The Pandit Is Defeated-Akbar Birbal Story- பண்டிதரை தோற்கடித்த பீர்பால்:-ஒருநாள் அரசவைக்கு ஒரு பண்டிதர் வந்தாரு ,அரசே நான் நிறய நாடுகளுக்கு போய் என்னோட அறிவையும் திறமையையும் நிரூபிச்சு இந்த தங்க நாணயங்களை வாங்கிட்டு வந்திருக்கேன்
எங்கிட்ட உங்க அரசவையில் இருக்க யாராவது போட்டி போட சொல்லுங்க ,நான் தோத்துட்டா இந்த தங்க நாணயங்கள் எல்லாம் உங்ககிட்ட கொடுத்துடுறேன் ,ஆனா நான் ஜெயிச்சா எனக்கு நீங்க தங்க நாணயம் கொடுங்கன்னு கேட்டாரு
அக்பர் பீர்பால் கிட்ட போட்டிக்கு தயாராக சொன்னாரு
உடனே அந்த பண்டிதர் கேட்டாரு ,ஒருத்தரோட புத்தி அவரோட தலைக்குள்ள இருக்கும் ,சிலநேரம் அதுஇல்லாம போயிடுது ஏன்னு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு படிச்சி அறிவ வளத்துக்கிட்ட வங்க கூட சில மூட நம்பிக்கைய பின்பற்றுறாங்க அப்ப அவுங்க மூள தலைல இல்லாம போய்டுதுனு சொன்னாரு
அடுத்ததா ஒருவரோடு தன்மானம் ஒருத்தரோட கண்ணுல இருக்கு ,சிலநேரம் அதுஇல்லாம போயிடுது ஏன்னு கேட்டாரு
ஒருத்தருக்கு வெட்கக்கேடான செயல்களை செய்ய துணிவு வரும் போது ,அவரோட தன்மானம் அவரோட பார்வையை விட்டு போயிடுதுனு சொன்னாரு
மூணாவதா ஒருத்தரோட நெஞ்சுல குடியிருக்கிற தைரியம் ,எப்ப வெளியில போய்டுதுனு கேட்டாரு
அதுக்கு பீர்பால் ஒரு விஷயத்துக்கு ஒருத்தர் பயப்பட ஆரம்பிக்கும் போது அவரோட துணிவு ,தைரியம் எல்லாம் அவரோட நெஞ்ச விட்டு போய்டுதுனு சொன்னாரு
கடைசியா ஒரு கேள்வி கேட்டாரு அந்த பண்டிதர் ,ஒருத்தரோட வலிமை அவரோட உடல்ல இருந்து எப்ப வெளியில போகுதுனு கேட்டார்
ஒருவருக்கு வசாயன பிறகு வர்ற வலிமை குறைவு ,தேவையற்ற தவறான பழக்கங்களுக்கு அடிமையாகுறப்ப இளம் வயதிலேயே வருதுன்னு சொன்னாரு
எல்லா கேள்விகளுக்கும் பீர்பால் தெளிவா பதில் சொன்னதால ,தன்னோட தோல்வியா ஏத்துக்கிட்டு தான் கொண்டுவந்த தங்கம் எல்லாத்தையும் பீர்பால் கிட்ட கொடுத்துட்டு போய்ட்டாரு அந்த பண்டிதர்