங்க கருத்த ஏத்துக்கிறேன்னு சொன்னாரு
அவுங்களும் சரினு சொன்னாங்க ,உடனே அக்பர் கேட்டாரு மரத்துக்கு உயிர் தரது விதை விதைக்கு உயிர் தரது எதுன்னு கேட்டாரு
அதுக்கு எல்லா மந்திரிகளும் சொன்னாங்க விதைக்கு உயிர் தாரது இன்னொரு மரம்னு சொன்னாங்க
அப்பத்தான் பீர்பால் அரசவைக்கு வந்தாரு ,அவரு கிட்டயும் அதே கேள்வி கேட்டாரு ,அக்பர்
பீர்பால் உடனே அக்பருக்கு குடிக்க வச்சிருந்த தண்ணிய எடுத்து இதுதான் விதைக்கான உயிர்னு சொன்னாரு
பீர்பால் விவரமா சொல்லுங்கன்னு சொன்னாரு அக்பர் ,அதுக்கு பீர்பால் சொன்னாரு மண்ணுல விழுந்த விதை எல்லாம் முளைக்கிறது இல்ல
உரிய நேரத்துல அதுக்கு கிடைக்குற தண்ணி தான் அந்த விதையை உயிர்த்து எழ வைக்குதுனு சொன்னாரு
இத கேட்ட எல்லா மந்திரிகளும் பீர்பால் தங்கள விட அதிக திறமை உள்ளவர்னு ஒத்துக்கிட்டாங்க