The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும் :– ஒரு பழம்பெரும் ராஜாங்கத்துல ஒரு எலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த எலிக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை எப்ப பாத்தாலும் அடுத்தவங்கள மாதிரி நாம இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கும்
ஒருநாள் அந்த எலி ராஜாங்க சாலைல நடந்து போய்கிட்டு இருந்துச்சு
அப்ப அந்த ராஜாங்கத்தோட ராஜா நகர்வலம் வந்தாரு ,ஒரு பெரிய யானைல ஏறி அவரு தன்னோட பயணத்தை நடத்துனாரு
அத பார்த்த எலிக்கு ரொம்ப பொறாமையா போச்சு ,இத யானை மாதிரி உடம்பு தனக்கு இல்லையே ,அப்படி இருந்திருந்தா அந்த யானைக்கு கிடைக்குற மரியாதையை எல்லாம் எனக்கும் கிடைக்குமேனு வருத்தப்பட்டுச்சு
அப்பதான் ஒரு பூனை அந்த எலிய கவனிக்கிறத பார்த்துச்சு எலி
அடடா யானைய பார்த்துகிட்டு பூனையை கவனிக்காம விட்டுட்டமேன்னு நினச்சுகிட்டே அங்க இருந்த ஒரு பொந்துல போய் ஒளிஞ்சிகிடுச்சு
எலி ரொம்ப சின்னதா இருந்ததால பூனையாள அந்த எலிய கண்டுபிடிக்க முடியல
அப்பத்தான் அந்த எலிக்கு அறிவு வந்துச்சு ,அடடா சுலபமா தப்பிக்கிற அளவுக்கு நமக்கு சின்ன உடம்ப கடவுள் கொடுத்திருக்காரு
இத விட்டுட்டு யானை மாதிரி பெரிய உடம்னு வேணும்னு முட்டாள் தனமா வருத்தபட்டமேன்னு நினச்சுச்சு
அன்னைல இருந்து தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளிப்பட்டு நல்லபடியா தன்னோட வாழ்நாளை கழிச்சிச்சி எலி
குரல் நீதி :
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது
நீதி :பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டாம். அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்