Site icon தமிழ் குழந்தை கதைகள்

The princess and the pea story in Tamil | இளவரசியும் பட்டாணியும்

The-princess-and-the-pea-story-in-Tamil

The princess and the pea story in Tamil | இளவரசியும் பட்டாணியும்:- ஒரு ஊருல ஒரு இளவரன் இருந்தான் அவனுக்கு கல்யாண வயசு வந்ததால பெண் தேட ஆரம்பிச்சாங்க

எல்லா ஊருக்கு போன அந்த இளவரசன் தனக்கான இளவரசி கிடைக்காம ரொம்ப வருத்தப்பட்டான்

ஒருநாள் அரசரும் அரசுயும் இளவரசரும் அரண்மனைல சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க

அப்ப ஒரு காவலாளி வந்து அரசியே ஒரு பெண் ஒருத்தி நம்ம அரண்மனைக்கு உதவி கேட்டு வந்திருக்கானு சொன்னான்

உடனே வாசலுக்கு வந்த அரசி ஒரு அழகிய பெண் அங்க நிக்கிறத பாத்தாங்க

அவளோட அழக பாத்த அரசிக்கு இவள் சாதார பெண் போல இல்லையே இவ எதோ ஒரு நாட்டோட இளவரசியா இருக்கணும்னு சந்தேகப்பட்டாங்க

அந்த அழகான பெண் சொன்ன என்னோட வந்தவர்களும் நானும் மழைல நனஞ்சுட்டோம் ,என்னோட வந்தவர்கள பாதுகாப்பான இடத்துல தங்க வச்சுட்டேன் ,எனக்கு மட்டும் இங்க படுத்துக்க இடம் கொடுங்கன்னு கேட்டா

உடனே உள்ள கூப்பிட்ட அரசி தங்களோட சேந்து அவள சாப்பிட வச்சாங்க

புதிய ஆடைகளை கொடுத்து போட்டுக்க சொன்னாங்க ,அப்ப அரசர் இவள பாத்தா பணக்கார பெண் மாதிரி இறுக்கலேன்னு கேட்டாரு

அதுக்கு அரசி அம்மாம் அரசே தன்னோட வந்தவர்கள பாதுகாப்பை தங்க வச்சுட்டு தனக்கு உதவி கேக்குற நல்ல குணமும் ,அவள் நடத்துகிற விதமும் ,அவள் உணவு சாப்பிட்ட பொறுமையும் அவள் ஒரு இளவரசிதான்ட்ரத உறுதி படுத்தது

அதுக்கு அந்த அரசர் சொன்னாரு

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

அப்படிங்கிற திருக்குறளுக்கு ஏத்த மாதிரி யாரையும் சோதிக்கமா நம்பக்கூடாது அப்படினு சொன்னாரு

உடனே அரசி படுக்கை அறைக்கு போய் ஒரு பட்டாணியை கட்டில்ல வச்சாங்க

அதுக்கு மேல நிறைய பட்டு மெத்தைகளையும் போட்டாங்க,

பெண்ணே நீ இந்த பட்டு மெத்தை மேல படுத்துக்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க

மறுநாள் காலைல அந்த பெண்கிட்ட நீ நல்லா தூங்குனியான்னு கேட்டாங்க

அதுக்கு அந்த பெண் சொன்னா எனக்கு சரியாவே தூக்கம் வரல ,என்னோட படுக்கைல ஏதோ துருத்திக்கிட்டே இருந்துச்சுன்னு சொன்னாங்க

அப்பத்தான் அரசிக்கு புரிஞ்சது இவள் நிஜமாவே ஒரு இளவரசிதான் ,பிறந்துள்ள இருந்து சுகமாவே வாழ்த்ததாலதான் சிறு பட்டாணியோட உறுத்தல் கூட இவளுக்கு அசௌகரியமா இருக்குன்னு முடிவு பண்ணிட்டு

அவ கிட்டயே உன்னோட அரண்மனை எங்க இருக்குன்னு கேட்டாங்க ,அதுக்கு அந்த பெண் சொன்னால் எப்படி என்ன இளவரிசினு கண்டுபிடிசீங்கன்னு கேட்டா

அதுக்கு அந்த அரசி தன்னோட சோதனைய பத்தி சொன்னாங்க ,உடனே அவ தன்னோட ராஜ்யத்த பத்தியும் தன்னோட அப்பா ஒரு பெரிய ராஜான்றதும் சொன்னா

அவ கூடவே அவுங்க ராஜ்யத்துக்கு போன அரசரும் அரசியும் தங்களோட இளவரசருக்கு அவள கல்யாணம் செஞ்சு வச்சாங்க

Exit mobile version