The Reluctant dragon story – தயக்கமுடைய டிராகன் – குழந்தைகள் சிறுகதை :- முன்னொரு காலத்துல ஒரு ஆடு மெக்கிறவரு இருந்தாரு ,அவர் ஒருநாள் ஆடு மெச்சிட்டு இருக்கும்போது ,ஒரு பெரிய மிருகத்த பாத்தாரு ,உடனே வீட்டுக்கு ஓடிப்போன அவரு அங்க இருக்குற தன்னோட மனைவி கிட்டயும் மகன் கிட்டயும் நடந்தத சொன்னாரு
அவரு சொல்றத வச்சு அந்த பெரிய மிருகம் ட்ராக்கான தான் இருக்கும்னு முடிவு பண்ணின அந்த பையன் தன்னோட அப்பா ஆடு மேய்க்கிற இடத்துகிட்ட போனான்
அங்க அந்த ட்ராகன் இருக்குறத பாத்தான் ,உடனே அந்த ட்ராகன் கிட்ட பேசுனான் ,ட்ராகன் இனம் அழிஞ்சுடுச்சுனு நாங்க எல்லாரும் நினைச்சுகிட்டு இருந்தோம் நீங்க எப்படி இந்த வந்தீங்கன்னு கேட்டான்
அதுக்கு அந்த ட்ராகன் நீ சொல்றது சரிதான் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே எங்க இனம் அழிஞ்சாலும் ஒருசில கூட்டங்கள் மட்டும் வாழ்ந்தோம்
அப்ப சிலர் எங்க மேல போர் தொடுத்து நிறைய ட்ராகன கொன்னுட்டாங்க ,உயிரோட இருக்குறவங்க மட்டும் அங்க ஒன்னு இங்க ஒண்ணுனு வாழ்ந்துகிட்டு வர்றோம்னு சொல்லுச்சு
அதுகூட ரொம்ப நட்பான அந்த பையன் ஒருநாள் தன்னோட கிராமத்தினர் பேசுறத கேட்டான் ட்ராகன் வேட்டையன் இங்க வர்ராரு அவருகிட்ட சொல்லி இங்க தென்படுற ட்ராகன கொல்லணும்னு சொன்னாங்க
உடனே ட்ராகன் கிட்ட வந்த அந்த பையன் உன்ன கொள்ள ஆள் வருது நீ பயந்து ஓடாம சண்ட செய்யணும்னு சொன்னான் ,சற்று தயங்குன அந்த ட்ராகன் சண்ட போடா மாட்டேன்னு சொல்லுச்சு
இத உடனே அந்த வேட்டையன் கிட்ட போயி சொன்னான் அந்த பையன் ,இந்த மாதிரி நல்ல ட்ராகன நீங்க கொள்ளக்கூடாதுன்னு சொன்னான்
அவனையும் கூட்டிகிட்டு அங்க இருந்து போன அந்த வேட்டையன் தன்னோட பெருமைக்காக என்னோட சண்ட போடணும்னு கேட்டுக்கிட்டான் ,நீ சண்ட போட்டு என் கிட்ட தோத்து போறமாதிரி நடிச்சான்னா ,இந்த கிராமத்து ஆளுங்க உன்ன ஆபத்து இல்லாத மிருகம்னு நம்பிடுவாங்கன்னு சொன்னான்
உடனே எல்லார் முன்னிலையிலும் சண்டை நடந்துச்சு . பெரிய கயிற அந்த ட்ராகன் மேல பட்ட அந்த வேட்டையன் ஈட்டிய எடுத்து வீசினான் ,உடனே அந்த ட்ராகன் கீழ விழுந்துச்சு
பாத்திங்களா இது ஆபத்தான மிருகம் இல்ல இந்த மிருகம் உங்க வீட்டு விலங்கு மாதிரிதான்னு சொன்னான்
அன்னைல இருந்து அந்த ஊர் கரங்களுக்கு அந்த ட்ராகன்மேல இருந்த பயம் போயிடுச்சு ,எல்லார் கூடவும் சகஜமா பழக ஆரம்பிச்சது அந்த ட்ராகன்